Thursday, March 21, 2013

பட்டர்பிளையில் சூரியனை பார்க்க ஒரு பயணம்

" ஒரு தேவதை வந்தது.அந்த தேவதைக்கு வயசாயிடுச்சுன்னு எனக்கு எல்லா மேஜிக்கும் கத்துக்குடுக்கறேன்னு கூப்பிட்டு போச்சு.ஒரு பெரிய ஜய்ஜாண்டிக் பட்டர்பிளை. அதுமேல நானும் தேவதையும் உட்கார்ந்துக்கிட்டோம்.  சூரியனுக்கு போலாம்னு சொன்னேன். பறந்து போய்க்கிட்டே இருக்கோம். தேவதைக்கு பசி வந்துடுச்சு. என்கிட்டேயும் எதுவும் இல்ல. அந்த தேவதை ஐஸ் மட்டும்தான் சாப்பிடும். அதுதான் அதோட ஃபுட். எங்க போறது ஐஸ்க்கு? பார்த்தா பட்டர்பிளை, ஒரு ஃபிரிட்ஜ் எடுத்துக்கிட்டு வந்திருக்கு. அதுல பார்த்தா ஐஸ் ட்ரேதான் இருக்கு. ஐஸ் க்யூப்ஸ் இல்ல. ஒரு பாட்டில்ல, ஐஸ் வாட்டர் இருக்கு. அதை தேவதை கையில ஊத்தினா அது ஐசா மாறிடுச்சு. தேவதை சாப்பிட்டுட்டு தூங்கிடுச்சு. நானும் பட்டர்பிளை மேல படுத்துக்கிட்டேன். அப்புறம் பார்த்தா சூரியன்னுக்குள்ள போயிட்டோம். அங்க ஒரே குளிர். ரொம்ப ஐஸா இருக்கு. பார்த்தா அது நெப்ட்யூன்!! நெப்ட்யூன்லதானே ஒரே ஐஸா இருக்கும்?! நெப்ட்யுனை சுத்தி பத்து நிலா....ஒன்னு க்ரீன், ஒன்னு பர்ப்பிள். ரெண்டு நிலாதான் நான் பார்த்தேன். 'வேணாம், நீ எர்த்துக்கு போ'னு பட்டர்பிளைக்கிட்டே சொன்னா அது பக்கத்துல இருக்க ஜூபிடருக்கு போயிடுச்சு."

அதுக்குள்ள ஸ்கூல் வந்துடுச்சி...ஈவினிங் சொல்றேன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போய்ட்டா பப்பு.


காலை எழுந்ததிலிருந்து 'கனவை சொல்கிறேன் கனவை சொல்கிறேன்' என்று ஒரே டயலாக். அதோடு 'நீ கேட்டா, உனக்கே ஆசையா இருக்கும்' என்று வேறு மார்க்கெட்டிங். 'ஸ்கூல் போறப்போ வழியில சொல்லு, இப்ப கிளம்பு" என்று அவளை கிளப்பியதில், இவ்வளவுதான் கேட்க முடிந்தது. மாலையில், மறந்திருப்பாள்.

சூரியனுக்கு உள்ளே போய் பார்க்க வேண்டும் என்றும், அதற்கேற்றாற்போல எரிந்துபோகாத உடையை சயிண்டிஸ்ட் ஆகி கண்டுபிடிக்கப்போவதாகவும் அவ்வப்போது சொல்லுவாள்.

அதோடு, சமீபமாக அவளது கனவில் அடிக்கடி ஒரு தேவதை வந்து உனக்கு 3 வரங்கள் தருகிறேன் என்று சொல்லும். அந்த தேவதை நேரில் வந்தால் கேட்பதற்கு, 3 விஷஸ் வைத்திருக்கிறாள்.

1. ஒரு மேஜிக் ஸ்டிக்
2.  எங்க பெரிய ஆயா திரும்ப உயிரோட வந்துவிட வேண்டும்.
3.எங்க ஃபேமிலில யாரும் இறந்தே போகக்கூடாது..எல்லோரும் அன்கவுண்டபிள் இயர்ஸ் வாழணும்!! 


அடிக்கடி இந்த விஷசை என்னிடம் சொல்லுவாள்.
இவை எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய கனவாக மலர்ந்துவிட்டதோ என்னவோ?!

3 comments:

Agila said...

//
காலை எழுந்ததிலிருந்து 'கனவை சொல்கிறேன் கனவை சொல்கிறேன்' என்று ஒரே டயலாக். அதோடு 'நீ கேட்டா, உனக்கே ஆசையா இருக்கும்' என்று வேறு மார்க்கெட்டிங்.//

:))))))))
//2. எங்க பெரிய ஆயா திரும்ப உயிரோட வந்துவிட வேண்டும்.
3.எங்க ஃபேமிலில யாரும் இறந்தே போகக்கூடாது..எல்லோரும் அன்கவுண்டபிள் இயர்ஸ் வாழணும்!!
//

Poor child.. Missing her grandma terribly.. :((

கோமதி அரசு said...

பப்புவின் மூன்று வரங்கள் மனதை நெகிழ வைத்தன. பெரிய ஆயாவை தேடும் உள்ளம் சிலிர்க்க வைத்தது.
நானும் பப்புவுடன் சூரியனை பார்க்க பயணம் வந்தேன்.

மணிமேகலா said...

என்ன ஒரு அழகுலகு!

குழந்தைகளது!!