Friday, January 05, 2007

பதிவர்கள் : ஒரு ஜாலி கற்பனை

"யார் மனதையும் புண்படுத்துவதற்க்கு அல்ல.தவறாக நினைக்க வேண்டாம்! "

நம்ம பதிவர்கள் எல்லாரும் சின்ன வயசுல ஒரே ஸ்கூல்ல படிச்சா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை!


(மாணவர்கள் : அரைபிளேடு, தேவ்,கவிதா,பொன்ஸ்,ரவி,லக்கிலுக்,,இளா,சுதர்சன் கோபால்.மற்றும் பலர்!!)

கிளாஸ் ரூம்

டீச்சர் : பசங்களா, லீவ் முடிஞ்சு இப்பதான் புது வருஷத்தில வந்திருக்கோம். எல்லாரும் புது ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா?
வெரி குட்! வரிசையா கிளாசுக்கு போங்க!

டிங்..

முதல் வகுப்பு ஆரம்பிக்கிறது!

அட்டெண்டென்ஸ் எடுக்கிறார்.

அரைபிளேடு - இந்தாமே..இங்கதான் கீறேன்!
தேவ் - உள்ளேன் மேடம்!
இளா - இருக்கேன் அம்மா!
கவிதா - உள்ளேன் அம்மா!
லக்கிலுக் - இதோ இருக்கேன் அம்மா!
பொன்ஸ் - இருக்கிறேன் அம்மா!
ரவி - எண்ட்ரி டீச்சர்!
சுதர்சன் - வந்துட்டேன் டீச்சர்!

புத்தகம் கொண்டு வந்திருக்கீங்களா எல்லாரும்?
டீச்சர் - கவிதா ஏன்மா உன் கண் சிவந்து இருக்கு? டல்லா இருக்கே?

கவிதா - டீச்சர், நான் வேன்ல வரும்போது ஒரு பையன் என்னையும் என் ப்ரெண்டயும் இடிச்சிட்டான் டீச்சர்!
ஏண்டா இடிச்சன்னு அவனை கேட்டதுக்கு, இந்த அரைபிளேடு என்னை முறைக்கிறான் டீச்சர்.
அப்புறம் அவன் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் அவனுக்கு சப்போர்ட் பண்றாங்க.அவங்களை சமாளிச்சி
திரும்பி பார்க்குறதுக்குள்ள அதுக்குள்ள இடிச்சவன் ஓடிட்டான்.

டீச்சர் : அரைபிளேடு..

அரைபிளேடு : டீச்சர்..நான் அப்டி பண்ணல டீச்சரு..வேன்ல வந்துகினு இருக்கும்போது, இவங்கதான் டீச்சரு என்னை இடிச்சாங்க!
வேன் நிக்கும்போது எனக்கு கிச்சு கிச்சு மூட்டினாங்க!
நீங்க, அண்னா தம்பி கூட பொறக்கலியான்னு கேட்டதுக்கு சண்டைக்கு வராங்கோ டீச்சரு! நான் ஆம்பளைக்குங்களுக்கு
சப்போர்ட் பண்றதனால, அவங்களும் எனக்கு சப்போர்ட் பண்றாங்கோ!

ஆண் மாணவர்கள் : ஆமா..ஆமா! அரைபிளேடு சொல்றதுதான் சரி..ஆமா..ஆமா!

டீச்சர் : அமைதி..அமைதி! சரி..நான் பாடத்தை முடிச்சிட்டு விசாரிக்கறேன். புத்தகத்தை எடுங்க எல்லாரும்!
பொன்ஸ்..நீ என்னம்மா புத்தகம் கையிலே வச்சிருக்கே?

பொன்ஸ் : இது கோகுலம் டீச்சர்.

டீச்சர் : ஓ..அப்படியா..? உன் யானை படம் போட்ட ட்ரெஸ் நல்லா இருக்கு! அந்த புத்தகத்தில என்ன இருக்கு?

பொன்ஸ் : என் கவிதை, கதை இருக்கு டீச்சர்!

டீச்சர் : எங்க படி!!

பொன்ஸ் : தமிழ்மணமாம் தமிழ்மணம்..
இன்டர்நெட்டில் தமிழ்மணம்..
தமிழோவியதில் தினம்வரும்
தேன்கூட்டில் வலம்வரும்..

டீச்சர் : நல்லா இருக்கே..மாரல் வகுப்புல உன் கதகளை படிச்சி காட்டு!

பொன்ஸ் : சரி டீச்சர்..

டீச்சர் : தேவ்..அங்க என்ன தாள் கயிலே வச்சிருக்கே?

தேவ் : டீச்சர்..இது..

டீச்சர் : இதெல்லாமா பார்குறது? அசிங்கமான படமா இருக்கே! உனக்கு எப்படி கிடைச்சது இது?

தேவ் : டீச்சர்..பொண்ணுங்கதான் டீச்சர்...இப்படி..

இளா : டீச்சர்..அது நாந்தான் வச்சிருந்தேன். வன் என்கிட்ட இருந்து திருடிட்டான் டீச்சர். டேய்..குடுறா...

தேவ் :டீச்சர் : பாருங்க ..என்கிட்ட இருந்து பிடுங்கறான்..நான் தரமாட்டேன் போ!

டீச்சர் :அமைதி..அமைதி..
இந்தியநாடு ஒரு பழைமை வாய்ந்த நாடு..
ரவி..அங்க என்ன சத்தம்..செல்போன்லாம் எடுத்துவ்ரக்கூடதுன்னு தெரியும் இல்ல.

செந்தழல் : இல்ல..டீச்சர்..லக்கிக்கு குடுத்தேன் டீச்சர்! அப்புறம், பக்கத்து பள்ளிகூடத்தில உங்களுக்கு
ஒரு வேலை காலி இருக்கு டீச்சர். வேணும்னா சொல்லுங்க டீச்சர்..பிரின்ஸிபால் முகவரி தரேன்.
நம்ம ஒண்ணாங்கிளாஸ் கொத்தவரங்கா அங்க மூணவது படிக்கிறா டீச்சர். இன்னும் நிறையபேர்
இங்கேருந்து அங்க போகபோறாங்க டீச்சர்!

டீச்சர் : வேணாம் ரவி....நீ நல்ல வேலைதான் பண்றே..ஆனா, நம்ம கிளாஸ் அப்படியே இருக்கட்டும். புக்கை ஓப்பன் பண்ணு!
இந்தியாவில் பல கலாச்சாரங்கள் உள்ளன..லக்கிலுக்..என்ன பக்கத்து கிளாஸிலே எட்டி பார்த்துகிட்டிருக்கே?
பாடத்தை கவனிப்பா..

லக்கி : இல்ல டீச்சர்..நேத்து..அந்த பக்கத்து கிளாஸ் டீச்சர் ASL கேட்டேன். ஆனா, அவங்க என்கிட்ட பொய் சொல்லிட்டாங்க..பியூன்
அவங்க ரெக்கார்ட் பார்த்து எனக்கு சொல்லிட்டான் டீச்சர்.

டீச்சர் : இப்படீல்லாம் பண்ண கூடாது..லக்கி..சிஸ்டர்கிட்ட இப்போதானே அடிவாங்கி கட்டு பிரிச்சிருக்கு உனக்கு?
இந்தியாவில் பல இனமக்கள் வாழ்கின்றனர். சுத்ர்சன்..என்ன நோட் பாஸ் பண்ணிக்கிடிருக்கே..?

சுட்ஜி : டீச்சர்..அது வந்து..வந்து..நேத்து கேட்ட பாட்ட முதல் வரி மறந்துட்டேன்..அதான் நடு வரி எழுதி பாஸ் பண்ணேன்..
முதல்வரிய மத்தவங்க எழுதிக்கொடுக்கறாங்க!!

டிங்..

டீச்சர் : அப்பப்பா..உங்களை மேய்க்கற்துக்குள்ள வகுப்பே முடிஞ்சிடுது..ம்ம்!!

14 comments:

பொன்ஸ்~~Poorna said...

முல்லை,
உங்ககிட்டேர்ந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவே இல்லைங்க. :) போடுறதா, :( போடுறதான்னு குழப்பமா இருக்கு :)

நல்லாத் தான் இருக்கு! ஆனா, கவிதா அரைபிளேடு, பெண்கள், உரசல் விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம்.
நிஜமாகவே சீரியஸான அந்த விஷயங்களை இங்கே கொடுத்ததால் அவற்றின் முக்கியத்துவம் நீர்த்துப் போய்விட்டது போலிருக்கிறது..

ரவி டீச்சருக்கு வேலை வாங்கித் தருவதும், லக்கி பியூன் மூலம் ASL தெரிந்து கொள்வதும் :)))) இன்னும் சில பதிவர்களைச் சேர்த்துக் கொள்ளலாமே :-D

தேவ் | Dev said...

:)))))

ஜி said...

முதல் பின்னூட்டம்..

அட்டகாசமான பதிவு. இப்பத்தான் கவிதா, பெண்கள் வசைப்பாட்டை ஆண்கள் எல்லாரும் நையாண்டி பண்ராங்கன்னு ஒரு குற்றச்சாற்றுச் சொன்னாங்க... அதுக்குள்ள, ஒரு பெண்ணே நையாண்டி பண்ணிருக்கீங்க....

சூப்பர்.

இப்படி எல்லா மேட்டரையும் லைட்டா எடுத்துக்கிட்டா ஒருபிரச்சனையும் இல்லை.

Anonymous said...

கழகத்தின் போர்வாள், எங்கள் தங்கம், அறிவாலயத்தின் டீ சப்ளையர் (அப்படித்தான் நண்பர் வரவணை திமுக இளைஞயர் அணியை கூறிப்பிட்டுள்ளார்) பற்றி தப்பாச் சொல்லும் இந்த பதிவினை எதிற்கிறோம்..

லக்கி தற்கொலை படை,
தலைமை கழகம், மடிப்பாக்கம்,
சென்னை....

சேதுக்கரசி said...

:-D

விடாதுகருப்பு said...

என்னையும் இந்த ஆட்டையில சேத்துக்கப்டாதா?

அரை பிளேடு said...

கீறேன் மேடம்.

அப்பாலிக்கா செம காமடி போங்க. தூள் கிளப்பிட்டீங்கோ..

நாம பள்ளிக் கூடம் போய் ரொம்ப நாளாச்சு...
ஸ்கூல் பெஞ்சில திரும்பி போய் குந்திக்ன ஃபீலிங்ஸ்...

ஆமா அந்த டீச்சரு பேரு சொல்லவே இல்லியே...
ஆங்... சந்தன முல்லைதானே அவங்க பேரு...

:)))

சந்தனமுல்லை said...

வருகைக்கும், கருத்துக்கு நன்றி பொன்ஸ் :-)!


அந்த சீரியசான விஷயம், தமிழ்மணத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட விதத்தைத்தான்,
நான் காமெடிக்கு எடுத்துகொண்டேன். ஒருவேளை அது சொல்லப்பட்ட தொனி,
அப்படித் தோன்றி இருக்கலாம். மற்றபடி, பிரச்சினையையோ அதன் முக்கியத்துவத்தையோ கிண்டல் செய்யும் நோக்கம் இல்லை

//இன்னும் சில பதிவர்களைச் சேர்த்துக் கொள்ளலாமே :-D //

இப்பதானே முதல் வகுப்புநேரம் முடிந்திருக்கிறது. லேட்டாக வருபவர்களும் இருக்கிறார்கள் இல்லையா!so,அடுத்த பகுதியில்..:-))!!



கருத்துக்கு நன்றி ஜி!

நான் நையாண்டி செயதது பிரச்சினையை அல்ல! அது, பெரும்பான்மையான ஆண்களால் எடுத்துக்கொள்ள பட்ட விதத்தைதான்!

தங்களின் பதிவினை
பார்த்து நெகிழ்ந்தேன்!



வருகைக்கு நன்றி தேவ்..:-) !!

சந்தனமுல்லை said...

விடாது கருப்பு..நீங்க இல்லாமயா?!ஆச்சுவலா..நீங்க வகுப்புக்கு லேட்டா வர்றீங்க..ஆனா லேட்டஸ்ட்டா..:-)!! அதனால, அடுத்த கிளாஸ்ல உங்க எண்ட்ரி!!

வாங்க அரைபிளேடு..

உங்களை ஃபீலிங்ஸ் பண்ண வச்சதுக்கு ரொம்ப சந்தோஷப்படறேங்க!
உங்களைதான் டீச்சரா போடலாமான்னு யோசனை வந்தது..
ஆனா, குரூப் லீடர் வேணுமே..அதுக்கு உங்களை விட்டா வேற யாருங்க!
அதனால, நான் டீச்சர் ஆகிட்டேன்..ஹிஹி..ஹி!


மேலும், உங்க பதிவே என்னோட இந்த பதிவுக்குக் காரணம். அதில் மிகையா எனக்கு பட்டதைதான் காமெடி (ங்கற பேரில) செய்திருக்கேன். :-)!

luckylook said...

Good one :-))))

செந்தழல் ரவி said...

அட்ரா சக்க !!!

நானும் இப்படி ஒன்னு யோசிச்சிக்கினு கீறேன்...விரைவில் எடுத்து விடறேன்...மற்றபடி பார்முக்கு வந்துட்டீங்க் :))

சுந்தர் / Sundar said...

சுப்பர்ங்கோ

சுதர்சன்.கோபால் said...

:-)))

அப்புறம் அது சுட்ஜீ

நாகை சிவா said...

//அப்பப்பா..உங்களை மேய்க்கற்துக்குள்ள வகுப்பே முடிஞ்சிடுது..ம்ம்!! //

அட பரவாயில்லையே, நான் டீச்சர் ஆயுசே முடிஞ்சிடும் என்று நினைச்சேன்.

:-)))))))))