Tuesday, December 20, 2011

பப்புவின் ’தினம் ஒரு சிந்தனை’கள்

வேகமாக ஓடி கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொண்ட பிறகு, பப்பு எழுதிய thought for the day:



(அந்த if என்னோட டச்!)

thought for the day என்று, ஒன்றை தினமும் எழுதிச் செல்ல வேண்டும். கூடவே, அதன் அர்த்தமும். ( ’old is gold ’ போல - ஏதோ எனக்கு தெரிந்த தாட் ஃபார் த டே! ) இதற்காக, நெட்டில் தேடி சிலதை பிடித்து வைத்திருந்தேன். ஆண்ட்டி வேறு, ஷார்ட்டா இருக்கணும் என்று வேறு சொல்லியிருந்தார். பப்புவிடம் சொன்னால் ம்ஹூம். கேட்கவேயில்லை. ”நாமளேதானே தாட் பண்ணி எழுதனும்?” என்று தினமும் அவளாக எதையாவது எழுதுகிறாள். (அநேகமாக பெரும்பாலும் அவளது அனுபவத்திலிருந்து - மேலே இருப்பது போல). அதைவிட ஹைலைட், எழுதிய தா(ட்)ள்களை கிழித்து விடுகிறாள். “அதான், அந்த டே முடிஞ்சுடுச்சே!” என்பது அவளது பதில்.

சாம்பிளுக்கு சில:
you eat carrots, you get powerful eyes;
you do good habits then only you will be perfect;
obey your mother's words, otherwise they call you bad gul; (”டாய், நீ பண்ணாததை எதுக்கு எழுதறே?” ”தாட் ஃபார் த டேல்லாம் சும்மாதான?”)
eat well before sleeping;

அநேகமாக, இவையெல்லாம் அவ்வவ்போது பப்பு காதில் நாங்கள் ஓதியது என்று நினைக்கிறேன். ’கேரட் சாப்பிட்டாதானே கண்ணு நல்லா தெரியும்’, ’நைட்ல சாப்பிடாம தூங்கினா காலையில எழுந்திருக்கவே முடியாது’, ’கீழே தள்ளிட்டா எடுத்து வைக்கணும்’, ’கட் பண்ண பேப்பரை டஸ்ட் பின்லே போடு’ முதலியன...

போதாததற்கு, அவளே ஒரு ’தாட் புக்கும்’ செய்து வைத்திருக்கிறாள். அதைப்பார்த்தால் திருக்குறள் ஓலைச்சுவடி போல இருக்கிறது. ’தாட்’ இல்லாத நாட்களில், அதில் ரெடிமேடாக இருப்பதை பார்த்து நோட்டில் எழுதிக் கொள்கிறாள்.

ம்ம்...இதெல்லாம் எங்கே போய் முடியுமோ? ஒருவேளை, பதிவராகும் அறிகுறியோ, என்னவோ?!!

10 comments:

ராமலக்ஷ்மி said...

// ’தாட்’ இல்லாத நாட்களில், அதில் ரெடிமேடாக இருப்பதை பார்த்து நோட்டில் எழுதிக் கொள்கிறாள்.//

பலே!

//ஒருவேளை, பதிவராகும் அறிகுறியோ, என்னவோ?!!//

எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது:)! காத்திருக்கிறோம்.

நட்புடன் ஜமால் said...

பதிவராகும் அறிகுறியோ, என்னவோ?!! ]]

why this kolaveri mam ...

----------

I just always imagine what ever pappu do will be done by my daughter ...

interesting ...

அமைதிச்சாரல் said...

//ஒருவேளை, பதிவராகும் அறிகுறியோ, என்னவோ?!!//

அதே.. அதே :-)

உங்களுக்குப் போட்டியா வீட்லயே ஆளு ரெடியா இருக்கு போலிருக்கே :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

ஆயில்யன் said...

//கீழே தள்ளிட்டா எடுத்து வைக்கணும்//

விழுந்த பல், போன இடம் பத்தி 1ம் சோக தாட் எழுதலியா? :)

தீஷு said...

// ’தாட்’ இல்லாத நாட்களில், அதில் ரெடிமேடாக இருப்பதை பார்த்து நோட்டில் எழுதிக் கொள்கிறாள்.//

சூப்ப‌ர் ஐடியா!!

தமிழ்ப்பறவை said...

:))))))))))))))

ஆகாய நதி said...

//ஒருவேளை, பதிவராகும் அறிகுறியோ, என்னவோ?!!//
:)

May be... She is ur daughter!! :)

but it's really a good habit!

sakthi said...

:-)

சுரேகா.. said...

:))