Tuesday, March 12, 2013

"நான் அம்மாவாக போறேன்"

காலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்றுகொண்டிருந்தோம். (இப்போல்லாம் அப்டிதான் ஆகிடுச்சு, பப்புவுக்கு முன்னாடி நான் ரெடியாகி பப்புவோட லஞ்ச் பேகும் கையுமா முன்னாடி நிக்கிறது நாந்தான்!!!)


பின்னால் அமர்ந்துக்கொண்டிருந்த பப்புவிடமிருந்து ஒரு குரல்.

"எனக்கு அம்மா வேணும்"

(அவ்வ்வ்...சிலநாட்கள் முன்பு இந்த தேவதைகள் கதைகளை கண்ட/படித்த பாதிப்பில், "நீ என் ரியல் அம்மா இல்ல, நிஜ அம்மாகிட்டே கொண்டு போய்விடு" என்று சீரியசாக சொல்ல ஆரம்பித்து, பின்னர் கிண்டலுக்காக சொல்லுவாள். கொஞ்சநாட்களாக அதுவும் மறந்துபோயிருந்தது. 'சரி, அதுமாதிரிதான் போல,  ஆனால் இப்போது என்ன?  அவளை எதுவும் திட்டவோ கண்டிக்கவோ இல்லையே' என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே, திரும்பவும்,"

"ஆச்சி, எனக்கு அம்மா வேணும்"

"சரி, போய் தேடி கண்டுபிடிக்கலாம்" என்றேன்.

"இல்ல, எனக்கு ஜெயலலிதா அம்மா வேணும்"

(அவ்வ்வ்வ்வ்.....என்னா வில்லத்தனம்!!)

"சரி, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போலாம். "

"ஆச்சி, நான் அம்மாவாக போறேன்!!"

(ஆவ்வ்வ்வ்வ்...இதுக்கெல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணனும் யூசர் மானுவல் இருந்தா பரவால்லையே என்று நினைக்குபோதே)

"நான் ஜெயலலிதா அம்மாவாக போறேன். நானும் கலெக்ஷ‌ன்ல்ல நின்னு.."

ஏதாவது தவறாக சொல்லிவிட்டால் குரல் மெலிதாக ஆகிவிடும்.

"அது கலெக்சன் இல்ல....எலக்ஷன்"

"ஹேய்ய்ய்...நான் எலக்சன்னுதான் சொன்னேன். உன் காதுதான்...டப்பி காது. நீ காதுல பட்ஸ் விட்டு நோண்டறே இல்ல,அதான் உனக்கு கேக்கலை"

(அவ்வ்வ்வ் எனக்கு தேவைதான்!!)

"நான் எலக்ஷன்லே நின்னு சீஃப் மினிஸ்டராக போறேன்.அப்ப நாந்தானே அம்மா"

('அப்பா,என் வயித்தில பாலை வார்த்தே' என்று என் டயலாக் இருக்க வேண்டுமோ?!!) :‍)))

பப்புவுக்கு பெரிதாக ஆகி என்னவாக ஆவோம் என்பது ஒரு சிக்கலான பிரச்சினை. ஏதாவது ஒன்றாகத்தான் ஆக முடியும் என்பதையும் அவளால் ஒப்புக்கொள்ளவே முடியாது. 'ஒரே நேரத்துல எப்படி எல்லாமாக ஆவது' என்பதுதான் அவளது ஒரே கவலை அல்லது சவால். அவளுக்கு "ஆன்ட்டி"யாக மாறி பசங்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். பின்னர், டெய்லராக ஆக வேண்டும். அதே சமயம், பெட்ரோலும் போட வேண்டும்('அவங்க கைலதானே காசு நிறைய இருக்கு' எனபது அதற்கான காரணம். ஏன்னா,பெட்ரோல் போட்டதும் அவர்கள் கையில்தானே எல்லாரும் காசு கொடுக்கிறோம்...ஹிஹி)அதே சமயம், ஸ்பேஸ் சயிண்டிஸ்ட் ஆகி ராக்கெட்டில் செல்ல வேண்டும்.புளூட்டோவையும் நெப்டியூனையும் போய் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அப்புறம், சுனாமி வராமல் இருக்க கண்டுபிடிக்க வேண்டும்.அப்புறம், 'உன்னை மாதிரி சாப்ஃட் எஞ்சினியர் ஆகணும்". இந்த நெவர் என்டிங் வாலில் கடைசியாக சேர்ந்திருப்பது,  'ஜெயலலிதா அம்மாவாக வேண்டும்....'

3 comments:

அமைதிச்சாரல் said...

தலைப்பை மட்டும் பார்த்துட்டு வாழ்த்தலாம்ன்னு ஆசையோட வந்தேன்..
போயிட்டுப்போகுது..


பப்பும்மா வாழ்க.. இப்பவே கோஷம் போட்டிருக்கேன். பின்னாடி ஏதாச்சும் வாரிய அல்லது வாராத பதவி கிடைக்க வாய்ப்பிருக்கா :-)))))))))

கலை said...

//ஸ்பேஸ் சயிண்டிஸ்ட் ஆகி ராக்கெட்டில் செல்ல வேண்டும்.புளூட்டோவையும் நெப்டியூனையும் போய் ஆராய்ச்சி செய்ய வேண்டும். //
உங்க மகளுக்கும் இந்த ஆசை உண்டா? இந்த ஆசை தொடர்ந்தால் என் மகளுடன் சேர்த்து விடலாம் :). முன்பெல்லாம், புளூட்டோ கிரகங்களில் ஒன்றல்ல என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொன்னதில் பெரிய கவலையில் இருந்த மகள், எப்படியும் அதனை மீண்டும் கிரகம்தான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள் :).
இப்போ வளர்ந்து விட்டதனால், அதனைச் சொல்வதில்லை. ஆனால் வானிலை ஆராய்ச்சியில்தான் ஆர்வமாக இருக்கின்றாள். அண்மையில் அவளை NASA's Kennedy Space Center க்கு அழைத்துச் சென்றோம். அதுபற்றியெல்லாம் எனது வலைப்பதிவில் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கென்றேன். நேரம்தான் கிடைக்கவில்லை.

ராமலக்ஷ்மி said...

நல்ல ஆசை:)!