Monday, July 04, 2011

பப்பு டைம்ஸ்

பப்பு இப்போதெல்லாம் ஒரு போதும் முடியாத, நீள நீளமான கதைகளைச் சொல்கிறாள். அம்மா, பெரிம்மாவெல்லாம் ஊருக்குப் போனபிறகு கதைக்கேட்க அவளுக்கு கிடைத்திருப்பது நாந்தான். ஆனால், கதையைக்கேட்டுக்கொண்டு பாதியிலேயே நான் தூங்கிவிடுகிறேன்.

சில மறக்க முடியாத கதைகள் :

ஒரு ஆண்டி - அவங்களுக்கு மழையில நனைஞ்சா பிடிக்காதாம். குடை எடுத்துட்டு போவாங்களாம். அவங்க வீட்டுல ஒரு செடி இருந்துச்சாம். அதுக்கு தண்ணியே ஊத்தமாட்டாங்களாம். ஒருநாள் மண்புழு வந்து, நாந்தான் பாம்பு னு அவங்களை பயமுறுத்துச்சாம். ஆ,பாம்புன்னு அவங்க் கத்துனாங்களாம். அந்த அங்கிள் வந்தாராம். அவங்களையும் பயமுறுத்துச்சாம். அங்கிள் சொன்னாராம், அது பாம்பு இல்ல, மண்புழுதான் நீ செடிக்கு தண்ணி ஊத்தலைன்னா
இப்டிதான் வரும்னு சொன்னாராம். ஆண்ட்டி தண்ணி ஊத்துனாங்களாம். செடி வானத்தை தாண்டி வளந்துடுச்சாம். ஆண்ட்டி செடியில சுண்டைக்காய் பறிக்கபோனாங்களாம். போய் போய் மேலே போய்ட்டாங்களாம். எறங்கி வரவே தெரியலையாம். அங்கிளும் ஏணி வைச்சு பாத்தாங்களாம் அவங்களால எறங்கவே முடியலையாம். அங்கிளும் மேலே மேலெ போய்ட்டாங்கலாம்.

ரெண்டு பேருக்கும் இப்போ எறங்க முடியலையாம். ரெண்டு பேரும் எப்டிடா இறங்குறதுன்னு அழுதுக்கிட்டு இருந்தாங்களாம். அப்போ ஒரு ஈகிள் வந்து அவங்க ரெண்டு பேரையும் தூக்கிட்டு போய் அதோட கூட்டுல விட்டுச்சாம். பாம்பு ஏதாவது வந்தா சொல்லுங்க, எனக்கு அதுதான சாப்பாடுன்னு சொல்லிட்டு பறந்து போய்டுச்சாம். அப்போ ஆண்ட்டிக்கு ஒரு ராக்கெட் கெடைச்சுச்சாம்.

அது என்னா ராக்கெட்ட்டு? ஓட்டை ராக்கெட்டு. ஓட்டை ராக்கெட்டுல ஏறி பறந்தாங்க பாரு, ஆத்துல விழுந்துட்டாங்க. ஆத்துல எதுமேல விழுந்தாங்க? முதலை முதுகு மேல. முதலை அவங்களை சாப்பிட வந்தப்போ ஆண்ட்டி என்ன்னா சொன்னாங்க, அதோ கரையில ஒரு மான் நிக்குது பாரு, அதை சாப்பிட்டா டேஸ்டியா இருக்கும், நீ என்னை கரையில விடு, நான் புடிச்சு தரேன்னு சொன்னாங்க.

முதலை அவங்களை கரைக்குத் தூக்கிட்டு வந்தது. கரையில் ஜம்ப் பண்ணிட்டு ஆண்ட்டி என்னா பண்ணாங்க, மானை பிடிக்க போனாங்க. மான் என்னா பண்ணுச்சு, சிங்கத்தை கூப்பிட்டுச்சு....சிங்கம் புலியை கூப்பிட்டுச்சு, புலி நரியை கூப்பிட்டுச்சு, நரி யானையை கூப்பிட்டுச்சு, யானை கரடியை கூப்பிட்டுச்சு....


அதுக்குள்ள நான் zzzzzzzz....மீதி கதை என்னாச்சுனு தெரியலை.




ஒருவீட்டுல கோழி, ஆடு,மாடு இருந்துச்சு. அவங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்தாங்க. அப்போ அவங்க என்னா பண்ணாங்க, நாம் நாளைக்கு கோழியை சிக்கன் பண்ணி கொடுக்கலாம்னு பேசிக்கிட்டாங்க. அதை கோழி கேட்டுட்டு ஓடி போய்டுச்சு.
அப்புறம், சரி, நாம் ஆடு காலை வைச்சு நாளைக்கு சிக்கன் (மட்டன் லெக் பீஸ்!!) பண்ணலாம்னு பேசிக்கிட்டாங்க. ஆடு அதைக் கேட்டுட்டு ஓடிடுச்சு.
ஆடு ஓடினதும் என்னா பண்ணாங்க, சரி, மாடை நாளைக்கு நாம சிக்கன் பண்னலாம்னு பேசிக்கிட்டாங்க. மாடும் அதைக்கேட்டுட்டு ஓடிடுச்சு.

அப்புறம் மாடு என்னா பண்ணுச்சு, மூணு வீடு கட்டுச்சு, ஒரு வீடு மாடுக்கு, இன்னொன்னு ஆடுக்கும் கோழிக்கும். ஆடு என்னா சொல்லுச்சு, சொல்லு?
(தெரியலையே!) ரெண்டு வீட்டுலயும் நானே இருந்துக்கறேன்னு சொல்லுச்சு.மாடு, ஒரு வீடுதான் உனக்கு, இன்னொன்னு கோழிக்குன்னு சொல்லிச்சு.மூணு பேரும் மூணு வீட்டுல இருந்தாங்க. அப்போ பெரிய காத்து வந்துச்சு.

இது இப்போதைக்கு முடியாதுன்னு நெனைச்சுக்கிட்டே, நான் zzzzzzzzzzzzzzzz




I'm sorry என்று ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தோம். இரு நண்பர்களுக்கிடையே சண்டை வருகிறது. பேசாமல் இருக்கிறார்கள். அப்புறம், சாரி சொல்லிவிட்டு ஒன்றாக ஆகிவிடுகிறார்கள். கதையை சொல்லிவிட்டு, ’சண்டை போட்டா சாரி சொல்லணும்’ என்று உணர்த்த விரும்பினேன்.

“எப்போல்லாம் நீ சாரி சொல்லுவே”

“யாரையாவது ஹர்ட் பண்ணா, அவங்களுக்கு புடிக்காதது பண்ணா சாரி
சொல்லுவேன்” - பப்பு

”உன் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் யாரு?”

“வர்ஷினி, வெண்மதி, அபிஷேக்” - பப்பு

”அவங்களோட சண்டை போடுவியா”

“ஓ, வேன்ல சண்டை போடுவோம். ஆனா வாரத்துக்கு ஒரு தடவைதான் ஆச்சி” - பப்பு

”அப்புறம் என்ன பண்ணுவ”

”சண்டை போட்டா ஆண்ட்டிக்கிட்டே போய் சொல்லிடுவோம்!” - பப்பு

8 comments:

சந்தனமுல்லை said...

தமிழ்மணம் கருவிப்பட்டையை காணவில்லையே?! என்ன செய்ய வேண்டும்?

ஷர்புதீன் said...

//தமிழ்மணம் கருவிப்பட்டையை காணவில்லையே?! என்ன செய்ய வேண்டும்?//

கிளிஞ்சுது போங்க, அதுனாலத்தானே பதிவுலகமே கொஞ்ச நாள் குடும்ப வேலைகளை பார்க்குது., ஹி ஹி ஹி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தமிழ்மணம் கருவிப்பட்டையை காணவில்லையே?! என்ன செய்ய வேண்டும்?..//
தமிழ்மணத்துல பிரச்சனை வெயிட்.எல்லா தளத்திலும் டூல் பார் தெரியலை

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்த கதைகளில் நிறைய சொற்கள்,விலங்குகள் வருவது போல இயற்கையாக அமஞ்சிருக்கு.இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.உங்க பப்பு சமர்த்துதான்

அம்பிகா said...

பப்பு வின் கதைகள் ஆச்சர்யப் படுத்துகின்றன.!!!!
முழுக்கதையையும் ?? கேட்டு எழுதுங்கள் முல்லை.

நட்புடன் ஜமால் said...

ஹலோ நீங்க தூங்கமா இருந்திருந்தா எங்களுக்கு முழு கதையும் தெரிஞ்சிருக்கும்ல

( different thoughts from pappu )

ராமலக்ஷ்மி said...

இப்படியா தூங்கிப் போறது? முதல் கதை கோர்வையாக ரொம்ப நல்லா வந்திருக்கு.

//அதோ கரையில ஒரு மான் நிக்குது பாரு, அதை சாப்பிட்டா டேஸ்டியா இருக்கும், நீ என்னை கரையில விடு, நான் புடிச்சு தரேன்னு சொன்னாங்க.//

ப்ரில்லியண்ட்!!

//மாடை நாளைக்கு நாம சிக்கன் பண்னலாம்னு பேசிக்கிட்டாங்க.//

:)))))!

//தமிழ்மணம் கருவிப்பட்டையை காணவில்லையே?! என்ன செய்ய வேண்டும்?//

ஒண்ணும் செய்ய முடியல:)!

ஒடியன் said...

கதைகள் பெரிசாவது பப்புவின் கிரியேட்டிவிட்டியின் வளர்சியை காட்டுகிறது பப்பு தொடர்க