Wednesday, April 20, 2011

பதிவர்கள் - வாசகர்கள் கவனத்திற்கு

கடந்த 2009ஆம் ஆண்டு சிங்கைநாதன்(செந்தில்நாதன்) அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக பதிவர்களிடமும் வாசகர்களிடமும் உதவி கேட்டு
வங்கி விபரங்களோடு பதிவிட்டது நினைவு இருக்கும்.

பதிவு : சிங்கை நாதனுக்கு உதவுங்கள்!!

இந்தப்பதிவுக்கு வந்த கேவிஆரின் பின்னூட்டத்தையும் மற்றொரு பதிவாக வெளியிட்டிருந்தேன் - பலருக்கு செய்தி சென்றடையும் பொருட்டு.
அதில், முக்கியமாக சொல்லியிருந்தது, ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் பணத்தை வசூலித்து மொத்தமாக அனுப்பலாமென்றும் அவர்களது விபரங்களையும் கொடுத்திருந்தார்.

இந்தியாவில் பதிவர் நர்சிமின் வங்கிக்கணக்குக்கு அனுப்புமாறு சொல்லப்பட்டிருந்தது. அப்படி இந்தியாவிலிருந்து வசூலித்த பணம் சிங்கைநாதன் அவர்களுக்குச் சென்றடைய கிட்டதட்ட ஒரு வருட காலம்
எடுத்திருக்கிறது. அந்த செய்தியும் சமீபத்தில்தான் தெரிய வந்துள்ளது. அதோடு அவர் வங்கி ஸ்டேட்மெண்டையும் சரியாக காண்பிக்கவில்லை என்றும் தெரிகிறது. அதோடு, பதிவர்கள் வெண்பூ மற்றும் சுரேகா அவர்களின் சமீபத்திய இடுகைகளும் நினைவில் இருக்கும். அதைத் தொடர்ந்து பதிவர் நர்சிம் ஒரு இடுகையை வெளியிட்டிருந்தார், ஆனால், சில பதிவர்கள் செலுத்திய தொகை அந்த ஸ்டேட்மெண்ட்டில் இல்லாதது, ட்ரான்சாக்‌ஷன் ஐடிகளில் குழப்பம் முதலிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிங்கைநாதன் அவர்களுக்கு அனுப்பிய பணம் என்று அவர் கூறுவதில் சந்தேகம் இருப்பதால் பதிவர் நர்சிமிருந்து சரியான கணக்கை பெறுவதற்கும் அதைச் சரிப்பார்ப்பதற்கும் பதிவர்கள் முயற்சி எடுத்துவருகின்றனர், ஒரு உயிரைக் காக்க விரைந்து பணம் அனுப்பியும் எவ்வளவோ சொந்த சிக்கல்களுக்கு மத்தியிலும் நாம் அனுப்பிய பணம் சரியான நேரத்தில் சரியான நபருக்குச் சென்று சேராதது அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் பல செய்திகள் கூகுள் பஸ்ஸில்தான் பகிரப்பட்டிருக்கின்றன. பதிவுகளில் இல்லை.

பதிவரின் மருத்துவ உதவிக்காக நர்சிம்மிடம் பணம் கொடுத்தவர்கள் என்று பதிவர் சந்தோஷ் ஒரு இடுகையை வெளியிட்டிருக்கிறார்.
நர்சிமின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பியவர்கள் மேலே குறிப்பிட்ட பதிவர் சந்தோஷின் இடுகையில் அவர் கோரியிருக்கும் தகவல்களை பின்னூட்டமாக இடவும்.

பெயர் (அதை வெளியிட வேண்டாம் என்றால் கண்டிப்பாக வெளியிடப்படாது)
மின்னஞ்சல் முகவரி
தொலைபேசி எண் (அளிக்க விருப்பம் இருந்தால்)
நர்சிமிடம் அவர்கள் அளித்த தொகை
எந்த வழியாக பணம் குடுத்திங்க அப்படிங்கிற விவரம் (Cash/Cheque/Account Transfer)


பணம் அனுப்பியவர்கள் தொந்திரவாக நினைக்காமல் இதைச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இப்படி உதவிக்காக அனுப்பிய பணத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கு மிகுந்த கண்டனத்துக்குரியது. அதே சமயத்தில், பதிவுலகின் மீதான நம்பிக்கை குலைந்ததற்கு ஒரு பதிவராக வெட்கப்படுகிறேன்.

நீங்கள் அனுப்பும் தகவல்கள், எவ்வளவு தொகை ஊழலாக்கப்பட்டது என்பதை அறியும் முயற்சிதான். தயவுசெய்து தகவல்களை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இதனை பலருக்கும் சென்று சேரும்பொருட்டு
மற்ற பதிவுலக நண்பர்களும் இவ்விடுகையை வெளியிடலாம் என்றும் கருதுகிறேன்.

4 comments:

செந்தழல் ரவி said...

இதனை எந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும் ?

சந்தனமுல்லை said...

@செந்தழல் ரவி,

சந்தோஷ் தனது இடுகையில் அவரது பின்னூட்டத்தில் குறிப்பிடுமாறு சொல்லியிருக்கிறார். நானும் இடுகையில் /நர்சிமின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பியவர்கள் மேலே குறிப்பிட்ட பதிவர் சந்தோஷின் இடுகையில் அவர் கோரியிருக்கும் தகவல்களை பின்னூட்டமாக இடவும்./ குறிப்பிட்டிருக்கிறேன். எனவே சந்தோஷின் இடுகையில் பின்னூட்டமிட்டத்தில் தெரிவித்தால் போதும்.

சி.பி.செந்தில்குமார் said...

அடப்பாவிகளா... இதுலயும் ஊழலா? ஆனா நீங்க எடுத்திருப்பது நல்ல முயற்சி

புலவன் புலிகேசி said...

இங்கும் ஊழல்....நர்சிம் வாழ்க.