
காக்கையை ஏமாற்றிய நரியும்
நரியை ஏமாற்றிய காக்கையும்
கொக்குக்கு விருந்து வைத்த ஓநாயும்
ஒநாய்க்கு விருந்து வைத்த கொக்கும்
திராட்சைக்கு ஏங்கிய நரியும்
பாட்டிவீட்டு தோட்டத்தில்
உலாவிக்கொண்டிருந்தன கேட்பாரற்று!
சன்,விஜய், கலைஞர் அலைவரிசைகளில்
கரைந்துப் போயிருந்தாள் பாட்டி!!
பஞ்ச காலத்தில்
காட்டில் தொலைத்து விடப்பட்ட
சித்திரக்குள்ளனும் அவன் சகோதரர்களும்
அலைந்துக்கொண்டிருந்தனர்...
தடயத்திற்காய் விட்டுவந்த
அப்பத்துண்டுகளைத் தேடி!!!
1 comment:
நல்ல கவிதை.
//தடயத்திற்காய் விட்டுவந்த
அப்பத்துண்டுகளைத் தேடி!!!//
வெகு அருமை முல்லை. மீள் பதிவாக பகிர்ந்து கொள்ளுங்களேன்.
Post a Comment