Monday, May 23, 2011

வைரமுத்து - நகரத்துப்பெண்கள் இழந்தது என்ன?

சென்ற வாரம் முழுக்க ஒரு வீடியோ எனது ஃபேஸ்புக் வாலில் வந்து வந்து விழுந்துக் கொண்டிருந்தது. வைரமுத்து என்பவர் நீயாநானாவில் பேசியதுதான் அது. அதி நவீன இந்திய இளைஞர்கள், அயல்நாட்டில் வாழும் தமிழர்களெல்லாம் கூட வைரமுத்துவை ரசித்து ரீஷேர் செய்திருந்தார்கள். நகரத்து பெண்களிடம் இல்லாத ஒன்று கிராமத்து பெண்களிடம் இருக்கிறது, கிராமத்து பெண்களிடம் இருக்கும் வெகுளித்தனம், வெட்கம், இன்னொசன்ஸ், வெளிப்படைத்தன்மை என்றெல்லாம் அந்த வீடியோ லேபிள் குத்தப்பட்டு வலம் வந்ததைப் பார்த்தபோது எனக்கு மயக்கம் வராத குறை!

அட, வைரமுத்துவை ரசிக்கும் தமிழ்நாட்டில் எப்படி தமன்னாவும் அனுஷ்காவும் வெற்றி பெறுகிறார்கள்?

இப்படி மண்ணின் மணத்தை ரசிப்பவர்களுக்காகவா இந்த தமிழ் சினிமா இயக்குநர்கள் கேரளாவிலிருந்தும் மும்பையிலிருந்தும் கதாநாயகிகளை இழுத்து பிடித்து வருகிறார்கள்? மக்கள் விரும்புவதைத்தான் நாங்கள் தருகிறோம் என்றுவேறு இந்த சினிமாக்காரர்கள் சொல்லிக்கொள்கிறார்களே, அப்படியெனில், சினிமாக்காரர்கள்தான் நிஜமாகவே தமிழ்மக்களைப் பற்றி புரிந்துக்கொள்ளவில்லையா இல்லை தமிழ்மக்கள்தான் சினிமாக்காரர்களை ஏமாற்றுகிறார்களா?

சரி, அதை விடுங்கள்....கிராமத்து பெண்ணின் வெகுளித்தனம், இன்னொசன்ஸ் என்று இவ்வளவு ரசிப்பவர்கள் சராசரி கிராமத்து பெண்ணை அவளது இன்னொசன்சுக்காகவே (அல்லது வெட்கம்/வெகுளி etc) திருமணம் செய்துக்கொள்வார்களா?

”பெண் கலராக இருக்கணும்” என்பதுதானே சராசரி மணமகன் வைக்கும் முதல் கண்டிஷன்?!

கருப்பு நிறம் கண்ணை மறைக்கும் அளவுக்கு சீர் செனத்தியோடு நில புலன்களோடு வந்தால்தான் சாதாரணமாகத் தோற்றம் கொண்ட ஒருவன் கிடைப்பான் என்பது இன்றும் யதார்த்தம். ”சாதாரண தோற்றம் கொண்ட ஒருவன்” என்று சொல்லிவிட்டதற்காக சண்டைக்கு வராதீர்கள். தாத்தாவானாலும் உலக அழகியோடு ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று வைராக்கியம் கொண்டவர்கள் தான் நமது ஹீரோக்கள். ஹீரோ கருப்பாக குண்டாக இருந்தாலும் பெண் ஒல்லியாக சிவப்பாக இருக்கவேண்டும் என்பதுதானே நமது தமிழ்சினிமா மரபு...கலாச்சாரம்...இலக்கணம்!!

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் முக்கியமான ingredients - இன்னொசன்ஸ், வெட்கம்! அதைத்தான் இந்த நகரத்துப் பெண்கள் தொலைத்துவிட்டார்கள் என்று ஒரே கூச்சல்! இன்னொசன்ஸ் என்பதை பொதுவாக குழந்தைகளுக்குத்தான் சொல்வோம். பெண்கள் குழந்தைகள் போல இருப்பதைத்தான் விரும்புகிறார்களா? இல்லை, பெண்கள் ”குழந்தையின் குணங்கள் - குமரியின் வளங்களோடு” இருக்கவேண்டுமென்று அல்லவா வலியுறுத்துகிறார்கள்! நம் சினிமா கதாநாயகிகளையே பாருங்களேன் - அவர்கள் லூசுப்பெண்களாக இருக்கவேண்டுமென்பது எழுதப்படாத சட்டம். (மறுப்பீர்களானால் தமிழ்சினிமாவை பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். )

வளர்ந்தபிறகும் அப்படி இருந்தால் மூளை வளர்ச்சியில் பிரச்சினை என்கிறது அறிவியல். ஒரு வளர்ந்த பெண்ணைப்பார்த்து ‘இன்னொசன்டா இரு’ என்று சொன்னால்.என்ன அர்த்தம்? அதாவது, ”ஆண்களுக்கு உலகம் தெரியும், இது ஆண்களுக்கான உலகம், இதைப் புரிந்துக்கொள்ள உனக்கு விவரம் பத்தாது” என்பதுதானே! பெண்களுக்கு அறிவுண்டு என்பதை இன்றும் ஏற்க மறுக்கும் உலகில்தான் நாம் வாழ்கிறோம். ”கவிதை எழுது போ, உனக்கெதுக்கு அரசியல்” என்றும் சொல்லும் இணையத்தில்தான் நாம் இருக்கிறோம்.

இப்படி இன்னொசன்சை ரசிப்பவர்களது நட்பு வட்டத்தில் ஒரு கிராமத்து ஆள் மாட்டினால் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அந்த கிராமத்து இன்னொசன்ஸ் ஒரு ஆணிடம் இருந்தால் எப்படி எள்ளி நகையாடுவார்கள் என்பதை நேரில் பார்த்திருக்கிறீர்களா? அப்படி எள்ளி நகையாடுபவர்கள்தான் கிராமத்து இன்னொசன்சை ரசிப்பதாக பிதற்றுகிறார்கள்.

என் சிறு வயதில் நடந்தது இது: கீழ்வீட்டு அங்கிளின் அம்மா கிராமத்திலிருந்து வந்திருந்தார். அந்த அங்கிள் கேட்டாரென்று முட்டை தோசை செய்துதந்திருக்கிறார். தோசையைப் பார்த்துவிட்டு “முட்டை எங்கேம்மா” என்றாராம் அங்கிள். “போட்டிருக்கேனே” என்ற அவர் சொன்னதும் அங்கிளுக்கு சந்தேகம் வந்து பார்த்தால் அவரது அம்மா முட்டையை மாவில் கரைத்து ஊற்றிக்கொடுத்திருக்கிறாராம். இன்றும் கூட இதை வைத்து அங்கிளை கேலிக்குள்ளாக்குவார்கள். இந்த கிராமத்து இன்னொசன்ஸ் யாருடைய ரசனைக்குரியதாக இருக்கிறது? அந்த ஆயாவுக்கா அல்லது பார்த்து சிரிப்பவர்களுக்கா? இவர்கள் ரசிக்கும் இன்னொசன்சின் லட்சணம் இதுதான்!

அடுத்தது வெட்கம் - ”இப்போ இருக்கிற பெண்களுக்கு வெட்கம்னா என்னன்னே தெரியாது” என்பதை பெண்கள் அனைவருமே ஏதோ ஒரு சமயத்தில் நிச்சயமாக எதிர்கொண்டிருப்போம். ஏதோ வெட்கம், வெகுளித்தனமெல்லாம் பெண்களுக்கே உரித்தானவை என்பது போல... இந்த இன்னொசன்ஸ்,வெகுளி என்பதை யெல்லாம் சிறிது நெருக்கமாக பார்த்தால் பெண்களுக்கு வெட்கம்,அச்சம், மடம் நாணம், பயிர்ப்பு -ஆண்களுக்கு வீரம் என்ற இலக்கணத்திலிருந்துதான் வருகிறது.

பெண்கள் முதலில் எதற்கு வெட்கப்படவேண்டும்? பெண் என்பதற்காகவா? இந்த வாதமே feudalism ஆகத் தெரியவில்லையா?

ஒருமுறை பப்பு எனது துப்பட்டாவை புடைவைபோல சுற்றிக்கொண்டதை படமெடுத்து பேஸ்புக்கில் பதிந்திருந்தேன். அதற்கு ஒருவர், அவளது முகத்தில் வெட்கம் தெரிகிறதென்றார்.ஐந்து வயதுக்குழந்தை புடைவையை சுற்றிக்கொண்டு சிரித்தால் கண்களில் வெட்கம் தெரிகிறது என்பது ஆபாசமாக இல்லையா?

ஏதோ பெண்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டியது, இது இல்லாவிட்டால் பெண்ணே இல்லை, பெண்களின் இலக்கணம் என்றெல்லாம் மியூசியத்தில் வைக்க வேண்டிய ஒன்றை மிகைப்படுத்திக் காட்டுவது ஊடகங்களும் சினிமாவும்தான். அதை நகரத்துப் பெண்களாவது தொலைத்தது நல்லதுதானே!! பொதுவாக ஏற்றுக்கொள்ள முடியாத இழிவான செயல்கள் செய்தால்மட்டும் வெட்கி நாண வேண்டுமே தவிர பெண்ணாக இருப்பதற்கு அல்ல. மற்றபடி, வெட்கத்துக்கும் ஈஸ்ட்ரோஜனுக்கும் சம்பந்தம் இருப்பதாக அறிவியல் ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததாக நினைவில்லை. ஆமாம், கிராம X நகரத்து ஆண்களும்தானே மாறியிருக்கிறார்கள். அதை ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள்?

இவர்கள் சொல்லும் வெட்கம், இன்னொசன்ஸ் போன்றவைதான் பெண் தன்மை என்ற எண்ணத்தின் சீரழிவுதான் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் சிறு குழந்தைகள் கூட கதாநாயகிகளின் விரகதாபங்களை டீவி மேடைகளில் அபிநயித்துக்கொண்டிருக்கிறார்கள். மானாட மயிலாட போன்ற தெலுங்கு வெர்சன் நிகழ்ச்சி ஒன்றில் 4 வயதுடைய குழந்தையொன்று இடுப்பை வளைத்து நெளித்து முகத்தில் கையை வைத்து எடுத்து வெட்கத்தை காட்ட வேண்டி ஆடப்பாடி வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் பெண்களுக்கு இலக்கணம் என்று சொல்லும் எல்லாம் நடுத்தர வர்க்கத்துக்கு உரித்தானதாக இருக்கிறது. பெண்மையின் மென்மை எல்லாம் அடித்தட்டு மக்களிடம் செல்லாது.

வேண்டுமானால், சித்தாள் வேலை செய்யும் பெண்ணிடம் அறை வாங்கிய அனுபவம் இருப்பவர்களிடம் கேட்டுப்பார்க்கலாம். மற்றபடி, இந்த கிராமத்து இன்னொசனஸ், பெண்மை, மலரினும் மென்மை எல்லாம் கவிதைக்கு அல்லது நீயாநானாவுக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாமே தவிர சுயமரியாதையுடைய பெண்களுக்கு அல்ல!

பொதுவாக, ஆண்கள், பெண்களைப் பற்றி சொல்லுவதைக் கேட்டிருக்கிறீர்களா? பெண்கள் தாவணி போட்டு தலை நிறைய பூ வைத்து வளையல் போட்டு கொலுசணிந்து வந்தால் பிடிக்கும் என்பார்கள். அதோடு, எங்கள் விருப்பமான உடைகளை அவர்கள்தான் தூக்கிப்போட்டு விட்டார்களே என்றும் அங்கலாய்த்துக்கொள்வார்கள்! ( ஷகீலாவின் படங்களை அல்லது மல்லு ஆண்ட்டி ஃபர்ஸ்ட் நைட் என்று யூ டியூபில் தேடிக்கொண்டிருப்பார்கள். அதைக்கண்டுக்கொள்ளக்கூடாது!! ) காணாமல் போன கலாச்சாரத்தை வேட்டியில் தேடுவதுதானே! ஆனால், வசதியாக பேண்ட் சர்ட்டுக்கு மாறிவிட்டு பெண்கள் மட்டும் கலாச்சாரத்தை காப்பாற்ற தாவணி, புடவை அணிந்துக்கொள்ளவேண்டுமென்பது என்ன நியாயமென்று புரிந்தவர்கள் சொல்லுங்கள்.

சரி, வைரமுத்து சொன்னது என்ன? மாடு மேய்க்கப்பிடிக்கும், அப்புறம் கணவன் ஆபிசுக்கு செல்ல வேண்டும், கணவனைச்சார்ந்து இருப்பது என்பதெல்லாம் இதெல்லாம் ஒரு சராசரி நடுத்தர வர்க்க பெண்ணுக்கு விதிக்கப்பட்டது.

ஆண்களுக்கோ, நடைஉடை பாவனைகளில் நகரத்தவர்களாக இருக்கவேண்டும், ஆனால், மனத்தளவில் அத்தானின் காலை அமுக்கி விட்டு அல்லது ”பத்திரமா ஆபீசுக்கு போயிட்டு வாங்க அத்தான்” என்று டிபன்பாக்சை கையில் கொடுத்துவிடும் சராசரி பெண்கள்தான் வாழ்க்கைத்துணையாக வேண்டும். இதுதான் இவர்களது உள்ளார்ந்த மனோபாவம்.

இவை இரண்டும் இணையும் புள்ளிதான் இந்த வீடியோவை மடலிலும்,ரீஷேரிலும் பகிர்கிறது. அதாவது, வைரமுத்து, இவர்கள் சொல்லும் தமிழ்பண்பாடு தமிழ்கலாச்சாரம் என்று சொல்லும் விழுமியங்களை கொண்டவராக இருக்கிறார். அதை நமது ”சின்னகவுண்டர்” மனம் கொண்டாடுகிறது.

வைரமுத்து ஒரு சராசரி கிராமத்து பெண். ஒரு பெண் எப்படி நமது சமூகத்தின் விழுமியங்களோடு வளர்த்தெடுக்கப்படுகிறாள் என்பதற்கு சாட்சி. அவ்வளவே.!! அதைத்தாண்டி, வியந்தோதுவதற்கும், பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று சொல்வதற்கும் அல்லது ’நீங்கள் இழந்துவிட்டதை வைரமுத்துவைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்வதற்கும் அந்த வீடியோவில் எதுவும் இல்லை.

19 comments:

துளசி கோபால் said...

நச்!!!!!!!!!!!!!

சீனு said...

//அட, வைரமுத்துவை ரசிக்கும் தமிழ்நாட்டில் எப்படி தமன்னாவும் அனுஷ்காவும் வெற்றி பெறுகிறார்கள்?//

அந்த 2 வகை பெண்களின் கேட்டகிரி வேற வேற...

பொதுவாக பண்களுக்கென்று சில குணங்கள் இருந்தே தீரும். அதை மாற்றவே முடியாது என்பது என் கருத்து.

அது போல ஆண்களுக்கென்று சில குணங்கள் இருக்கும். அதுவும் மாற்ற முடியாது.

ஹுஸைனம்மா said...

//வைரமுத்து ஒரு சராசரி கிராமத்து பெண்//

நானும் வைரமுத்து, வைரமுத்துன்னதும், கவிப்பேரரசுவா இல்லை வேற யாராவது ஆம்பளையோன்னு நினைச்சுகிட்டிருந்தேன். :-(((((((

ஹுஸைனம்மா said...

ஃபாலோ-அப்

வினவு said...

அடக்கம் ஒடுக்கம் என்ற பெயரில் அடிமைகளை விரும்பும் ஆண் ஆண்டைகளின் உளவியலை அழுத்தமாக விவரித்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

well said.

ராமலக்ஷ்மி said...

// காணாமல் போன கலாச்சாரத்தை வேட்டியில் தேடுவதுதானே! ஆனால், வசதியாக பேண்ட் சர்ட்டுக்கு மாறிவிட்டு பெண்கள் மட்டும் கலாச்சாரத்தை காப்பாற்ற தாவணி, புடவை அணிந்துக்கொள்ளவேண்டுமென்பது என்ன நியாயமென்று புரிந்தவர்கள் சொல்லுங்கள்.//

கலாச்சாரம் பற்றிய பேச்சுக்கள் எழுகையில் நானும் இப்படியே நினைப்பதுண்டு:)!

Innovatives said...

சரியான சாட்டையடி....

துஷ்யந்தனின் பக்கங்கள் said...

வைரமுத்துக்கு கிராம பெண்கள் மீதுதான் காதல்

Kavitha said...

intha visiyathhuku ivlo tension thevaye illa Mullai...

காமராஜ் said...

கிராமத்துப்பெண்களிடம் இன்னசென்ஸ் மட்டும் தான் இருக்கிறதென்று சொல்லுவது பேத்தல் அபத்தம் பூசனிக்காயை கைப்பிடி சோற்றுக்குள் மறைக்கும் செப்பிடுவித்தை.
எதிர்த்துப்பேசுகிற,உடல் உழைப்புச்செய்கிற,பஞ்சாயத்துகளில் துணிந்து கருத்துச்சொல்லுகிற தேவையேற்பட்டால் அடித்து துவைக்கிற பெண்கள் தான் நான் வாழ்ந்த கிராமத்தில் அதிகம்.

ஊரான் said...

பெண்களைப் போகப் பொருளாக பார்க்கும் ஆண் ஆதிக்கச் சிந்தனையின் நீட்சிதான் "கிராமத்து பெண்களிடம் இருக்கும் வெகுளித்தனம், வெட்கம், இன்னொசன்ஸ், வெளிப்படைத்தன்மை ". என்கிற கருத்தாக்கம்.

இனப்பெருக்க உடற்கூறியல் வேறுபாடுகளைத் தவிர ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் பல்வேறு கருத்தாக்கங்கள் ஒழிக்கப்படவேண்டும்.

தழைய தழைய புடவையும், நீண்ட கூந்தலும், கொண்டை நிறைய பூவும், நெற்றியில் பொட்டும், பொன்நகைகளும் உள்ளிட்ட பெண்மைத் தன்மையை போற்றும் பிற்போக்குத்தனங்கள் குப்பையில் வீசப்பட வேண்டும்.

குழந்தைப் பருவத்திலிருந்தே திணிக்கப்படும் வெகுளித்தனம், வெட்கம், இன்னொசன்ஸ், வெளிப்படைத்தன்மை போன்ற "போலச்செய்யும்" பண்பியல்புகள் இல்லை என்றால் இத்தகைய கருத்தோட்டங்கள் ஒழியும்.

இது அவ்வளவு எளிதல்ல. சமூக மாற்றத்தோடுகூடிய ஒரு நெடிய போராட்டம்.

சிறப்பான அலசல் சந்தனமுல்லை அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஷர்புதீன் said...

:)

The Analyst said...

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். The more ignorant and naive a girl is, the better it will be for their ego. :(
என் ம‌னைவிக்கு ஒன்றுமே தெரியாது, எல்லாம் நானே என்று சொல்வ‌தில் எத்த‌னை க‌ண‌வ‌ன்மாருக்குப் பெருமை என்று பார்க்கும் போது ந‌ம்ப‌வே முடிவ‌தில்லை.

பெண்க‌ள் எல்லோரும் அழ‌கான‌ ப‌துமைக‌ளாக‌ இருந்தால் காணும். மூளையே தேவையில்லை என‌ எம் ச‌மூக‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌, ம‌ற்றைய‌ ஆணாதிக்க‌ ச‌மூக‌ங்க‌ளிலும் உண்டு. Definitely not to the same extent though. கீழிருப்பது நான் இன்று ஒரு பெண் microbiologist இன் blog இல் வாசித்த‌து.

This wasn't the post I wanted to write about the ASM conference. There's been lots of great science discussed (I've tried to tweet some of it, but the wifi in both the conference center and my hotel have been spotty, so I've not had a chance to write anything comprehensive). Instead, I'm ticked off and venting via dashed-off blog rant.

[Me, trying to make a purchase]: Do you have any of these in a box that doesn't say "from someone in New Orleans who loves you"? I was going to get them for my lab and that might be kind of creepy.

[Retail salesguy]: Your lab? I'm not sure those are good for dogs.

[Me]: No, not the dog lab. A science lab. My laboratory. The people who work for me.

[RSG]: Oh, you're here for the science conference?

[Me]: Yes, microbiology. I study germs.

[RSG]: But you can't be a scientist!

[Me]: I can't?

[RSG]: No, you don't look like a microbiologist.

[Me]: Um, what exactly does a microbiologist look like, then?

[RSG]: Uh...

[Me]: Because I'm pretty sure that I am one. (Rummaging through bag, digging out ASM nametag). Yep, that's my name, and that's the microbiology conference logo right there.

[RSG]: But you're too pretty! You should be in Hollywood.

[Me]: (picking up bag, leaving unpurchased boxes on counter) I bet you've had dozens of scientists just like me through your store today, and never even realized it because of the stereotypes you hold. Conference runs through tomorrow, so I hope you'll say hello to a few of them.

இங்கேயிருந்து.

கொற்றவை said...

well written

இராஜராஜேஸ்வரி said...

அருமையான அலசல். பாராட்டுக்கள்.

புலவன் புலிகேசி said...

//ஆண்களுக்கோ, நடைஉடை பாவனைகளில் நகரத்தவர்களாக இருக்கவேண்டும், ஆனால், மனத்தளவில் அத்தானின் காலை அமுக்கி விட்டு அல்லது ”பத்திரமா ஆபீசுக்கு போயிட்டு வாங்க அத்தான்” என்று டிபன்பாக்சை கையில் கொடுத்துவிடும் சராசரி பெண்கள்தான் வாழ்க்கைத்துணையாக வேண்டும். இதுதான் இவர்களது உள்ளார்ந்த மனோபாவம்.//

அப்பட்டமான உண்மை.......

புதியவன் said...

என் கருத்து
வைரமுத்து ஒரு சராசரியான கிராமதுப்பெண்ணாக இருந்தாலும்
ஒடுக்கப்பட்டிருந்த பெண் இனத்தில் இவளும் என்பதை மறக்க கூடாது.
என்னை பிரம்மிக்க வெய்த்த இவள் அம்சங்கள்;
அ. நகைச்சுவை உணர்வு
ஆ.தன்னை பற்றிய கனவு
இ.சமுதாய சிந்தனை
ஈ.வெளிப்படையான குணம்

கிராமத்து பெண்களோ ,நகரத்து பெண்களோ இந்த நான்கு அம்சங்களும் இருந்தால்
பெண் இனம் தலைத்தூக்கும்

கௌசல்யா said...

மிக சரியான பதிவுகள்..பொதுவாக மனவலிமையோடு இருக்கும் பெண்களை ஆண்கள் திரும்பி கூட பார்ப்பதில்லை..!!!