அதை அறிந்ததிலிருந்து பப்புவுக்கு மிகவும் கவலையாகிவிட்டது. ஏற்கெனவே சுனாமியால் பப்புவுக்கு ஏகப்பட்ட கேள்விகள், யோசனைகள். இதில் உலகம் அழிந்துவிடுமென்றதும் ’நாம என்னதான் பண்றது’ என்று கலங்கிப்போய் விட்டாள். அந்த ஹெரால்டு என்பவருக்கு கடிதம் எழுதலாம் என்று அவளே ஒரு முடிவுக்கு வந்து, இந்த கடிதத்தை எழுதியிருக்கிறாள்.
dear Mr.herald,
why does world fall? what shall I do?
எழுதிவிட்டு இதை அவருக்கு அனுப்பியே ஆக வேண்டுமென்று அடம். சரி, மெயிலில் அனுப்புகிறேன் என்று சொல்லி வைத்திருக்கிறேன். ஹெரால்டு இந்தக்கடிதத்தை பார்த்துவிட்டு, ”i tell lie ன்னு சொல்லிட்டா நிம்மேதி”யாம். இல்லையென்றால்,
1. ராக்கெட் புடிச்சு நாம எல்லாரும் நிலாவுக்கு போய்டலாம். குட்டிப்பசங்களை எல்லாம், மேல்வீட்டு குட்டிப்பாப்பாவையும் (3 மாதக்குழந்தை!) கூப்பிட்டுப் போய்டலாம்.(ஆவ்வ்வ்..அப்போ பெரியவங்க!)
2. உலகத்தை மேலே தூக்கிட்டுபோய் வானத்தை கீழே அழுத்திடலாம். (நோ நோ, நாங்க ஒரு விஜயகாந்த் படம் கூட பாத்தது இல்ல)
3. உலகத்தை உடைச்சிட்டா உலகம் அழிஞ்சு போகாது. (அதானே, உலகம் இருந்தாத்தானே அழியும்!)
என்று மூன்று திட்டங்கள் வைத்திருக்கிறாள்.
ஹெரால்டு மற்றும் தினமணிக்கதிரின் கவனத்துக்கு...: அந்த ஹெரால்டின் ஐடியை தேடிக்கொண்டிருக்கிறேன். உடனே ஐடியுடன் தொடர்பு கொள்க!

விடுமுறையில் அராஜகம் தாங்கமுடியவில்லை. எல்லாருக்கும் கிச்சு கிச்சு மூட்டுவது, ஆயாவிடம் நான் கூப்பிட்டேன் என்றும் என்னிடம் ஆயா கூப்பிட்டார்கள் என்றும் சொல்லி பே என்று முழிக்க வைப்பது,மேலே விழுந்து புரள்வது.....தாங்க முடியாமல், கிச்சு கிச்சு பண்ணா வால் முளைச்சுடும் என்று சொல்லி வைத்தேன். கொஞ்சமே கொஞ்சூண்டு (நேரம்) பலனிருந்தது. அப்புறம்,
“ஆச்சி, நீ எனக்கு கிச்சு கிச்சு பண்ணுப்பா, ப்ளீஸ்....” என்று அமர்க்களம் ஆரம்பமாகிவிட்டது.
அம்மாவுக்கு வால் முளைக்குதான்னு பாக்க அவ்வளவு ஆசை! (ஹூம்...பாலூட்டி வளத்த கிளி...!)
4 comments:
ha ha ha
interesting as usual ...
Hi pappu don't worryda ...
//ஹெரால்டு மற்றும் தினமணிக்கதிரின் கவனத்துக்கு...: அந்த ஹெரால்டின் ஐடியை தேடிக்கொண்டிருக்கிறேன். உடனே ஐடியுடன் தொடர்பு கொள்க!//
நீங்க முதல்ல தினமணிக்கதிருக்கு தந்தி அனுப்பிவிடுங்க அவுங்களுக்கு இரெசுபானுசுபுலிட்டி இருக்குல்ல? அப்புறமா அவுங்ககிட்ட கேட் கெரால்டுக்கு தந்தி அனுப்பலாம்!
கெரால்டு ஒருத்தனையும் தூங்க விடக்கூடாதுன்னு தீர்மானிச்சு சொன்ன மாதிரி நாமளும் இந்த செய்தியை சொன்ன யாரையும் தூங்கவிடப்பிடாது ! இதான் நம்மளோட எயும்மு!
How Sweet...
Childrens always rocks....
with Love
razin
நல்ல ஐடியா எல்லாமே.. உலகத்தை உடைச்சிட்டா, அழிக்க முடியாதுங்கிறது தான் அல்டிமேட்!
Post a Comment