"ஆச்சி, பிராமின்ன்னா என்னப்பா?" என்று பப்பு கேட்டபோது என்ன சொல்வதென்று
ஒரு கணம் புரியவில்லை. பப்பு புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டால் எனக்கு ஒரு க்யூரியாசிட்டி வந்துவிடும்(அவள் புதிது புதிதாக வார்த்தைகள் கற்றுக்கொண்ட காலத்திலிருந்து தொடரும் பழக்கம்!). எங்கிருந்து கற்றுக்கொண்டாள் என்று root cause analysis செய்ய கிளம்பிவிடுவேன். இந்த விஷயத்தில் root cause - சமீபத்தில் ஒரு சம்மர் கிளாசுக்கு சென்றாள். அங்கு அவளுக்கு ஒரு ஃப்ரெண்ட் கிடைத்திருக்கிறாள். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த குட்டிப்பெண்
(இலவச இணைப்பாக!) 'ஐ அம் பிராமின்' என்று சொன்னாளாம்.
'பிராமின்னா,
கோயில்லல்லாம் பூஜை செய்வாங்க இல்ல, அவங்கதான்' என்றேன்,அவள் கேட்டதுக்கு
பதிலளிக்கும் விதமாக. உடனே, "ஓ...காசு கேப்பாங்களே, எப்படி ஆச்சி, அந்த
கோயில்ல பெரிய உண்டி வைச்சு இருந்தாங்க இல்ல, மக்கள்கிட்டேருந்து காசு
வாங்கிறதுக்கு'", என்றாள். அவ்வ்வ்வ்...நாங்கள் சென்ற கோயில்களிலேயே,
பப்புவின் உயரத்துக்கு ஒரு (வெண்கலம்/எவர்சில்வர்?) உண்டியலை சுசீந்திரம்
கோயிலில் பார்த்திருந்தோம். சென்றுவந்தபிறகு ரொம்பநாளைக்கு அந்த உண்டியலை
பப்பு மறக்கவில்லை. "ஆச்சி,அவங்க அப்பா கோயில்ல பூஜை செய்றவரா?" என்றும்
கேள்வி. அவ்வ்வ்வ்வ்! 'எனக்கு எப்படி தெரியும்' என்று வசூல் ராஜா ஸ்டைலில்
சமாளித்துவிட்டாலும், எப்படி புரிய வைப்பது என்று சவாலாகவே இருந்தது.
ஃபார்மர்,கார்ப்பெண்டர், கோல்ட் ஸ்மித்,டீச்சர் என்றெல்லாம் சொல்லி ஓரளவுக்கு சமாளித்துவிட்டேன். இறுதியாக,'நாம
யார்க்கிட்டேயாவது நீ இந்துவா முஸ்லீமான்னு கேக்கலாமா? நீயே சொல்லு'
என்றதும், "அதுல்லாம் பர்சனல். கேக்கல்லாம் கூடாது.நான் கிறிஸ்டீன்,
விலாசினிக்கிட்டே சொல்லியிருக்கேனா" என்றாள்.(அவ்வ்வ்..அதை நீ என்கிட்டேயே
இதுவரைக்கும் சொன்னது இல்லையேம்மா!! -மைன்ட்வாய்ஸ்) 'அதுமாதிரிதான்
இதுவும்' என்று சொல்லிவைத்தேன்.
இதுவரை அவளிடம் எந்த
இடத்திலும் சாதிபற்றி பேசியதில்லை. சாதியை அதன் கொடுமைகள் இல்லாமல்
நிச்சயம் பேசிவிட முடியாது.சாதி என்றால் என்ன என்பதிலிருந்து அவளுக்கு
சொல்லவேண்டும். எப்படியும் தெரிந்துக் கொள்ளாமல் அவள்
வளர்ந்துவிடப்போவதில்லை. என்றாலும், இந்த விஷயத்தில் அது அவ்வளவு எளிமையானது அல்ல.
பப்புவும்,
அந்த குட்டிப்பெண்ணும் நண்பர்கள் என்றுதான் பப்பு
நம்பிக் கொண்டிருக்கிறாள். தனிப்பட்ட ரீதியில், எதிரியாக பார்க்காமல் எப்படி புரிய வைப்பது?
அதோடு, இப்படி மற்றவர்களிடம் சொல்லிக்கொள்வது இழிவானது, தவிர்க்கப்பட
வேண்டியது என்றும் புரிய வைக்கவேண்டும். இந்த மாதிரி சமயங்களில் எனக்கு
பெரிதும் உதவியிருப்பவை கதைகள் முக்கியமாக புத்தகங்கள். முன்பு ஒரு முறை
பப்பு 'கறுப்பர்கள்' பற்றி கேட்டபோது going' someplace special' என்ற
கதைப்புத்தகம், வேலையை சுலபமாக்கியது. மிகவும் அருமையான புத்தகம்! அதோடு, 'உனக்கு படிக்கத் தெரியாது(கமலாலயன் வாசல் வெளியீடு)'
என்ற புத்தகத்தை, கொஞ்சம் வாசித்துக் காட்டியிருக்கிறேன். (அதிலும், மேரி
பெத்யூன் நிறைய விஷயங்களுக்கு உதவுவார்! ) இதெல்லாம் எந்த அளவுக்கு இந்த
வயதில் அவளுக்கு புரியுமென்று தெரியாவிட்டாலும், 'ஓதி வைத்தால்
என்றைக்காவது உதவும்' என்ற கோட்பாட்டை நம்பி அவ்வப்போது செய்வதுதான்!
இது
போன்ற குழந்தைகளுக்கான (கதை)புத்தகங்கள், நமது நாட்டு 'சமூக/ பண்பாட்டுச்
சூழ்நிலைகளு'க்கேற்றவாறு வந்திருக்கின்றனவா? சாதி பற்றியும், அதன்
பாதிப்புகள் பற்றியும் 6 முதல் 10 வயதினருக்கு ஏற்ற வகையில் சொல்வதற்கு புத்தகங்கள்
இருந்தால் நலம். அமர்சித்திர கதாவின் 'அம்பேத்கர்' சித்திர புத்தகம், அம்பேத்கரின்
வாழ்க்கைச் சரிதமாக சொல்லப்பட்டிருக்கிறது.' அழகிய பெரியவனின் கதையான 'செருப்பு' என்ற ஒரு
குறும்படத்தையும் பப்புவுடன் அமர்ந்து பார்த்திருக்கிறோம். இவையெல்லாம்
ஓரளவுக்கு உதவும் என்றாலும், படங்களுடன், 'If you lived...' சீரிஸ்
மாதிரியான புத்தகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி இருந்தால்
பகிர்ந்துக் கொள்ளவும். இல்லையென்றால், குழந்தை எழுத்தாளர்கள்/பதிப்பகங்கள்
இந்த ஏரியாவை கவனித்தால் தேவலை.
Friday, May 31, 2013
Monday, May 20, 2013
Thursday, May 16, 2013
"குரங்குலேருந்து வந்த பெண் எங்கே?"
பப்பு,
நேற்று ஒரு கதைப்புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள். அதிலிருந்த
படத்தில், ராணிக்கு ஒருவர் சாமரம் வீசிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்ததும்,
பப்புவுக்கு புரியவில்லை. அதுதான் சாமரம், காத்து வரனும்னு வீசுவாங்க
என்றதும், ' அது பாக்கறது நம்ம வீட்டுல இருக்கிற ஒட்டடை குச்சி மாதிரியே
இருக்கு(அவ்வ்வ்வ்வ்!!),அவங்களுக்கு கை வலிக்குமா வலிக்காதா? வலிச்சா?'
என்றாள்.
'ஆமா,வலிக்கும், வலிச்சா வேற ஒருத்தங்க வந்து வீசுவாங்க. அவங்க வரைஞ்சிருக்கிறது பார்க்க அப்படி தெரியுது. ' என்றதோடு நிறுத்தியிருக்கலாம். கூட 'அது மயிலோட இறகுல செஞ்சிருப்பாங்க, அந்த காலத்துல ஃபேன்,ஏசில்லாம் கண்டுபிடிக்கலைல்ல' என்று சொல்லிவிட்டேன். அதிலிருந்து ஆரம்பித்தது.
"அந்த காலத்துல எல்லாம் நேச்சுரலா இருந்தது, இப்போதான் எல்லாம் டூப்ளிகேட்" என்றாள் மேலே சுத்தும் ஃபேனைக்காட்டியபடி.
"ஏன் அப்படி சொல்றே,அந்த காலத்துல பவர் இல்ல, இருட்டுலதான் இருக்கணும். எப்படி இருக்கும்? இப்போ ஜாலியா இருக்கு இல்ல, ஏசி இல்லாம தூங்க முடியுதா? கம்ப்யூட்டர், பஸ், ட்ரெயின் அதெல்லாம் வேணும்தானே, அப்போதானே ஈசியா இருக்கு?" என்றேன். ஆயாவுக்காக அவரது அறையில் ஏசி மாட்டியிருந்தோம். வெயிலின் கொடுமை தாளாமல், அவரது அறையில்தான் கொஞ்ச நாட்களாக எங்கள் தூக்கம்.
"அந்த காலத்துல நேச்சுரலா காத்து வந்துது, மரம்,காடுலேருந்து. ஊஞ்சல் கூட நேச்சுரலா இருந்தது.இப்போ, செயின் போட்டு கட்டி..இது அதுன்னு" என்றாள், ஒரு பெரிய கிழவி மாதிரி!
"நேச்சுரலா ஊஞ்சல் எங்க இருந்துது? " என்றதும், சமீபத்தில் காட்டுக்கு சவாரி போனதை நினைவூட்டினாள். அது ஒரு டீப் ஜங்கிள் சஃபாரி. காட்டு மரங்களிடையே, ஊஞ்சல்கயிறு போல, பெரிய பெரிய கிளைகள் அங்குமிங்கும் தாழ்ந்து தொங்கின.அதுதான் நேச்சுரல் ஊஞ்சலாம். சில நேச்சுரல் ஊஞ்சல்களில் குரங்குகளும் தாவி ஓடி விளையாடின. அதிலிருந்து ஆரம்பித்து, பேச்சு, குரங்கிலிருந்து வந்த மனிதன் பற்றிய டாபிக்குக்கு வந்தது. ஆரம்பத்தில், குரங்கு மனிதன் ,கொஞ்சம் கொஞ்சமாக எப்படி இன்றைய மனிதனாக மாறினான் என்பதை பற்றி கொஞ்சம் வகுப்பெடுத்தாள். (ஸ்ஸ்...ப்பா!!)

ஒவ்வொரு ஸ்டேஜிலும் எப்படி மாற்றங்கள் வந்தது (வெளித் தோற்றத்தில்தான்) என்று நடித்து வேறு காட்டினாள். அதுதான் ஒரு படம் இருக்குமே, நான்கைந்து ஸ்டேஜுகளில், மனிதன் எப்படி நிமிர்ந்து நடக்கத் துவங்கினான் என்பது போல! நடுவில் எனக்கு டெஸ்ட் வேறு, குரங்கு மரத்தின் மேல் குட்டி போடுமா, மரத்தின் கீழே குட்டி போடுமா என்று! (என்னடா, குரங்குக்கு வந்த சோதனை...ச்சே...என்னோட பொது அறிவுக்கு வந்த சோதனை!!) மரத்தின் கீழேதான் குட்டி போடும், மேலே குட்டி போட்டால் குட்டி விழுந்துடுமே!! ஹிஹி.... அப்புறம், குரங்கிலிருந்து படிப்படியாக, வந்த அந்த மனிதன், எப்படி குகைகளில் வாழ்ந்தான், ஆடிப்பாடினான்,நெருப்பைக் கண்டு பிடித்தான்,குடும்பத்தோடு வாழ்ந்தான் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
குடும்பம் என்றதும், பப்புவுக்கு திடீரென்று, ஒரு சந்தேகம் வந்துவிட்டது. (குடும்பம் என்றாலே குழப்பம்தான் போல!!) "ஆச்சி, பாய் மட்டும் இருந்தா குழந்தை வருமாப்பா, கேர்ல்லருந்துதானே குழந்தைங்க பொறக்கும்? அப்போ, குரங்குலேருந்து மனுசந்தானே வந்தான், குழந்தைங்க எப்படி பொறந்துது, காரணம் சொல்லு" (காரணமா? அவ்வ்வ்வ்...ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டா, பப்பு இப்படிதான், சம்பந்தமேயில்லாத வார்த்தையை சொல்லிவிடுவாள்!)
'என்ன காரணம் சொல்லணும்...புரியலையே' என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.நடுவில், 'புரியலை' என்று சொல்லிவிட்டால், 'உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்" என்று அலுத்துக்கொண்டு போய்விடுவாள். அதனால், சமாளிப்பதற்காக, 'ம்ம்ம்ம்' என்று மொபைலை நோண்டிக்கொண்டிருந்தேன். 'புரியலை, இன்னொரு தடவை சொல்லு' என்றெல்லாம் தொணதொணக்காமல்,கொஞ்சம் அமைதியாக இருந்தால், சிலசமயம் அவளே விளக்குவாள். "குரங்குலேருந்து பாய்தான் வந்தான் இல்ல, பாய்க்கு குழந்தை பொறக்குமா? இல்லதானே"
அவ்வ்வ்வ்!! புரிந்துவிட்டது!
யப்பா புண்ணியவான்களா, கொஞ்சம் அந்த குரங்குலேருந்து மனிதன் வந்த படத்தில், ஒரு பெண்ணையும் சேர்த்துதான் வரைந்து வையுங்களேன்!! என்னமாதிரியெல்லாம் நாங்க கன்ஃபியூஸ் ஆக வேண்டியிருக்கிறது!!

Sunday, May 12, 2013
பப்பு டைம்ஸ்
என்முன் வந்து நாக்கை சப்புக்கொட்டி காட்டிக்கொண்டிருந்தாள் பப்பு.
என்னன்னு கேட்டதுக்கு, கையிலிருந்து எடுத்து சாப்பிடுவது போல ஆக்சன்! "ஆ!!
பாயாசமா?" என்றதும் மேலும் கீழும் தலையை ஆட்டினாள். "எனக்கு? எனக்கும் போய்
எடுத்துட்டு வாப்பா?" என்றதும்,
"பாயாசம்? ஆர் பாய்சன்?" என்று கேள்வி வருகிறது....அவ்வ்வ்வ்வ்..(இத்தனைக்கும் குரலை ரொம்ப சாஃப்டாக வைத்துக்கொண்டுதான் கேட்டேன்...ஹிஹி)
"ஆயா, ஆச்சிக்கு ஒரு கப்-ல பாய்சன் வேணுமாம்" என்று கத்தியபடி சமையலறைக்கு ஓடிவிட்டாள்!
"நீயெல்லாம் ஒரு அம்மாவா, நீ ஒரு டப்பி" என்று பல்பு வாங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் 'பிரகாசமான டப்பி தின வாழ்த்துகள்'!!
************************************
ஒரு பெண், தன் கைகளில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை ஏந்தியிருப்பதைப் போன்ற படத்தை வழியில் பார்த்தோம்.ரியல் எஸ்டேட் விளம்பரமாக இருக்கலாம்.
"ஆச்சி, அவங்க பில்டிங்கை கையில வைச்சிருக்காங்க பாரு. பில்டிங்கையே கையில தூக்கிட்டாங்களா?! அவங்க ஜையன்ட்டா ஆச்சி? அப்போ, நாம அவங்களுக்கு எலி மாதிரி இருப்போமா? நமக்கு எலி எலி.அவங்களுக்கு நாம எலி!எப்படி ஆச்சி?!! எலிக்கு நாம ஜையன்ட். அவங்க நமக்கு ஜையன்ட். எலிக்கு அவங்க எப்படி இருப்பாங்க?!! " #interpretations #ஒருசின்னவிளம்பரம் Vs ஒருசின்னஞ்சிறுமூளை

Subscribe to:
Comments (Atom)