Monday, March 05, 2012

புரட்சிக்குப் பிறகு கோல்ட் போட்டுக்கலாமா?

வீட்டுக்கு அருகே சாலையில் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தார்கள். காலையில் அந்த வழியாகத்தான் செல்வது வழக்கம். பள்ளமாக இருக்கிறதென்று மாற்று வழியில் சென்றோம். அப்போது நடந்த உரையாடல்:

“ஆச்சி, கோல்ட் எடுக்கப்போறாங்களா?” - பப்பு

“ம்ம்..?”

“பள்ளம் தோண்டி கோல்ட் எடுக்கப்போறாங்களா?” - பப்பு

“இல்ல, சாக்கடை போடப்போறாங்க..”

“புரட்சி நடந்ததும் எல்லாரும் கோல்ட் போட்டுக்கலாமா?” - பப்பு

”ம்ம்..இப்போ கோல்ட் வெலை அதிகமா இருக்கு இல்ல, யாருக்கிட்ட காசு அதிகமா இருக்கோ அவங்களாலதான் இப்போ கோல்ட் வாங்க முடியுது..புரட்சி நடந்ததும் வெலை எல்லாம் இப்டி அதிகமா ஆகாது. எல்லாரலயும் வாங்க முடியும். ஆனா, புரட்சிக்கு அப்புறம் மக்கள் எல்லாம் கோல்ட் எடுக்கிறது எவ்ளோ கஷ்டம்னு புரிஞ்சுப்பாங்க..கோல்ட் எடுக்கறவங்க உயிருக்கு பயப்படாம பள்ளத்துக்குள்ள போறாங்க, மண்ணுல்லாம் மேல விழுந்து, ஆக்சிஜன்ல்லாம் இல்லாம இவ்ளோ கஷ்டப்பட்டு எடுக்கிற கோல்ட் எங்களுக்கு வேணாம்னு சொல்லிடுவாங்க. பிளாஸ்டிக் ஆபரணமே போதும்னு நினைப்பாங்க” - நானேதான்

கொஞ்ச நேரம் அமைதி.

“ஆச்சி, சில்வர் கோல்டுக்கு கீழ கிடைக்கும் இல்ல?” - பப்பு

“ரெண்டுமே மண்ணுக்குள்ளதான் கிடைக்கும், ஆனா அது கொஞ்சம் ஈசியா கிடைக்கும். ஆனா எல்லாருக்கும் கோல்ட்தான ரொம்ப பிடிக்குது” - நான்

“ஆச்சி, இரும்பை ஒடைக்கவே முடியாது இல்ல?” (நேத்து படிச்ச ’சீன சகோதரர்கள்’ கதை எஃபெக்ட்னு நினைக்கிறேன்) - பப்பு

“ம்ம்...பிளாஸ்டிக்கும் இரும்புக்கும் என்ன வித்தியாசம்” - நான்

“பிளாஸ்டிக் வளைக்க முடியும், இரும்பை வளைக்க முடியாது” - பப்பு

“கரெக்ட்....நீ கோல்ட் போட்டுப்பியா?” - நான்

“நான் ஏன் போட்டுக்கணும்? கஷ்டப்பட்டு எடுக்கிற கோல்ட்-ட நான் ஏன் போட்டுக்கணும்? சொல்லு, ஆச்சி” - பப்பு

“குட்!! ” - நான்

ஆச்சி, உழைக்கும் மக்கள், ஏழை மக்கள்தான் கோல்ட் எடுக்கறாங்க, இல்ல?” - பப்பு

“ம்ம்..ஆமா” #அதுக்குள்ள_ஸ்கூல்_வந்துடுச்சு

1 comment:

மணிமேகலா said...

முல்லை,

உங்கள் பதிவுகள் எல்லாமே மிக மிக அருமையாக இருக்கின்றன. உங்கள் சிந்தனைகளும் குழந்தைகளின் விரியும் உலகின் அறிமுகமும் படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை.வாசித்து வாசித்து இன்புறத் தக்கவை.

இரண்டு நாளாய் தொடர்ந்து வந்து படித்தேன்.இனிஸியல் பற்றிய பதிவு சிந்தனைக்கு நல்ல விருந்து.உடனே எனக்கு நினைவுக்கு வந்தது திருமணத்தின் போது பெண்ணுக்கு மட்டும் தாலி கட்டுவது.திருமணமான ஆணுக்கு திருமணமானவன் என்று சொல்ல - பார்க்கும் படியாக என்ன அத்தாட்சி இருக்கிறது? இல்லையா தோழி?

சிந்தனைகளுக்கு வாழ்வில் அர்த்தம் கொடுத்து வாழ்பவர்கள் குறைவு. அது மிக சவால் நிரம்பியது.நீங்கள் அப்படி வாழ்வதைக் காண உள்ளம் நிறைகிறது.உங்கள் தெள்ளிய சிந்தனைக்கும் அவற்றை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்கும் என் அன்பு மிகு நன்றிகள்.பாராட்டுக்கள்!

தொடர்ந்து வருவேன்.உங்கள் சித்திரகூடத்தை என் வீட்டின் விருப்பப்பக்கமாய் ஆக்கிக் கொண்டு விட்டேன்.ஆனால் உங்கள் பகுதிக்கு வருவதில் ஏதோ ஒரு சிரமம் இருக்கிறது. எங்கு தவறு நேர்கின்றதெனத் தெரியவில்லை.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!