Thursday, September 15, 2011

பப்பு சொன்ன கதைகள் - II

ஒருநாள் ஒரு மயில் குளத்துக்கு போச்சு. அங்க ஒரு கொக்கு இருந்துச்சு. அதுக்கிட்டே போய் ”என் தோகையை பாரு, என்னை பாரு, நான் எவ்ளோ அழகா கலர்ஃபுல்லா இருக்கேன். உன்னால உயரமாவே பறக்க முடியாதுன்னு” சொல்லுச்சாம். அப்போ கொக்கு வானத்தை நோக்கி பறந்துச்சாம். பறந்து பறந்து மேகத்தை தாண்டி போய்டுச்சாம். கடைசில பார்த்தா சூரியன்கிட்டேயே போய்டுச்சாம். திரும்பி வந்துச்சாம் பாரு, அது பீக்-ல சூரியன். அது சூரியனையே பீக்-ல எடுத்துட்டு வந்துடுச்சு.

மயிலுக்கு கொஞ்சம் உயரத்துக்கு மேல பறக்கவே முடியலை.

இதுக்குதான் நான் அழகா இருக்கேன், நான் கலர்கலரா இருக்கேன்னு சொல்லக்கூடாது.


**********************************

ஒரு ராணி இருந்தாங்க. அந்த ராணி ஒருநாள் அனிமல்ஸ் எல்லாத்தையும் வர சொன்னாங்க.

“வாங்க, இன்னைக்கு நான் உங்களுக்கு ப்ரைஸ் தரப்போறேன்”ன்னு சொன்னாங்க. எல்லா அனிமல்ஸும் குட்டிகளையும் தூக்கிட்டு வந்துச்சுங்க. ஒரு குரங்கும் அதோட குட்டியை தூக்கிட்டு வந்துச்சு.

குரங்கு குட்டியை பார்த்துட்டு ராணி “அய்யே, இது அசிங்கமா இருக்கு, உனக்கு பிரைஸ் கிடையாது”ன்னு சொல்லிட்டாங்க.

குரங்கு, குட்டிக்கிட்டே சொல்லுச்சு“ அது வேணாம், பரவால்ல,நீ எனக்கே பிரைசா இருந்துக்கோ” .

இதுக்குதான் யாரையும் அசிங்கமா இருக்கேன்னு சொல்லக்கூடாது.

*******************************
த்ரிஷா காட்டுக்கு போன கதை கூட சொல்லியிருந்தாங்க மேடம். தூக்கக்கலக்கத்துல நாந்தான் மறந்துட்டேன். :-))

7 comments:

ராமலக்ஷ்மி said...

//அது பீக்-ல சூரியன்//

Great Pappu:)!

இரசிகை said...

maranthathaiyum yosichu sollunga mam.....plz.

kathai yennavaa irunthaalum,niyathikal yellaarukkumaanathaa irukku.

pappukku vanakkam sollalaam.:)

சாந்தி மாரியப்பன் said...

//குரங்கு, குட்டிக்கிட்டே சொல்லுச்சு“ அது வேணாம், பரவால்ல,நீ எனக்கே பிரைசா இருந்துக்கோ”//

அழகு..

த்ரிஷா காட்டுக்குப் போனாங்களா!!.. தூங்காம கதை கேட்டு எங்களுக்கு சொல்லுங்க. நாங்க தூங்கணுமில்லே :-)))))

Unknown said...

Ayyo Ayyo

Unknown said...

Kakka, Kakka Kadai Sollunga

thenmozhi said...

அருமை அருமை..நீங்கள் தூங்காமல் இருந்திருந்தால் எங்களுக்கு இன்னொரு கதை கிடைத்திருக்கும்...

thenmozhi said...

அருமை அருமை..நீங்கள் தூங்காமல் இருந்திருந்தால் எங்களுக்கு இன்னொரு கதை கிடைத்திருக்கும்...