ஊருக்குத் திரும்பிவிட்டாலும், இன்னும் மனம் ஹம்பியிலிருந்து மீளவில்லை.
திரள் திரளான கற்பாறைகள், அதன்மேல் முளைத்து உருண்டு மறையும் சூரியன்,
பழங்கால மண்டபங்கள், சிற்பங்கள், கோயில்கள், மெல்ல ஓடிக்கொண்டிருக்கும்
துங்கபத்திரா, காந்தத்தை நோக்கி ஈர்க்கப்படும் இரும்புதுகள்கள் போல ஆற்றை
நோக்கி செல்லும் பயணிகள், கோவில் யானை, சிநேகமான லம்பாடிகள்
எல்லாவற்றுக்கும் மேல் ஹம்பியை சுழன்று வரும் வரலாறு, குரங்குகள் என
இன்னும் இன்னும் ஹம்பிக்குள்ளேயே மூழ்கியிருக்கிறேன்.
மாதங்கா மலைமீது உதிக்கும் சூரியனோடு புத்தாண்டு வாழ்த்துகள்!