பீச் இல்லன்னா சாலையோரத்துல நடக்கும்போது 'கால் வலிக்குது' கம்ப்ளெயின்ட்
வராம இருக்க இந்த விளையாட்டை விளையாடுவோம். மேலே வானத்தை பார்த்து
ஆளுக்கொரு மேகக்கூட்டத்தை தேர்ந்தெடுத்துக்கிறது; அதையே நோக்கி பார்த்து
அந்த மேகக்கூட்டத்தை கலைக்கிறது. அதாவது, நாம அதை கான்சென்ட்ரேட் பண்ணி
பார்த்துக்கிட்டேயிருந்தா டிஸ்அப்பியர் ஆகிடும்கிறது நம்பிக்கை. இல்லேன்னா,
இன்னும் கொஞ்சம் நல்லா கான்சன்ரேட் பண்ணனும்கிறதுதான்
டெக்னிக்...(கான்சன்ட்ரேசனை வளக்கிறேனாம்)..ஹிஹி...இல்லேன்னாலும் மேகம்
கலைஞ்சுடும்கிறதை இன்னும் பப்பு கண்டுபிடிக்கலை. அவ கான்சன்ட்ரேட்
பண்ணிதான் கரைக்கறான்னு இப்போ வரைக்கும் நம்பிக்கிட்டிருக்கா.
பப்பு
வளர வளர, நானும் இன்னொரு ஆயாவாகிட்டேன்கிறதை நானே நம்பலைன்னாலும் அதுதான்
உண்மை. அதுலே, ஆறரைக்கே எழுந்து 'பப்பு, ஏழு மணியாகிடுச்சு;ன்னு அலறி அவளை
பயமுறுத்தலேருந்து, 'நீ இன்னும் நல்லா கான்சன்ட்ரேட் பண்ணா எதையும்
சீக்கிரமா செஞ்சுடுவே' ங்கிறதுலேருந்து...'உன்னை விட சூப்பரா புத்திசாலியா
இந்த உலகத்துலே வேற யாருமே இல்ல'ன்னு பப்புவை நம்ப வைக்கிறது வரை
அடக்கம்.இப்படியே ஆயாவோட சின்ன வெர்சனாகிட்டேன். அதுலே, 'நீ இன்னும் நல்லா
கான்சன்ட்ரேட் பண்ணி....' ரொம்ப கான்சன்ட்ரேட் பண்ணி சொல்லிட்டேன்றதை
நேத்துதான் உணர்ந்தேன்.
சாயங்காலம் காலார நடந்துபோய் ஐஸ்க்ரீம்
வாங்கிட்டு திரும்ப வரோம்... பப்பு ஒரு இடத்துலே நின்னுட்டு வரவே இல்ல.' வா
வா'ன்னு கூப்பிட்டாலும் அண்ணாந்து பார்த்துகிட்டு நிக்கறா. எங்களை
பார்த்து எதிர்லே பைக்லே வந்த ஒரு பேமிலேயே அண்ணாந்து வானத்தை பார்த்துட்டு
வேற போனாங்க. எதிர்லே நடந்து வந்தவங்க எங்களை ஒரு மாதிரி பார்த்துட்டு
போனாங்க. இதெல்லாம் பார்த்து அலெர்ட் ஆகி கூப்பிட்டதும், பப்பு , 'ஹேய்,
ஆச்சி, இரு, நான் நல்லா கான்சன்ட்ரேட் பண்ணி நிலாவை அழிச்சுட்டு
வந்துடறேன்'ன்னு சொன்னதும் பகீர்னு ஆகிடுச்சு.
4 comments:
//நான் நல்லா கான்சன்ட்ரேட் பண்ணி நிலாவை அழிச்சுட்டு வந்துடறேன்//
ஹா ஹா முல்லை..கலக்கல்..மிகவும் ரசித்தேன்..
நன்றி தியானா!
//நான் நல்லா கான்சன்ட்ரேட் பண்ணி நிலாவை அழிச்சுட்டு வந்துடறேன்'//
இதுக்கு எதுக்கு கான்சன்ட்ரேட் பண்ணனும். ஒரு ரப்பர் வாங்கிக்கொடுங்க முல்லை, நிலாவ அழிக்க ;-)
ஆகா,சாந்தி மாரியப்பன் ! நல்லா சேர்ந்தீங்க செட்டு! :))
Post a Comment