முட்டினா கொம்பு வரும் மாதிரியான நம்பிக்கைகள் பள்ளியிலிருந்து கல்லூரி வரை தொடர்ந்திருக்கிறது. ஆனா, அது எங்கள் மெச்சூரிட்டிக்கு ஏத்தமாதிரி மாறிக்கிட்டேயிருக்கும்.
3ஆம் வகுப்பு* முட்டினா கொம்பு முளைக்கும். முளைக்காம இருக்கனும்னா, ரெண்டாவது வாட்டி முட்டனும்.
*பொய் சொன்னா வாலு முளைக்கும்
*ப்ளம்ஸ்/இலந்தைப் பழம்/பேரிச்சம் போன்ற கொட்டைகள் முழுங்கினால், வயிற்றுக்குள்ளிருந்து (வாய் வழியாக) மரம் வளரும்.
*மயிலிறகு குட்டி போடும்.
7ஆம் வகுப்பு*நகத்தில் பூ விழுந்தால், புது டிரெஸ் கிடைக்கும்
*புறா பறப்பதை பார்த்தால், இரு கைவிரல் நகங்களையும் உரசிக்கொண்டு, "புறா புறா பூ போடு" என்று சொன்னால்
நகத்தில் பூ விழும்.
10ஆம் வகுப்பு*எத்தனை குருவிகளை பார்த்தோமோ, அதை வைத்து,
one for sorrow, two for joy etc.
* புது ட்ரெஸ் போட்டுட்டு வந்தா, new pinch கொடுப்பது. (சிலருக்கு இந்த் பழக்கம் வாழ்நாள் முழுதும் தொடரும்!!)
*காக்கா எச்சமிட்டால், நீங்க ரொம்ப லக்கி!! (?)
கல்லூரி இறுதி வருடம் * கடைசி வாய் சாபபிடறவங்களுக்கு நல்ல husband!
(ஒரு தோசை/ஸ்நாக்ஸ் எல்லரும் சேர்ந்து சாப்பிடறோம்னா, கடைசியா இருக்கும் portion. யார் எடுத்துக்கறதுன்னு
மீதியாவதை தடுக்க இப்படி ஒரு யோசனை.அடிச்சி பிடிச்சி எடுக்க ஓடி வருவாங்க!)
* ட்ரெஸ்/ஸ்லிப் திருப்பி போட்டுக்கிட்டோம்னா, புது ட்ரெஸ் கிடைக்கும்.
* பேனா, கைக்குட்டை பரிசளித்தால், நட்பு முறிந்துவிடும்.
அலுவலகத்தில் சேர்ந்த பின்* தலையில் வைத்த பூ மாலை வரை வாடாமலிருந்தால், மாமியார் ரொம்ப நாள் உயிரோட இருப்பாங்க!!(சந்தோஷமா துக்கமா!!).
கனவில் சாவு வந்தால், கல்யாணம் என்று என் ஆயா நம்புவதையும், கனவில் குரங்கு வந்தால் ஆஞ்சநேயருக்கு வடை மாலையும், காகம் வந்தால்கோவிலில் விளக்கும் ஏற்றும் அம்மாவின் நம்பிக்கைகளையும் எதில் சேர்ப்பது?