Friday, July 18, 2008

பதிவுலகத்திற்கு...

வணக்கம்,


”பசும் புல்வெளியில் துள்ளித் திரிய மானுக்கென்ன தயக்கமா,
நந்தவனத்தில் தேன் குடிக்க வண்டுகென்ன தயக்கமா...
உங்கள் முன் உரையாட அடியேனுக்கென்ன தயக்கமா?” - இப்படிதாங்க ஏதொவொரு பேச்சுப் போட்டில பேசி ஜெயிச்சிட்டேன், ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது!!
அப்புறமா, ”பாரதியாம் பாரதி ” - இந்த ரேஞ்சுல கவிதை வேற எழுதி இருக்கேன்.
இதுல, டீச்சருங்க கொடுத்த உற்சாகத்தில தமிழ் நம்ம நாக்குல துள்ளி விளையாடுதுன்னு மமதை வேற!! இதையெல்லாம் ஒரு பெரிய தகுதியா நினைச்சு இந்த ”சித்திரக்கூடத்தை “ தொடங்கினதுல, இப்போ நட்சத்திரமாவும் ஆகிட்டேன்.

அதனால, நீஙக இப்போ திட்டனும்னா, இல்ல ஆட்டோ அனுப்பனும்னா, அனுப்ப வேண்டிய முகவரி : இதோ!! ஏன்னா, சுட்ஜி தான், நீங்க ஏன் தமிழுக்கு தொண்டாற்றக்கூடாதுன்னு, சும்மா இருந்த சங்கை...! 2004-ல “ஹனி டியூ' ன்ற பேரில ஒரு வலைப்பூ தொடங்கிட்டு, அதை சுத்தமா மறந்திட்டேன்,ஒரே ஒரு பதிவு ஆங்கிலத்தில போட்டுட்டு. அவ்வளவு சுறுசுறுப்பு!


நம்ம ஓமப்பொடியார் சுதர்சனின் வலைப்பூவின் வழியாக நான் வந்து இறங்கிய இடம் தமிழ்மணம், தேன்கூடு!. ஃப்ரீயா இருக்கும்போது படிக்கலாம்னு புக்மார்க்கிட்டு, அப்பப்ப படிச்சிகிட்டிருந்தது போய், பத்து நிமிடஙகளுக்கு ஒரு முறை திறந்து பார்ப்பதனால் டாஸ்க் பாரில் நிரந்தரமாகி விட்டது தமிழ்மணம் இப்போது!!

என்னோட சிறு வயது நினைவுகள்,நிகழ்வுகளை பதிந்து வைத்துக்கொள்வதற்காக ஆரம்பித்த வலைபதிவு இப்போது என் மகள் பப்புவின் குறும்புகளையும், மழலை பேச்சுகளையும் சுவாரசியமான நிகழ்வுகளையும் படம் பிடிக்கிறது!வளர்ந்தப்பின், அவள் ஒரு நாள் இதை படிக்கையில், அவள் எவ்வள்வு சுவாரசியமானவளாயிருந்திருக்கிறாளென்பதை
அவளுக்கு உணர்த்தக்கூடும், இந்த வலைப்பூ! (போதுமா முன்கதை சுருக்கம்!!)


ம்ம்..திங்கள் காலையில் ஆபிஸ் லாகின்-ஆனதும் செய்யும் முதல் வேலை, யாரு இந்த வார ஸ்டார்ன்னு பார்க்கறதுதான்!! எனக்கு அது ஒரு த்ரில்!!
அநேகமா, நிறைய பேரு அப்படிதான்னு நினைக்கிறேன்...

உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் என்னால் எழுத இயலாமல் போகலாம்!
மனப்பாடம் செய்துக்கொண்டு, மேடையில் ஏறிய அந்த சிறுமி இன்னும் என்னுள் ஒளிந்துக்கொண்டு, அவ்வப்போது வெளிப்படலாம்!!

பொறுமை காத்து ஆதரவு அளிக்கவும்!!

Tuesday, July 15, 2008

நினைவுகளின் பிரதிபலிப்புகள்

ஆண்டுத் தேர்வுகள் முடிந்ததும் விடுமுறைக்கு வடலூர் செல்வது வழக்கம்.
பன்னிரண்டம் வகுப்பு பரீட்சைகள் முடிந்ததும், நுழைவுத்தேர்வுக்கான கோச்சிங் கடலூரிலோ அல்லது நெய்வேலியிலோ என்று முடிவானது. நெய்வேலி செயின்ட்.பால்ஸ் பள்ளியின் கோச்சிங்கில் சேர்ந்தேன். பொதுவாக பள்ளியில் நடக்கும் கோச்சிங் கிளாஸில் அந்த பள்ளி மாண்வர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமே சேருவார்கள். இப்படி ஊர் விட்டு ஊர் வந்து படிப்பவர்கள் மிகவும் அரிது! அந்த மாணவர்கள் எல்லாம் ஒரு குருப்பாக, அல்லது ப்ரெண்ட்சாக இருப்பார்கள். நான் மட்டும் odd girl(!!) out!! ஒரு பதினைந்து-இருபது பெண்கள் இருந்தார்கள். எல்லாம் நெய்வேலி பெண்கள் கான்வென்ட் பள்ளி! ஒரு சிலர் கடலூர் க்ளூனியிலிருந்து!! கோச்சிங் ஒரு 30 நாட்கள் மட்டுமே! ப்ரேக் டைம் 15 நிமிடங்கள்!!
அனைவருடைய பெயர்களும் தெரிவதற்குள்ளாகவே நாட்கள் முடிந்து போயின! I made some wonderful friends there...and lost contacts!

நேற்று மாலை எனது ஆர்குட் பக்கத்தில் ஒரு மின்னழைப்பு!! அதில், "செயின்ட் பால்ஸ் கோச்சிங்கில் படித்த அதே சந்தனமுல்லையா?" என்று ஸ்கிராப்!! பெயரோ, பேசியிருக்கிறேனாவென்றும் ஞாபகத்தில் இல்லையென்றாலும், பத்து நீண்ட வருடங்களுக்கு (என் வயதை கணக்கிட்டு விட்டீர்களா!?!) முன்னால் சந்தித்த நபர் என் பெயரை நினைவு கொண்டிருப்பது, எதிர்பாராத தருணத்தில் ஒரு பூங்கொத்தை பெறுவதைப் போல் மகிழ்ச்சி தருவதாயிருந்தது. தொடர்பை விட்டுப் போன எத்தனையோ எனது பால்ய கால நண்பர்களையும் என் தொடர்பு எல்லைக்குள் கொண்டு வந்த ஆர்க்குட்டுக்கு நன்றி!!

x-----x-----x-----x------x----x
சாலையில் எனக்கு முன் செல்லும் ஆட்டோவில் வாசகங்கள் இருந்தால் எப்படியேனும் சந்து பொந்துக்களில் புகுந்து படித்துவிட முயல்வேன். பல நேரங்களில் பைபிள் வசனங்கள், கீதோபதேங்கள் அல்லது "சுருக்" வசனங்கள்/வாழக்கை தத்துவங்கள், சுயபுலம்பல்கள்/கவிதை போன்றவை மற்றும் random thoughts!! இன்று படிக்கக் கிடைத்தது,

" உங்கள் வழிச்செலவு எங்கள் வாழ்க்கைச் செலவு!"

how true!! ப்ளாக்குக்கு முன்னோடி இந்த ஆட்டோ வாசகங்கள்.. :-))!!

Monday, July 14, 2008

ஹல்வா வாலா ஆகையா...

நான் முதன்முதலில் பார்த்த இந்திப்படம் என நினைக்கிறேன்.
இந்த பாடல் மட்டுமே மனதில் நின்றது..மிகவும் பிடித்த பாட்டு!
படத்தை ஃபாலோ பண்ணக்கூட தெரியாத வயது!!
கேட்க ஆசை வந்தது திடீரென!!

Halwa Wala Aa Gaya -

பப்புவுக்கு ஒரு கடிதம்

பப்புக்குட்டி,

இன்றுமுதல் உனது மாண்டிஸோரி பள்ளிக்கு போகத் தொடங்கியிருக்கிறாய்.
ஓராயிரம் எண்ணங்களோடும், பல்வேறு உணர்ச்சிகளும் என்னுள்!!
படுக்கையிலிருந்து எழுமுன்னே "போ மாட்டேன்" என அழத் தொடங்கியிருந்தாய்.அதை பார்த்ததும். "நான் ரொம்ப கொடுமைக்காரியோ?" என்று தோன்றியது!!
ஆனால், பப்பு... வெளியில் ஒரு பெரிய உலகம் காத்திருக்கிறது, for you to conquer!! பப்பு..எனக்குத் தெரியும், பள்ளிக்கூடத்திற்கு செல்ல நீ அழவில்லை..
வீட்டை/எங்களை விட்டு செல்வதற்குதான் அழுகிறாயென!!
பள்ளிக்கூடம் உனக்கு ரொம்பப் பிடிக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது..
நீ வகுப்பிற்கு சென்றவுடன் accommodate-ஆகி விட்டாயென்று கேட்டதும்!!
இனி உனக்கு அம்மா,அப்பா, வீடு மட்டுமே உலகம் இல்லை!!
உலகம் சுவாரசியங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்ததுவென விரைவில் கண்டுக்கொள்வாய்!

ஆனால், என்னை ஆச்சரியப்படுத்துவது எதுவெனில்...பப்பு..
நீ வளர்ந்துவிட்டாய்..பள்ளி செல்வதற்கு...தனியாக வேனில் செல்வதற்கு!!
எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது....உன்னோடு மருத்துவமனையிலிருந்து
முதன்முதலாய் வீட்டிற்கு வந்தது..என் கைகளுக்குள் இருந்த நீ இறங்கி தவழ
ஆரம்பித்தாய்..பின் என் விரல்கள் பிடித்து நடக்க ஆரம்பித்தாய்..இன்று என் சொற்களில்
எல்லைகளில் இருக்கிறாய்!! சில காலங்கள் என் மேலும், உன் அப்பாவின் மேலும் படுத்துறங்கினாய்..பின் எங்கள் கைகளில்..இப்போது தலையணையில்!!
இங்கு நீ என் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை பற்றி சொல்லவில்லை...
நீ சுதந்திரமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி..!! நான் சொல்ல வருவது,
உனக்கும் எனக்குமான இடைவெளி ஒவ்வொரு கட்டத்திலும் அதிகரித்துக் கொண்டிருப்பதைப் பற்றி!! இது இன்னமும் அதிகரிக்கும் என அறிந்திருகிறேன்..எனக்கு விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும்!!

மேலும் நேற்று நடந்ததைப் பற்றி.....
கிளினிக்-கில் இருந்த சறுக்குமரத்தில் விளையாடிகொண்டிருந்தாய்.
உன்னைவிட சிறுகுழந்தைகள் வரும்போது பொறுமைக் காத்தாய்!! (பெருமையாய் இர்ந்தது!!)
உன் வயதைவிட பல வருடங்கள் பெரிய ஒரு பெண்ணும், அவளது சகோதரனும்
அந்த இடத்தையே இரண்டு படித்திகொண்டிருந்தார்கள்..அங்குமிங்கும் ஓடிக்கொண்டு, சாயும் நாறகாலிகளை இழுத்துக்கொண்டு! பின் சறுக்கு மரத்தில் அவர்கள் இருவரும் வேறு யாருக்கும் வாய்ப்புக் கொடுக்காமல் வேகமாகவும் விளையாடினார்கள்..உன்னையும் சேர்த்து!! ஆனால், நீ அவர்களுக்கு முன் சென்று சறுக்கு மரத்தின் படிகளில் ஏற முயற்சித்தாய்!! அவர்கள் வேகத்திற்குமுன், உன் வேகம் எடுபடவில்லை!! ஆனால், அவர்கள் செய்வது உனக்கு பிடிக்கவில்லை! முகம் சுளித்தாய்!! அவர்களோடு போட்டியிட்டாய்!
உனக்குத் தெரியுமா பப்பு, உலகம் இப்படிப்பட்டவர்களாலும் நிறைந்ததுதான்!!
நான் வந்து உனக்கு சறுக்க வழி செய்திருக்கமுடியும்....எப்போதும் நீ என்னை எதிர்ப்பார்க்க தொடங்கிவிட்டால்..அதேபோல் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் என்னால் வர முடியாதே....!! அந்த இடத்தில் உன்னருகில் வந்து சமாதானப்படுத்தி, divert-செய்து வேறு விளையாட்டிற்கும் அழைத்து சென்றிருக்கலாம்தான்!!! அந்த சிச்சுவேஷனை நீயாகவே கையாளவேண்டுமென நினைத்தேன்..பப்பு, உன்னுடைய அந்த instinct, அந்த இயல்பான போட்டி மனப்பான்மை நான் பார்த்திராத ஒன்று!


பள்ளிக்கூடம் உனக்கு நிறைய கற்றுக்கொடுக்கக் கூடும்...வாழ்க்கையையும்!!!

வாழ்த்துக்களுடன்..
அம்மா!!

முதல் நாளின்று....

எந்த குழந்தையுமே ரொம்ப adjustable-தான்!
எதையுமே, நாம் முன்கூட்டியே சொல்லி அவர்களை மனதளவில் தயார் படுத்திவிட்டால் போதும்! இந்த உத்தி எனக்கு, பப்புவின் 9 மாதங்களான போதிலிருந்தே உதவியிருக்கிறது!!
(இதை உத்தி என்று சொல்வதை விட, குழந்தைக்கு விளக்கி சொல்வது நமது கடமை!! )
அதாவது, நாம் சொல்லி அவர்கள் புரிந்துக்கொள்ள ஆரம்பிக்கும்போதிலிருந்து!
அதற்காக எல்லாவற்றிலும் இதை எதிர்பார்ப்பது நிச்சயம் கைக் கொடுக்காது!!

நாங்கள் வேலைக்கு செல்லும்போது, அவளை விட்டு செல்கிறோம் என அவள் அழுவாள்.
அவளிடம் பொறுமையாக, வேலைக்கு போய்ட்டு அம்மாவும்,அப்பாவும் சாயங்காலம் வந்துடுவோம், லைட் போடும்போது வந்துடுவோம். ஆயா கதவு சாத்தும்போது, நாங்க வந்துடுவோம்,ஆபீஸ் போனாதான் பப்புவுக்கு சாக்லேட் வாங்க முடியும். ஜூ-வுக்கு கூட்டிட்டு போக முடியும். ...என்று சொல்ல சொல்ல அழுவதை நிறுத்தினாள். ஆனால், ஒருநாள் சொல்லிவிட்டால் அதற்குபின் அழவே மாட்டார்கள் என்று பொருள் அல்ல!! இது ஒரு routine process! ஆனால் நல்ல ரிசல்ட் இருந்தது! ஒரு வயதிலிருந்து 2 வயது வரை தொடர்ந்தது! சில சமயம் போகும்போது அழுவாள். நாங்கள் சென்றபின், அதை மற்ந்துவிட்டு, விளையாட தொடங்குவாள்!!

அதேபோல் தடுப்பூசி போட டாக்டரிடம் செல்வதற்கு முன்னும் சொல்லி தயார் படுத்த வேண்டும். அதற்கும் நல்ல பலன் இருந்தது! ஊசி போடும் போது, அல்லது டாக்டர் அறைக்கு செல்ல மறுப்பேதும் காட்ட மாட்டாள்! ஊசி போடும்போது, ஒரு சிறு சத்தம் தவிர அழுகையும் கிடையாது!! எனக்கே ஊசி என்றால் பயம். ஆனால் அவள் காட்டும் மெச்சூரிட்டி, என்னை ஆச்சரியப்படுத்தும்!! காயத்தின் தையல் பிரிக்க சமீபத்தில் நேற்று டாக்டரிடம் அழைத்து சென்றோம். "டாக்டர், உன்னை மேலே பாருன்னு சொல்லுவாரு! நீ மேலே அண்ணாந்து காட்டினாத்தான், அந்த பிளாஸ்டர் எடுக்கமுடியும். அப்புறம் காயம் ஆறிப்போய்டும்! ஜாலியா ஸ்கூல்-ல போய் விளையாடலாம்" என்று பொறுமையாக பலமுறை சொன்னேன். எங்கே, கை வைக்க விடமாட்டாளோவென்று எனக்கு பயம். அதனால் "டாக்டர் காயத்தை காட்டுன்னு சொன்னதும், என்ன பண்ணுவே? எப்படி காட்டுவே?"- என்றுப்ராக்டிஸ் வேறு!! எங்களுக்கு முன்னால் சென்ற குழந்தை, உள்ளே செல்ல மறுத்து அழுகை! எங்கே அதை பார்த்து இவளும் அழுவாளோ என நினைத்தேன்.ம்ம்..இல்லை! உள்ளே சென்றதும், டாக்டர் ஹலோ சொல்ல, வணக்கம் சொன்னாள். அண்ணாந்து காட்டினாள். டாக்டர், அவளை பிடித்துக்கொண்டு அவளது கண்களை மூடிக்கொள்ள சொல்லிவிட்டு தையலை வெட்டினார்! ஒரு சிறு சத்தம்..சிறு அழுகை..இரண்டு செகண்ட்ஸ்..! முடிந்த பிறகு, "பை, தேங்க் யூ"!! டாக்டர் கண்களை மூடிக்கொள்ள சொன்னது, கூரான வெட்டும் கருவியை பப்பு பார்க்காமலிருக்கவாம்!!


இன்று பப்புவின் முதல் நாள் பள்ளியில்.
கடந்த இரு நாட்களாகவே மனதளவில் தயார்படுத்த தொடங்கியிருந்தேன்.
"காலையில வேன் வரும். குளிச்சுட்டு ட்ரெஸ், தொப்பி போட்டுகிட்டு வேன்ல ஏறிக்கணும்! வேன்ல யார்ல்லாம் இருப்பாங்க?" - நான்!

"ஒரு ஆயா, அப்புறம் நெறைய்யா குட்டி பாப்பாங்க, தம்பில்லாம் இருப்பாங்க!! " - பப்பு!!

(ம்ம்..நல்லா ட்ரெய்னா ஆகிட்டா!! )

இன்று காலை எழும்போதே அழுகை!!
என்ன பப்பு, ஏன் அழறே?
" ஸ்கூல் போ மாட்டேன்!! "

படுக்கையிலிருந்து எழுந்திருக்கக் கூட இல்லை!!!
இத்தனைக்கும், யாரும் அவளிடம் ஸ்கூல் செல்வதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை!

சிறிது நேரம் சிணுங்களுக்குப் பின் ரெடியாகி பள்ளிக்கு சென்றாள்.
உள்ளே செல்வதற்குமுன் ஒரு சிணுங்கல்!
ஆனால், உள்ளே சென்றபின்,, ஒரு சத்தமும் காணோம்...என் குட்டிப்பெண்ணுக்கு,
பள்ளிக்கூடத்தில் இருப்பது பிடித்துபோயிருக்குமாயிருக்கும் :-)!!


பி.கு : Pappu needs all your blessings today as she started going school today!!

Thursday, July 10, 2008

முதல் காயம்....

விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும்போது, தவறாமல் கேட்கப்படும் கேள்வி,
அடையாளங்கள். பொதுவாக, தழும்புகள் மச்சங்கள். எனக்கு தழும்புகளுக்கு
குறைவிருந்ததில்லை, கைகளிலும், தாடையிலும்!

பள்ளியில் சேர்க்கும்போது, பப்புவிற்கு என்ன அடையாளங்கள் சொல்லமுடியும்..
என அவ்வப்போது நான் யோசித்ததுண்டு! இடது கண்ணுக்கு கீழ் ஒரு மச்சமுண்டு!!
சரி, அது போதுமா.குறைந்தது இரண்டாவது கேட்பார்களே.....என் மனதில் எழும்
சிறு நினைப்பு!!

இப்போது அந்த கவலையில்லை...:(

பப்பு நாற்காலியிலிருந்து விழுந்து, தாடைக்குக் கீழ் ஒரு வெட்டு..மூன்று தையல்கள்!!

நேரம் - பள்ளி சேர்வதற்கு ஒருநாள் முன்பு (7/7/2008) !!

குறிப்பு : பப்புவின் முதல் காயம்....@ 2 வயது 8 மாதங்கள்!!


ப்ளாஷ்பேக் :

மாடி கைப்பிடியிலிருந்து சறுக்குவது, சில பிள்ளைகளிக்கு த்ரில்லிங் விளையாட்டு!!
குடும்ப நண்பரின் வீட்டிற்கு சென்றபோது, அந்தவீட்டுப் பெண் மாடிப்படி கைப்பிடியிலிருந்து
சறுக்கிக் கொண்டிருந்தாள். என்னை அழைத்தாள். நான் தயங்கவே, நான் உனக்கு பின்னாலிருந்து
பிடித்து கொள்கிறேன்..ஒன்னும் ஆகாது, ஜாலியாக இருக்கும் என்றாள். நானும் ஏறிக்கொள்ள,
வழுக்கிக்கொண்டே சென்றது. கடைசியில் அவள் இறங்கிக்கொள்ள, எந்த பிடிமானமும் இல்லாமல், நான் விழுந்து விட்டேன். தாடையில் வெட்டு!! என் முதல் காயம்..நினைவு தெரிந்து!! அந்த அத்தை காயத்தில், காபிப்பொடி வைத்து விட ஒரே எரிச்சல்..அழுகை!! டாக்டரோ திட்டோ திட்டு!!பிறகென்ன..அதே மூன்று தையல்களோடு, அந்த காயம் விண்ணப்ப படிவங்களில் குறிப்பிடப்படும் அடையாளமாகிப் போனது!!

Thursday, July 03, 2008

கடல்சிங்கம் யாரு?!?

பப்பு என்னுடைய ஹேர்கிளிப்பை தனக்கு அணிவிக்குமாறு கூறினாள்.
போட்டுவிட்டதும், "நான் யாரு" என்றாள்.

யாரு..இது?

கரடி பொம்மையா?

இல்ல!!

டோராவா?

இல்ல!

புஜ்ஜியா?

----

பும்பாவா?

-----

பும்பலுவா?

----

யாரு?தெரியலியே?

கடல்சிங்கம்!! (courtesy : பும்பா @ சுட்டி டீவி!)

ஒரு கிளிப் போட்டுகொண்டதும், தன் தோற்றம் மாறிவிட்டதாகக் கருதும் குழந்தைத்தனம்!!!

x------x----------x---------x-----x

பப்புவின் இஷ்டமான டீவி நிகழ்ச்சிகள்

ஒன்றரை வயதில் : பும்பா @ சுட்டி டீவி

இரண்டு வயதில் : பும்பா, டானி & டாடி, டோரா @ சுட்டி டீவி
டகெஷிஸ் கேஸில் @ போகோ

இரண்டரை வயதில் : பும்பா, டானி & டாடி, டோரா, உலகச் சிறுகதைகள் @ சுட்டி டீவி,டகெஷிஸ் கேஸில், MAD @ போகோ, ஆனந்தம்-கோலங்கள் டைட்டில் பாடல்கள்


All time favorite : எல்லா catchy-ஆன விளம்பரங்கள்...புடவை,நகைக்கடை விளம்பரங்கள் (குறிப்பாக ஜேடி-ஜெர்ரியுடவை)!!

Wednesday, July 02, 2008

யாருக்கேனும் ஞாபகமிருக்கிறதா இந்த விளையாட்டு?!

மூன்றாம்/நான்காம் வகுப்பு படிக்கும் போதும்,அதற்கு பின்னும் கூட இந்த விளையாட்டை விளையாடியிருக்கிறோம்.இது சிறுமிகளின் பிரத்யேக விளையாட்டு!! இருவர் எதிரெதிரில் அமர்ந்துக் கொண்டு பாடலுக்கேற்ப கைகளை தட்டவேண்டும்.
சிலசமயம் இருமுறை, மேலும் கீழும், கிராஸாக...ஆனாலும் வேகமாக! இதற்கு, இருவரும் sync-லிருப்பது அவசியம்!! நிறைய பாடல்களுண்டு!!

இப்போதெல்லாம், இதை சிறுமிகள் விளையாடுகிறார்களா அல்லது,
தொல்பொருள் துறைக்கு மாற்றப்பட்டுவிட்டதா எனத் தெரியவில்லை!!

ஆனால், 80/90 களில் வளர்ந்தவர்கள் இதை விளையாடாமலிருந்திருக்க முடியாது!!


eena meena macaracca, rare i dominacca,
yucapacca,
cheekapacca,
rom pom push


இன்னும் பெரிய பாடல்கள் இருக்கின்றன!! அதில், "லாலிபாப் ஐஸ்கிரிம் ஆன் த டாப்" என்று வரும்!! யாருக்காவது ஞாபகமிருந்தால், பகிர்ந்துக் கொள்ளலாம்!!

அர்த்தமில்லதா வார்த்தைகள்தான்..ஆனால் பாடிக்கொண்டே கிளாப் செய்து முடித்திருக்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியும், சிரிப்புமாய்...ஸ்கூல் டேஸ்னா ஸ்கூல் டேஸ்தான்!!

Tuesday, July 01, 2008

"அக்கம்-பக்கம் அக்கா" வும் குர்-குரே ஆன்ட்டியும்

பப்புவிற்கு அக்கம் பக்கம் பாட்டு மிகவும் பிடிக்கும்.
த்ரிஷாவையும்!! "அக்கம்-பக்கம் அக்கா" என்பது த்ரிஷாவுக்கு பப்பு வைத்திருக்கும் பெயர்.

akkam_pakkkam-1.mp3 -

பப்பு குரலில் "அக்கம் பக்கம்" !!


ஃப்ளாஷ்பாக்

சிறுவயதில் (பள்ளி நாட்களில்) என்னை கவர்ந்த நடிகை ஜூஹி சாவ்லா! 90களில் மிஸ்.இந்தியாவாக வலம் வந்தவர். ஷாருக்-ஜூஹி காம்போ ம்ம்..!! ஆனால் இப்போது, ஜூஹியை குர்-குரே விளம்பரத்தில் பார்க்கும்போது...ம்ம்..
எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியே!! (பிடித்த நடிகையை மார்க்கெட் போனபிறகு சீரியலில் பார்ப்பது போல) Dar படத்தில் இந்தப் பாடலில் ஜூஹியை எத்தனை முறை வேண்டுமானால் பார்க்கலாம்.





எதிர்காலத்தில் த்ரிஷாவும் குர்-குரேயை விளம்பரப்படுத்தலாம், யார் கண்டது!!

கட்ட வண்டி..கட்ட வண்டி...

வேளச்சேரி பெட்ரோல் நிலையத்தில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான கூட்டம். எனக்கோ ரிசர்வ்வில் ஒடிக்கொண்டிருக்கிறது. திங்கள் காலை எப்போதும் கூட்டம் இருக்கும். மாலை டாங்க் நிரப்பிக் கொள்ளலலாமா....என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே
ஒரு ஆள் "பெட்ரோல் இல்லை..காலி" என்றபோது..ஆ..லாரி ஸ்ட்ரைக்..!! ம்ம்..அப்படி மீதமிருந்த மொத்தக் கூட்டமும், எதிரிலுள்ள பங்கிற்கு திரும்பிற்று. 2T மிக்ஸில் கூட்டம் குறைவாயிருந்த்தால், பாக்கியசாலியானேன்!! மாலை அதே பங்க்கில் 200-250 வாகனங்கள்!! பாதுகாப்பிற்கு, போலிசும்!! உலகில் பெட்ரோல் கிடைப்பது இன்றே கடைசி
என்பதுபோல் தோன்றியது! உண்மையில் அப்படி ஒரு நாள் வரும்போது, சென்னை எப்படி இருக்கும்...சென்னை இருக்குமா??!!


a cliche,

பேருந்து நிறுத்தங்கள்/பேருந்துகள் நிரம்பி வழிந்தன. ஹோண்டா சிட்டிகளும், ஆல்டோ, வேகன் ஆர்களும் மூன்று சீட்டுகள் காலியாய் விரைந்தன!! சாலையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்திருந்தது. வாகனங்கள் பங்க்களில் காத்துக்கொண்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம், என் தோழியின் கூற்றுப்படி!!

Friday, June 27, 2008

Internation play school

வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் Internation play schoolஎப்படி இருக்கிறது எனப் பார்க்க சென்றேன்.வீடு. வெளியே ஒரு பெரிய பேனர் இருந்தது.
மாடிப்படிக்கு அருகில் இருந்த இடத்தில் நாற்காலி போட்டு அமரச் சொன்னார்கள்.
பேச ஆரம்பித்தோம்..

"என் குழந்தைக்கு 2 வயது 8 மாதங்கள். உங்கள் பள்ளியைப் பற்றி சொல்லுங்கள்."

அந்த இன்ஸ்டரக்டர்/பெண்

"கோர்ஸ் ஃபீஸ் 18000. அதை நீங்கள் தவணை முறையில் கட்டலாம்..
6000..6000..6000. பள்ளி சீருடை, தண்ணீர் பாட்டில், பை, காலணி எல்லாம் நாங்கள்
கொடுத்து விடுவோம்"

ஷாக்!!!

டைமிங்ஸ் என?

ஒரு வருடம்.

!!!

இல்லை. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம்?

காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

ஒரு கிளாஸ்-க்கு எவ்வளவு பேர்? இப்போ எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

20-24 பேர். 30 பேர் இருக்கிறார்கள்.

குழந்தைகளை எப்படி எங்கேஜ் செய்கிறீர்கள்?

2 மணி நேரம் எழுத்துகள், எண்கள், பாடல்கள் சொல்லிக் கொடுப்போம்.
1 மணி நேரம் விளையாட்டு.

ஷாக்!!!

ஓ..இப்போவே எழுத்துகள், எண்கள் சொல்லிகொடுத்துவிடுவீர்களா?
ஒகே. என்ன விளையாட்டுகள்?

இரண்டு கார்கள், ஒரு ஊஞ்சல், ஒரு ரோலர்கோஸ்டர் இருக்கிறது.
அதில் விளையாட விடுவோம்.

ஷாக்!!!

நான் உங்கள் கிளாஸ் ரூம், விளையாடும் அறையை பார்க்க வேண்டும்.

சாரி. தனியாக வந்தால் அனுமதிக்கமாட்டோம். குழந்தையோடு வந்தால்தான் பார்க்க முடியும்.

ஷாக்..ஷாக்!!!

ஏன்..பார்த்தால் தானே எனக்கு ஒரு ஃபீல் வரும். முடிவு எடுக்க முடியும்.

இல்லை மேடம். இது எங்கள் ரூல்!! குழந்தையை அழைத்து வாருங்கள். அப்போது அனுமதிக்கிறோம்.

--------x--x--x-------

அந்த பெண், எடுத்தவுடன் ஃபீஸை பற்றி பணம் கட்டுவதுதான் முதலில் எனபது போல் பேசியதும் எனக்கு பிடிக்காமல் போயிற்று. அதுவும் ஒருவருடத்திற்கு 1800 டூ மச்!!!

கடைசி வரை அவள், ஆண்குழந்தை என்றே நினைத்து பேசியது அதைவிட எரிச்சல்.
ஆண்தானா என்றுகூட கேட்டுக் கொள்ளவில்லை!!

கிளாஸ்ரூமை பார்க்க விடாதது மேலும் கடுப்பு! அந்த வீட்டில், மாடிப்படி அருகே ஒரு சிறிய கேட் போட்டிருந்தது. ஹாலில் மட்டுமே கிளாஸ் நடக்க முடியும்.அதில் 30 பேர்!!

இதில் இப்போதே படிப்பு என்றால்...ஒரு ஒப்புவிக்கும் இயந்திரமாகவே மாற்றி விடுவார்கள்!!!

--------x--x--x-------

சரியான அணுகுமுறை இல்லாததாலும், போதுமான இடவசதி இல்லாததாலும், அந்த பள்ளி பப்புவை இழந்து விட்டது!!

Updations :

எனது வீட்டிற்கு அருகில் இருக்கும் இந்த கிளை புதிதாக தொடங்கப்பட்டதாக, நண்பர் மூலமாக அறியப் பெற்றேன். அந்தக்கிளயில் எனக்கேற்பப்பட்ட அனுபவமே இந்தப் பதிவு!
இதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளியின் பெயரும், சுட்டியும் நீக்கப்பட்டுள்ளது. ஒரு பெற்றோராக,
எனது உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறேன். ஏனெனில், அவள் வளரும் சூழலை
நல்லதாக அமைத்துத் தர வேண்சிய கடமை எனக்கிருக்கிறது, without spoiling her childhood.

Tuesday, June 24, 2008

பதினெட்டு வயசு (கரப்பான்) பூச்சி...!!!

"கண்ணும் கண்ணும் " படத்திலிருந்து "பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி" என்ற பாடலை இப்போது எல்லா ம்யூஸிக் சானல்களிலும் ஒளிபரப்புகிறார்கள். ( கொஞ்சம் "உலக அழகி நாந்தான்" டைப் பாடல். )

பப்பு, "கரப்பான் பூச்சி-ன்னுதா, பட்டாம்பூச்சி-ன்னுதா அக்கா"!!

!!!

ரெஃபரன்ஸுக்காக பாடல்!



அவளது மாமா, கை வைக்காத நீளமான டீ சர்ட் ("பொல்லாதவன்" பாடலில் வரும் யோகி B போட்டிருப்பதைப் போல)
அணிந்திருந்தான்.

பப்பு அவனைப் பார்த்துவிட்டு, "மாமா, ஏன் குண்டு ட்ரெஸ் போட்டிருக்கான்?"

!!!

அவளது மாமாவை அடித்து விட்டாள். சிறிது நேரம் கழித்து, அவன் கடைக்கு செல்வதற்கு கதவைத் திறந்தான்.எப்போதும் பப்புவையும் அழைத்து செல்வது வழக்கம். இப்போது அடித்து விட்டதால், அவன் கூப்பிடவில்லை!!அவன் செல்வதை பார்த்த பப்பு, கதவருகில் சென்று sing song tone-ல் சொன்னாள்,

"இனிமே நான் உன்னை அடிக்க மாட்டேனே....கிள்ள மாட்டேனே"

வேறென்ன..சாதித்துவிட்டாள்!!!


கிண்டல் செய்யவோ, அடிக்கவோ சொல்லிக்கொடுப்பதில்லை யாரும்!! ஆனாலும்..

Thursday, June 19, 2008

"பார்த்த முதல் நாளே" வின் கடைசி நாள்!!

கமலின் "பார்த்த முதல் நாளே" பாடல் வந்த நாளிலிருந்து பப்புவுக்கு மிகவும் இஷ்டம்.
அவளுக்காகவே நாங்கள் சன் மியுசிக் சானலில் டீவியை வைத்திருப்போம்.அந்த பாடல் இசைக்க ஆரம்பித்த உடன் தலையை ஆட்டி ரசிப்பாள். இது ஒரு ஒன்றேகால் வயதிலிருந்து தொடர்ந்தது. பாடலில் அவர்கள் இருவரும் தண்ணீரில் குதிக்கும்போது,பாட்டு முடிய போது என்பாள், அந்த இசையை வைத்து!

யாராவது சானலை மாற்றிக்கொண்டிருக்கும்போது அந்த பாடல் வந்துவிட்டால், ஒரு மைக்ரோ செகண்ட் கேட்டால் கூட பாடலை வைக்க சொல்லுவாள். நாங்களும், அந்த பாடல் வரும்போது, அவள் வெளியில் இருந்தால் கூப்பிட்டுவிடுவோம். இது ஒரு இரண்டு வயது வரை தொடர்ந்தது!!
ஒரு நாள், அந்தபாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது,

"மாமா அக்காவ ஏன் தூக்கறாங்க"
"மாமா அக்காவ ஏன் தொரத்தறாங்க?"
"மாமா அக்காவ ஏன் தண்ணில தூக்கிப்போடாறங்க"

என்று கேட்க ஆரம்பித்தாள். அன்றிலிருந்து ஆரம்பித்தோம், அந்த பாடலுக்கு சென்சார் !!!


சின்னசிறு கேள்விகள்தான்..ஆனால் பப்புவின் வளர்ச்சிப்படிகளை எப்படி உணர்த்திவிடுகின்றன!!!

Tuesday, June 17, 2008

Mahia - பாடல்

ஃபார்வர்ட் மெயிலில் வந்த பாடல்.
IIT பெண் என்று ஒரு சிலரும், பாகிஸ்தான் பாடகி ஆனி என்று பலரும் இந்த பெண்ணின் பூர்விகம் பற்றி அடித்துக் கொள்கிறார்கள். யாராயிருந்தாலென்ன..
அந்த குரலும், பாடும் ஸ்டையிலும், நடன அசைவுகளும் நம்மை கட்டிப்போடுவதை மறுக்கமுடியாது!! தினமும் ஒரு தடவையாவது கேட்டு விடுவேன்!!




பாடல் வரிகள்
------------


i wish u could see urself the way i see ya
u shine juss like a star mahia
cuz ur my only pyar mahia

maine tujh ko he dil may basaya
tu hi mera pyar mahia X2

tu nay aisee adda say mujhay dekha
dil ho gya nisaar mahia
tu hi ha mera pyar mahia x2

tu nay aisee adda say mujhay dekha
dil ho gya nisaar mahia
tu hi ha mera pyar mahia x2

y dont u tell me mahi
ma mid at ease
how do u wish to see the loyalty in me
appnee wafa iqrar kya karoon
mar jaoon hudh ko jo tujh say juda karoon

tu nay aisee adda say mujhay dekha
dil ho gya nisaar mahia
tu hi ha mera pyar mahia x2

mahai u r i set ma soul on fire
i felt juss like a rose mahia
when i was in ur arms mahia

i cant imagine that like without u where i'd be
im ur lady i'll go where ever u take me
terey beghair jeenay ki khaish nahin
main terey saath hoon lay chal mujh ko kahin

tu nay aisee adda say mujhay dekha
dil ho gya nisaar mahia
tu hi ha mera pyar mahia x2

mahia ur i set ma soul on fire
i felt juss like a rose mahia
when i was in ur arms mahia

i don't care where we go or stay or wut we do
ill take u r bain consider becuz i love u
jaisay bhi haal main rakhoo gay main rahoon
dukh bhi milay to pyar main haans kay sahoon

tu nay aisee adda say mujhay dekha
dil ho gya nisaar mahia
tu hi ha mera pyar mahia x2

i wish u could see urself the way i see ya
u shine juss like a tar mahia
ur my only pyar mahia

maine tujhh ko he dil may bhasaya
tu hi mera pyar mahia X2

mahai ur i set ma soul on fire
i felt juss like a rose mahia
when i was in ur arms mahia

Monday, June 16, 2008

பப்புஸ் டே அவுட்

மருத்துவமனையில் :

சளி பிடித்திருந்ததனால் பப்புவின் மருத்துவரிடம் போயிருந்தோம்.
எங்களுக்கு முன் சென்ற குழந்தை உள்ளே அழுதுக்கொண்டிருந்தது.
எங்கே பப்புவும் அழுவாளோ என நினைத்தேன்.
ஸ்டெத் வைத்து பார்த்தார். காதில் வைத்து வெப்பநிலையை கண்டறிந்தார்.
பப்பு மறுப்பேதும் சொல்லாது அவர் திரும்பசொன்னபோது திரும்பி, சொல்வதையெல்லாம் கேட்டாள். மருந்துகள் எழுதிகொடுத்தார்.

பில் வாங்கும்போது, பப்பு டாக்டரிடம்,

"டாக்டர், ஊசி போடு, டாக்டர்"

"ஊசி போடுங்கன்னு சொல்லு!!" - நான்.

"டாக்டர், ஊசி போடுங்க, டாக்டர்"

"ஊசியா..நாலு வயசுக்கு மேலதான் ஊசி உனக்கு" - டாக்டர்.

கடைசிவரை அவள் இருக்கையிலிருந்து எழுந்துக்கொள்ளாமல்,
அவரை ஊசி போட சொல்லிகொண்டிருந்தாள். கூப்பிட்டாலும் வரவில்லை.
டாக்டர் "நீங்க போங்கம்மா, அவள் தானா வருவாள்" என்றார்.
நாங்கள் எழுந்து வந்துவிட்டோம். அடுத்ததாக இருந்தவர்க்ளும் உள்ளே சென்றபின்னரும் பப்பு வரக்காணோம்.
பிறகு கதவை திறந்து கூட்டி வரும்படி ஆயிற்று.

நல்லா சாப்பிடலன்னா, டாக்டரிகிட்ட போய் ஊசிதான் போடனும் என்று அடிக்கடி சொன்னதன் விளைவு இது!!

உணவகத்தில் :

பப்புவின் முதல் பஃப்பே லஞ்ச். ஒன்லி வெஜிடபிள்ஸ் - கேரட்டும், பீட்ரூட்டும்.
கொஞ்சம் பிரியாணி மற்றும் சூப்! மற்றபடி, வேடிக்கை பார்த்தபடி!!

கடையில் :

குழந்தைகள் பிரிவில் சென்றதும் நான் அவளுக்கான துணிகளை பார்த்து, விலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.பொம்மைகள், சிடி, மற்றும் விளையாட்டுபொருட்களையும் பார்த்து, அவளிடம் இங்க பாரு, இது நல்லாயிருக்கா என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். ( ஆனால் ஒன்றும் வாங்கவில்லை..அது வேறு விஷயம்!)





அவளும் ஒரு கரடிபொம்மையை எடுத்துக்கொண்டு, என்னைப் போலவே ஓவ்வொரு பிரிவாகச் சென்று கரடிபொம்மையுடன் பேசிகொண்டிருந்தாள்....அருகே சென்று அவளுடய சிந்தனையை கலைக்க மனமில்லாமல்..கிளிக்கிக்கொண்டேன்!!

Friday, June 13, 2008

பப்பு-சைக்கிள்-நான்

பப்புவின் முதல் சைக்கிள் மியூஸியத்தில் வைக்கும் நிலையையடைந்தது, ஒன்றரை வருடங்களுக்கு பிறகு.அவள் எவ்வளவோ முயற்சித்தாள், சீட்டை பிரித்தெடுப்பதற்கு! கடைசிவரை முடியவில்லை!!

வேளச்சேரி பை-பாஸ் ரோட்டில் இருக்கிரது BSA சைக்கிள் கடை. குட்டீஸ் ட்ரை-சைக்கிளிலிருந்து, ட்ரெட்மில் வரை கிடைக்கிறது. பப்புவை அழைத்து சென்றதால், உயரம் , பெடலிங் எல்லாம் பார்த்து முடிவு செய்ய வசதியாயிற்று!

பேக் செய்வதற்காகக் கூட, சைக்கிளை விட்டு இறங்கமறுத்துவிட்டாள்!!
அந்த மாடலில் மற்றொன்றை வெளியில் நிறுத்தியபோதும், அந்த சைக்கிளை விட்டு ம்ஹூம்..இறங்கவேயில்லை!

வீட்டிற்கு வந்தபின், சீரியஸாக குனிந்து சைக்கிள் பாரில் இருந்த காற்றுகுமிழ் பேப்பரை ஒவ்வொன்றாக உடைக்க துவங்கியிருந்தாள்!!

ஃப்ளாஷ்பாக்

முதல் சைக்கிள் என் பன்னிரண்டாம் வயதில் கிடைத்தது. BSA SLR பெண்கள் சைக்கிள்.
அதை வாங்குவதற்க்கு நான் போகவேண்டியிருக்கவில்லை! நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் வரை என்னிடம் இருந்தது. அதன் விலை பப்புவின் தற்போதைய
சைக்கிள் விலையில் பாதி!!

Wednesday, June 11, 2008

gestures

ப்பு ஊஞ்சலில் அமர்ந்து ரைம்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அருகில் நின்றுக் கொண்டிருந்த என்னை அமர சொன்னாள்.
காலை நேரம்....கிளம்ப வேண்டும்...ம்ம்ம்....சிறிது நேரம் அவளுடன்
அமர்ந்தபின், சரி, நான் போய் கிளம்பறேன்" என்றேன்.

உடனே என் மடியில் படுத்து கொண்டு,
"நீ இப்ப போக முடியாது" என்ற போது வாயடைத்து போனது!!


(ஒன்றரை வருடத்திற்கு முன்பு வாங்கிய ரைம்ஸ் சிடி, இப்போது புண்ணியம்
கட்டிக்கொள்கிறது, அவள் கவனத்தை திசை திருப்ப! )




"பீஸ் போகாதே" என்று காலியிலிருந்து அழுகை. (திங்கள் கிழமை காலை!!)

ஆபீஸ் வருவதற்காக கிளம்பி கதவருகில் நின்றேன். பப்பு
திடீரென ஓடி வந்து கிரில் கதவில் கால் வைத்து ஏறி இரண்டு கதவுகளையும்
சிரமப்பட்டு இணைத்து தாழ்ப்பாள் போட்டுவிட்டு, என்னை திரும்பி பார்த்து
சிரித்த போது எனக்கும் தோன்றியது.. "போகத்தான் வேண்டுமா?"


Thanks baby, என் வாழ்வின் அவசியம் மிச்சமிருக்கிறது உன்னிடம்!!

Friday, June 06, 2008

ஐ ஸ்கிரீம்......

அலுவலக உணவுக்கூடத்தில் காதில் விழுந்தது இது:

இஸ்ரவேலில், குபா என்பது ஒரு தன்னிறைவு பெற்ற இடம். அதாவது, ஒருவருக்கு தேவையான எல்லாமே அந்த ஒரு இடத்திலேயே கிடைத்து விடும். ஒரு ஏரியா போன்ற இடம், ஆனால் வேறு எங்கும் சார்ந்து இருக்கத் தேவையின்றி! அது போல பல குபாக்கள் இருக்குமாம்.

வேளச்சேரியும் ஒரு குபா போலவே!! you name it and you have it..and the latest addition is Baskin Robbins with dazzling pink!!

அடையார் எனக்கு ஒரு சில காரணங்களுக்காக பிடிக்கும். கிராண்ட் ஸ்வீட்ஸ், கோகுல் ஆர்கேட் லெண்டிங் லைப்ரரி இன்னும் பிற. அதில் ஒன்று பாஸ்கின் ராபின்ஸ்.

flashback :
பப்புவின் முதல் ஸ்பூன் Baskin Robbins-லிருந்துதான்!!

ப்ராஜக்ட்டுக்காக, ஐந்து வருடங்களுக்கு முன் சென்னை வந்த புதிதில்தான் அடையார் baskin Robbins அறிமுகம். Baskin 31 Robbins இருக்கும் 31 என்பது வெரைட்டி
என நினைத்துக்கொள்வேன். ஒரு ஸ்கூப் 30 ரூபாய். அப்போது என் பேவரிட் banana split. அதுவும் டாப்பிங்....மேலே ஊற்றப்படும் சாஸ் நம்ம சாய்ஸ்.
ஒருமுறை பபிள்கம் ஐஸ்கிரீம் என்று சாப்பிட்டிருக்கிறேன்..பபிள்கம் போல, கொஞ்சம் chewy--ஆக குட்டி குட்டி துண்டுகள் இருக்கும்.yummy!!அதற்குப்பின் அந்த ப்ளேவர் கிடைக்கவே இல்லை..

ஓக்கே..ப்ளாஷ்பேக் ஓவர்!!

வேளச்சேரி கிளை கொஞ்சம் சிறியதுதான்! பப்புவுக்கு சாக்லேட் ஆல்மண்ட் மிகவும் பிடித்திருந்தது. பிளாக் கரண்ட் அண்ட் ப்ரூட் ஓவர்லோடட்-ம் நன்றாக இருந்தது.

டேஸ்ட் பார்க்க ஒரு ஸ்பூனில் கொஞ்சம் கொடுப்பார்கள்.
நாம் டேஸ்ட் பார்த்து தெரிவு செய்து ஆர்டர் கொடுக்கலாம்!!
ஒரு ஸ்கூப் 40 ரூபாய். வாட் எக்ஸ்ட்ரா!

Thursday, June 05, 2008

மகளிர் மட்டும்!!

எப்போதும் ஆண்கள் டீ சர்ட்தான் கிடைக்கும், ரிலீஸ் முடிஞ்சாலும் சரி, இல்ல ஆனுவல் ஃபங்ஷன்னாலும் சரி!!அதுவும் நம்ம சைசுக்கு இருக்காது. உள்ள நாலு பேர் புகுந்துக்கலாம் போல இருக்கும்.என்ன பண்றது..அத வாங்கி ரங்கமணிக்கோ, தம்பிக்கோ குடுக்க வேண்டியதுதான்!

போன தடவை தாங்க முடியாம கம்பெளெய்ன் பண்ணினதோட பலன் இப்போ WestSide-லேர்ந்து சல்வார் டாப்ஸ்.இதுவும் நாங்களே போய் செலக்ட் செஞ்சதுதான். மூணு ஷேட்ஸ்...பிஞ்க், பச்சை மற்றும் வெந்தயக் கலர். அதுல,ஸ்லீவ்-ல கம்பெனி லோகோ போட்டிருக்கு. (ஒரு தடவை உடுத்திக்கிட்டு, மெகா ஸ்லீவ்ஸ் ஆக்கிடலாமான்னு ஒரு யோசனை ;-)!!)

ஒரே மாதிரி எங்க கிடைக்கும்னு பார்த்தா, இந்த மூணுதான் தேறுச்சு.
1. Fabindia
2. Westside
3. Anokhi


Fabindia-ல ஒரே மாதிரி உடனே கிடைக்காது. ஆனா, டைம் கொடுத்தா (மினிமம் 2 வாரம்), நம்ம measurementக்கேத்தமாதிரி கிடைக்கும். இது வுட்ஸ் ரோடு கிளைல விசாரித்தபோது தெரிந்தது. அடுத்தவருடம் கண்டிப்பா இங்கதான். (கம்பெனி இருந்தா!!)
ம்ம்..பட்டு டாப்ஸ் எல்லாம் ரொம்ப அழகா இருந்தது!! எல்லாமே பொதுவாக பார்ட்டி வேர் மாதிரி. தனியா ஒரு படையெடுப்பு நடத்தனும்!!


Westside-ல (Spencer Plaza) புது ஸ்டாக் வந்தாதான் தெரியும்னு சொன்னாங்க. கண்டிப்பா 20க்கு மேல வேறவேற சைஸ்களிலும் கிடைக்கும்னும் சொன்னாங்க. ஆனா ரெண்டு நாளாகும். ஓக்கே..ரெண்டுநாள்-னா பொறுத்துக்கலாம்.

Anokhi - இது ஆழ்வார்பேட்டைல இருக்கும் பொட்டிக். ஆனா, எல்லாம் பிரிண்டட் மாடல். plain fabric-ல இல்ல.

ஒதுக்கப்பட்ட நிதி - 600 ரூபாய் ஒருவருக்கு.
ஆனால், ரூ 499க்கு WestSide-லே கிடைத்துவிட்டது.

பப்புஸ்பீக்

பப்புவுக்கு ஒரு ஸ்லைஸ் பிரட் கொடுத்தேன். சில சமயங்களில் வெறும் பிரட்டை அப்படியே,
சாப்பிடுவாள்.

"ஆச்சி, ஜாம் வேணும்"

(ஜாம் பாட்டிலை கண்ணில் காட்டாமல்)தடவியாயிற்று.

"ஆச்சி, ஜாம் வேணும்"

பிரட்டில் இருந்த ஜாமை எல்லாம் கையால் சுரண்டி சுரண்டி..

"பப்பு, அப்படி செய்யக் கூடாது. எறும்பு கையை கடிக்கும், டர்ட்டி..டர்ட்டி.. மடிச்சு சாப்பிடு"


ம்ஹூம், கேட்டபாடில்லை. ஜாம்தான் காலியாகிக்கொண்டிருந்தது.

"அவ்ளோதான், ஜாம் காலியாயிடுச்சு"

பிரட் சாப்பிட்டபின், இன்னொரு ஸ்லைஸ் கேட்டாள். அதில், ஜாம் தடவியிருந்ததை பார்த்து கேட்டாள்,

"கொஞ்சூண்டு ஜாம் இருந்துதா ஆச்சி.."


ஓ காட்...நீ எவ்ளோ innocentடா..(உன்னை போய் ஏமாத்தறேனே)!!

Wednesday, June 04, 2008

நீயா நானா @ விஜய் டீவி

விஜய் டீவியின்,"நீயா நானா" வில் கடந்தவார விவாதம் மணமகள் Vs மணமகன்.
வரன் தேடும் மணமகன்களும் மணமகள்களும்.
பேச்சு சுவராசியமானதாக இருந்தது எப்போதும்போலவே.

"நீங்கள் மணமகளி/னின் ப்ரொபைல் பார்க்கும் போது, முதலில் பார்க்கும் மூன்று முக்கிய விஷயங்கள் என்ன ?" என கோபி கேட்டபோது வேலை,சம்பளம், குடும்பம்,சாதி, ஊர் etc என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் கூறினர்.

அந்த சமயத்தில், "சாதி எவ்ளோ பேர் முக்கியமா பார்ப்பீங்க" என்ற போது, சிலர் பதில் கூறினர். இதில், ஒருவர் மட்டும், "நான் கண்டிப்பா சாதி பார்ப்பேன், ஏன்னா நான் பிராமின். வேறயா இருந்தா வெஜிடேரியனான்னு தெரியாது"என்றார். பெண்கள் பகுதியில் ஒரு பெண்ணும், "நான் பிராமின். ஆனா வேற சாதியிலதான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்றார்.

இதில், என்னை உறுத்திய விஷயம் என்னவெனில், எல்லாருக்குமே வாய்ப்பு கொடுக்கப்பட்டு, எல்லாருமே அவரது விருப்பு/வெறுப்புகளை பேசினர். ஆனால் இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் அவரவர் சாதியை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

அவர்கள் மட்டும் "நான் பிராமின்" என தம் சாதியை பொதுவான சபையில் சொல்லிக் கொள்ள வைத்தது எது அல்லது யார்?

நிகழ்ச்சியில் பேசின மற்றவர்கள் யாரும் தம் சாதியை சொல்லிக்கொள்ளவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அவர்களை தம் சாதியை சொல்லாமல் மவுனம் காக்க வைத்தது எது அல்லது யார்?

Tuesday, June 03, 2008

பப்பு - Word Power

தமிழ்நாடு சென்னை
கர்நாடகா - பெங்களூரு
மகாராஷ்ட்ரா - மும்பை
கோவா - பாலாஜி

பனாஜி..

பாலாஜி!

பி.கு:
பப்பு மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள் சரியாக சொல்கிறாள்.
And she intentionaly says panaji as balaji.



(பப்பு @ 11 மாதங்களில்)


பப்பு, ஏன் அத்தைய கிள்ளறே?

"சும்மா, விளையாட்டுக்கு!"

(புதிதாக, இப்பொழுது, பாராட்ட கற்றுக்கொண்டிருக்கிறாள். )

"ஆ..சூப்பரா இருக்கே...!" - நான் படுக்கைவிரிப்பை மாற்றிய போது!

"இந்த ட்ரெஸ் நல்லா இருக்கே!" - என் புது உடுப்பை பார்த்து!


வார்த்தையை கற்றுக்கொள்வது ஆச்சரியமாய் இருக்கிறது அதைவிட,
சரியான வார்த்தையை சரியான நேரத்தில் உபயோகிக்கும் விதம் இன்னும் ஆச்சரியமாய்
இருக்கிறது!!

Monday, June 02, 2008

குளோரியாவின் வீடு @ சுட்டீ டீவி

பப்புவுக்கு ஏதாவது கார்ட்டூன் ஷோ வைக்கலாம் என்று சுட்டி டீவிக்கு மாறியபோது,
ஒளிபரப்பப்பட்டிருந்தது..'குளோரியாவின் வீடு"! வாவ்..பாத்திரப் படைப்புகள், நகைக்க
வைக்கும் குரல்கள் - குழந்தைகளுக்கு மட்டுமில்லை..எல்லா வயதினருக்கும்
ஏற்றதான ஒரு கார்ட்டூன் ஷோ!



முக்கிய கதாபாத்திரம் "குளோரியா". அவர்களது அண்டை வீட்டார் ஷோபி குடும்பத்தார். நகரத்தில் குடியேறும் குளொரியாவின் குடும்பத்தினர் சந்திக்கும் அன்றாட நிகழ்ச்சிகள்.குளோரியாவும், ஷோபியும் ஒரே வகுப்பு. குளோரியாவின் அக்காவுக்கு எப்போதும் ரூட் விட்டுக்கொண்டு அலையும் ஷோபியின் அண்ணன். இரு குடும்பங்களும் பழக வேண்டிய சூழல். ஷோபியின் லைஃப் ஸ்டைல்-கு நேர் மாறானது குளோரியாவின் லைஃப் ஸ்டைல்.சுவாரசியம் கூட்ட, குளோரியாவின் அப்பா ஒரு விஞ்ஞானி. அதாவது, வித்தியாசமான உபயோகப்பொருட்கள்.மீனு என்றொரு பூனை வேறு.






ஒவ்வொரு எபிசோடும் ஒரு நல்ல முடிவோடு இருக்கும். நட்சத்திரங்களுக்கு கீழ், குளோரியா மீனுவோடு,அன்று வாழ்க்கை கற்றுக்கொடுத்ததை அசை போடுவதாய் முடியும்.
இப்போது நான் குளோரியாவின் ரசிகை! முக்கியமாய் அந்த கதாபாத்திரங்களின் குரல்.

என்ன..பப்புவா..ம்ம்..அவள் எப்போதும் போல், யெஸ்யெஸ்/இசையருவி அல்லது சன் மியுசிக்கில் பொல்லாதவன் ரீ-மிக்ஸையோ, கத்தாழ கண்ணாலயோ பார்த்து கொண்டிருப்பாள்.

நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணிக்கு!

Friday, May 30, 2008

கோலங்கள்.. கோலங்கள்!!

அலுவலகத்தில் நடந்த ரங்கோலி போட்டிக்கு theme என்று ஒன்றும் வேண்டாம் என்பதே எங்களின் தீர்மானமாக இருந்தது. பெரும்பாலனவர்களுக்கு,கோலம் போடுவது முதல் முறை..(ம்ம்..என்னைத்தான் சொல்கிறேன்!!).அதனால், அவரவருக்கு எது எளிதாக போட வருகிறதோ அதை போடலாம் என்று முடிவு செய்தோம்.

ஒவ்வொரு டீமுக்கும் ஐந்து பேர் என நான்கு டீம். ஒரு டீம் லீடர்.
சில பல rangoli brain storming sessions - கு பின் ஒரு நாள் ட்ரையல் வேறு. என்ன வரைய போறோமா..அது மட்டும் ரகசியம்..! எல்லாருக்கும் ஒவ்வொரு பொறுப்பு..வரைவது, வண்ணபுபொடி நிரப்புவது என. வண்ணங்களை கலந்து தருவது என் பொறுப்பில். (ஹப்பா...உங்க தலஎழுத்த யாரால மாத்த முடியும்..!!)

அப்புறம் எல்லாரும் வரைய ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது..எல்லாரும் ஏதாவது ஒரு
concept-ஓடுதான் இருக்கிறார்கள் என. (நாங்களும் கான்செப்ட் வைச்சிருக்கோமே!!)

இது, conceptual லெவெல்-ல!!




இது, implementation லெவெல்-ல!!




இது டீம் B


அம்மா என்றால் அன்பு!!


டீம் C




டீம் D


அமைதி...அமைதி...அமைதி!!



பரிசா..முதல் பரிசு global warming-க்கு, இரண்டாம் பரிசு child labour-க்கு!

Thursday, May 29, 2008

ஹா ஹா ஹாசினி type கிறுக்குத்தனங்கள்..

முட்டினா கொம்பு வரும் மாதிரியான நம்பிக்கைகள் பள்ளியிலிருந்து கல்லூரி வரை தொடர்ந்திருக்கிறது. ஆனா, அது எங்கள் மெச்சூரிட்டிக்கு ஏத்தமாதிரி மாறிக்கிட்டேயிருக்கும்.

3ஆம் வகுப்பு

* முட்டினா கொம்பு முளைக்கும். முளைக்காம இருக்கனும்னா, ரெண்டாவது வாட்டி முட்டனும்.
*பொய் சொன்னா வாலு முளைக்கும்
*ப்ளம்ஸ்/இலந்தைப் பழம்/பேரிச்சம் போன்ற கொட்டைகள் முழுங்கினால், வயிற்றுக்குள்ளிருந்து (வாய் வழியாக) மரம் வளரும்.
*மயிலிறகு குட்டி போடும்.

7ஆம் வகுப்பு

*நகத்தில் பூ விழுந்தால், புது டிரெஸ் கிடைக்கும்
*புறா பறப்பதை பார்த்தால், இரு கைவிரல் நகங்களையும் உரசிக்கொண்டு, "புறா புறா பூ போடு" என்று சொன்னால்
நகத்தில் பூ விழும்.

10ஆம் வகுப்பு

*எத்தனை குருவிகளை பார்த்தோமோ, அதை வைத்து,
one for sorrow, two for joy etc.

* புது ட்ரெஸ் போட்டுட்டு வந்தா, new pinch கொடுப்பது. (சிலருக்கு இந்த் பழக்கம் வாழ்நாள் முழுதும் தொடரும்!!)
*காக்கா எச்சமிட்டால், நீங்க ரொம்ப லக்கி!! (?)

கல்லூரி இறுதி வருடம்

* கடைசி வாய் சாபபிடறவங்களுக்கு நல்ல husband!
(ஒரு தோசை/ஸ்நாக்ஸ் எல்லரும் சேர்ந்து சாப்பிடறோம்னா, கடைசியா இருக்கும் portion. யார் எடுத்துக்கறதுன்னு
மீதியாவதை தடுக்க இப்படி ஒரு யோசனை.அடிச்சி பிடிச்சி எடுக்க ஓடி வருவாங்க!)

* ட்ரெஸ்/ஸ்லிப் திருப்பி போட்டுக்கிட்டோம்னா, புது ட்ரெஸ் கிடைக்கும்.

* பேனா, கைக்குட்டை பரிசளித்தால், நட்பு முறிந்துவிடும்.

அலுவலகத்தில் சேர்ந்த பின்

* தலையில் வைத்த பூ மாலை வரை வாடாமலிருந்தால், மாமியார் ரொம்ப நாள் உயிரோட இருப்பாங்க!!(சந்தோஷமா துக்கமா!!).



கனவில் சாவு வந்தால், கல்யாணம் என்று என் ஆயா நம்புவதையும், கனவில் குரங்கு வந்தால் ஆஞ்சநேயருக்கு வடை மாலையும், காகம் வந்தால்கோவிலில் விளக்கும் ஏற்றும் அம்மாவின் நம்பிக்கைகளையும் எதில் சேர்ப்பது?

Tuesday, May 27, 2008

சித்திரம் பேசுதடி...

பப்புவின் கை வண்ணத்தில்...





இதை வரைந்தபின் சொன்னாள் "ஆயா, பாரு நான் பல்லி வரைஞ்சிட்டேன், வாலு பாரு ஆயா!!".


தேதி/பெயர் உபயம் : பப்பு அம்மாவின் அம்மா

Monday, May 26, 2008

நான் வளர்கிறேனே..மம்மி!!



பப்பு சாப்பிட/பால் குடிக்க அடம் பிடிக்கும்போது, ஆதி என்கிற பொம்மைக்கு
கொடுக்க போவதாக பாவ்லா காட்டுவேன். பப்பு "ஆதிக்கு குடுக்காதே, நான் குடிக்கறேன்" என்று உடனே வாங்கி சாப்பிட்டு விடுவாள்.

சமீபத்தில் (2 வாரங்களுக்கு முன்) அவள் அடம் பிடித்தபோது, ஆதிக்கு கொடுக்க போவதாக சொல்லி பொம்மையை கையில் எடுத்துக் கொண்டேன். "ஆதி குடிடா... டேஸ்டா இருக்கா?" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

ம்ம்ஹூம்..ஒன்றும் வேலை ஆகவில்லை. பப்புவிடமிருந்து நோ ரியாக்ஷன்!!

என்னையே பார்த்துக் கொண்டிருந்த பப்பு கேட்டாள் "ஆதி குடிக்கமாட்டேங்கறானா?" !!

(ம்ம்..இனிமே இந்த ஐடியா வேலைக்கு ஆகாது!! )

Friday, May 23, 2008

எண்களும் அளவுகளும்




அம்மா புடிக்குமா உனக்கு??

..புடிக்கும்!

எவ்ளோ புடிக்கும்?

அஞ்ஞ்சு புடிக்கும்..!!


பப்பு குறிப்பு: பப்பு எண்களை கற்றுக் கொள்கிறாள். And she thinks five is the maximum!! குழந்தைகள் உலகம்தான் எவ்வளவு விசித்திரமானது!!

Wednesday, March 05, 2008

சில பாடல்களில் சில வரிகள்

ரசித்து கேட்கும் பாடல்களில் சிலவரிகள் மட்டும் மனதில் தங்கி விடுவதுண்டு.
வண்டி ஓட்டும்போதோ, டீம் மீட்டிங்கில் பேச்சு சுவாரசியமற்று திசை திரும்பும்போதோ, எதோவொரு அறியாத தருணத்திலோ இவ்வரிகள் ஞாபகத்திலெழும். என்ன பாடலென்று தெரியாதபோதோ, மண்டையை குடைய வைக்கும்!

குல்மொஹர் மலரே குல்மொஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே

சினிமா பாடல்களில் சேலையும், சேலையின்யின் முந்தானையும் பாடப்பட்ட அளவுக்கு, ஏன் துப்பட்டா இடம் பெறவில்லை?(ம்ம்..ரொம்ப முக்கியம்!!)
சல்வார்தான் பெரும்பாலும் அணியப்படுவதாய் இருந்தாலும்! ஆனாலும்,ஒருசில பாடல் வரிகளில்தான் துப்பட்டாவை பார்க்கமுடிகிறது! முந்தானை ஈர்த்த அளவுக்கு துப்பட்டா ஈர்க்காததிற்கு என்ன காரணமோ....(சினிமாப் பாடல்) கவிஞர்களைத்தான் கேட்க வேண்டும்!!

இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்..என்னையும் கவிஞன் ஆக்காதே....

மிகவும் ரசித்த வரி இந்த பாடலில்!
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எல்லா பாடல்களும் இதைத்தானே சொல்கின்றன வெவ்வேறு வார்த்தைகளில் காலம்காலமாக!!காதல் வந்ததும் பாடல் பாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் நம் கதாநாயகர்கள் சங்ககாலத்திலிருந்தே!

ஹாஸ்டலில் பொழுது போகாத எதோவொரு ஞாயிற்றுக்கிழமைப் பொழுதினில், விட்டேற்றியாக
தோழிகளுடன் அமர்ந்து நேரத்தை விரட்டிக்கொண்டிருக்கையில் காதில் விழுந்தது எவரோ ஒலிதானம் செய்த"இருபது கோடி நிலவுகள்" பாடல். அதில்,

மானிட பிறவி என்னடி சிறப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு!

என்றும்

நூறு கோடி பெண்கள் உண்டு, உன் போல் யாரும் இல்லயே!!

என்றும் பாடல் வரிகள்.

"இதையே சொல்லிகிட்டு கிடங்கடா, காலங்காலமா" என்று அலுப்பாய் சொல்லிவிட்டு துணி அலச சென்ற கல்பனா ஏனோ நினைவுக்கு வந்தாள்!


Thursday, February 28, 2008

சுஜாதா - சில நினைவுகள்

சுஜாதா அறிமுகமானது ஆனந்தவிகடனின் வாயிலாகத்தான். பூக்குட்டியை மறக்க முடியுமா?!
அது அனிதாவின் காதல்கள் தொடர்கள் வெளிவந்து கொண்டிருந்த காலம். ஒவ்வொரு வாரமும் அந்த தொடரை எதிர்பார்த்து, பள்ளி நண்பர்களுடன் விவாதித்தது மறக்கமுடியாதது. பதின்ம வயதின் ஃபாண்டஸி-யென்று இப்போது தோன்றுகிறது.

எழுதியவரின் பெயர் அறிந்து நான் படித்த எழுத்துகள், பாலகுமாரனுக்கு பிறகு சுஜாதாதான். அதன்பின், அவரது ஒருசில சிறுகதைகள், மற்றும் டிடியில் வந்த நிலா-ஜீனோ தொடர், இந்தியா டுடேயில் அவரது ஆக்கங்கள்.பல்கலைகழகக் கல்லூரியில் தமிழ் வகுப்பில் "உங்களை கவர்த்த எழுத்தாளர் யார்" என்ற பேராசிரியை தேவதத்தாவின் கேள்விக்கு, பலரும் சொன்ன பதில் சுஜாதாதான். அதற்கு அவரது பதில் சுஜாதா ஒரு நல்ல எழுத்தாளர் என்று
நான் சொல்ல மாட்டேன். அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகள் தவிர அவரது பெண் பாத்திர படைப்புகள் மற்றும் பெண்களை அவர் விவரிக்கும் விதம் சரியில்லை என்ற தொனியிருந்தது. பெண்கள் பலகலையில் பணிபுரியும், திருமணம் செய்துக் கொள்ளாத பெண்ணியவாதி அவர்.
டீ சர்ட் வாசகங்களும் மற்றும் மெக்ஸிகோ சலவைகாரியும் மனதில் வந்து போயின சட்டென்று.

ஓ..இப்படியும் ஒரு கோணம் இருக்கோ! அதன்பின், அறிவியல் சார்ந்த அவரது எழுத்துகளைவிட, மற்ற நாவல்கள் படிப்பது தீவிரமாகியது!!!

கற்றதும் பெற்றதும் ஒருவாரம் மிஸ் பண்ணியது இல்லை.
சீரங்கத்து தேவதைகள் என்னுடய வாங்கவேண்டிய புத்தகங்கள் லிஸ்டில் முதலில் இருந்தது.
வேலைக்கு சேர்ந்தவுடன் சும்மாயிருந்த சனி,ஞாயிறுகளுக்காக முருகன் லெண்டிங் லைப்ரரியில் மீண்டும் சுஜாதா வாசம்.
"காயத்ரி" படித்த இரவு முழுவதும் டிடெக்டிவ் கனவுகள்!!

நான் கருவுற்ற காலத்தில் பலரும் என்னை பலவித புத்தஙகங்களை படிக்க வற்புறுத்திய சமயத்தில்
மாய்ந்து மாய்ந்து படித்தது சுஜாதாவின் புத்தகங்களை மட்டும்தான்!

ஆ, ராஜராஜன் கிணறு, மத்யமர் கதைகள், கனவுதொழிற்சாலை, பிரிவோம் சந்திப்போம்,ப்ரியா,ஜன்னல் மலர்,ஒரே ஒரு துரோகம், வசந்தகால குற்றங்கள் என அவரது எழுத்துலகு ஈர்த்து வைத்திருந்தது. சே..எப்படி கொண்டு வந்து முடிக்கறார்..என்று பிரமிக்க வைத்திருக்கிறது.

பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், என்னைப் போல் பொழுதுபோக்கிகளை பிரமிக்க வைக்கும்
வசீகரம் இவரது எழுத்துக்கு இருந்தது உண்மை!

இன்னும் என்னவெல்லாம் எழுத திட்டமிட்டிருந்தாரோ!
அன்னாருக்கு ஒரு வாசகியின் அஞ்சலிகள்!!

Friday, January 25, 2008

எனக்கு பிடித்த பதிவு - காட்டாறுக்காக

எழுதியதிலேயே எனக்கு பிடித்த பதிவைப் பற்றி எழுத என்னை அழைத்த
காட்டாறுக்கு நன்றி!

எழுதியது 50+ பதிவுகள்..அதிலே சொல்லிக்கற மாதிரி ஒண்ணும் எழுதல..
மொக்கை, மொக்கை மேலும் மொக்கையை தவிர!!
எல்லாரோடையும் பகிர்ந்துக்கரதுக்கு நிறய இருக்குன்னாலும், எழுதி
வைக்க தோணறது இல்ல..ம்ம்..சோம்பேறித்தனமும் காரணமா இருக்கலாம்.
இருக்கலாம் இல்ல..சோம்பேறித்தனம் தான். எழுதற நேரத்தில நாலு பதிவாவது
படிச்சிட்டு போய்டலாமேன்னு நினைக்கறதும் ஒரு காரணமா இருக்கலாம்.

ஓக்கே ஓக்கே!! நான் எழுதியதெல்லாமே பிடிச்சதுதான் என்றாலும்,
அனுபவிச்சி எழுதினது "நினைவுகள்" தான். எழுத பிடிச்சதும் அதுதான்!!


நினைவுகள்...: மயிலிறகே...மயிலிறகே..

நினைவுகள் : கும்பிட போன தெய்வம்...

நினைவுகள் : தூங்காய்...கண்..தூங்காய்

நினைவுகள் : வாராய்..நீ...வாராய்

நினைவுகள் : திருநெல்வேலி அல்வாடா....

நான் எழுதினதுல எனக்குப் பிடிச்சது சொல்றதோட, மத்தவங்க எழுதுனதுல எனக்கு பிடிச்சது/பாதிச்சது சொல்லலாம்னு நினைக்கறேன்.
அதுல, காட்டாறு எழுதின கவிதைகள் மறக்க முடியாது. அதுவும், என் இரண்டு வயது பெண் குழந்தை யார்கிட்டேயாவது போகும்போது இந்த கவிதை சட்டென்று ப்ளாஷ் ஆகும்.

இன்னொரு கவிதை

கடைசியா, அந்த "தோழியின் மரணம்" பதிவும் என்னை கலங்க வச்சது!!

Wednesday, January 09, 2008

சந்தனக்காடு - வீரப்பன் தொடர்நாடகப் பாடல்

சந்தனக்காடு - வீரப்பன் தொடர்நாடக பாடல்

ஏ..வேலாயி..வேலாயி!!
விறகொடிக்கும் வேலாயி
நீ வீரப்பனை பார்த்ததுண்டா
அவன் வீரக்கதை கேட்டதுண்டா


ஒனக்கொரு மகன் பொறப்பான்
அவன்கதய சொல்லிவையி
புலியாக மாறிடுவான்
......

கண்ணான தேசத்தில காவேரி ஓரத்தில
காட்டுச்சிங்கம் பொறந்ததடி
ஈச்சந்தோப்பு மீச வச்சி
வீரத்தையே நெஞ்சில் வச்சி
வரிப்புலி வளர்ந்ததடி!

ஏ காட்டுக்குள்ளே மறைஞ்சிருந்தும்
உலகத்துகெல்லாம்
தெரிஞ்சிருந்தான்!!
....
ஆதரிக்கும் தெய்வமடி
ஆத்திரம் வந்தா
மிருகமடி..
நல்ல மிருகமடி

தொண்டக்குழில இருந்த சோத்த
எடுத்து வந்தவன்டி
யாரும் நாடி வந்தா
இருந்ததெல்லாம் பங்கு வச்சவன்டி!

இவன நம்பி லட்சம் வீட்டில் ஒல கொதிச்சதடி..
கோட்ட இவன் தலைக்கு கோடி கணக்கில் வெலய வச்சதடி!

காட்டயெல்லாம் கட்டிக் காத்த வீரனாருதான்..
இவன் அள்ளி தந்து சாஞ்சி போன அய்யனாருதான்!!

பெத்த தமிழ் மேலே ஒரு பாசம் வச்சவன்டி
அதுக்கு பாதகம்தான் நேர்ந்துபுட்டா வெடிய வச்சவன்டி

கண்ணான தேசத்தில காவேரி ஓரத்தில
காட்டுச்சிங்கம் பொறந்ததடி..

மானத்துக்கு அவன் காவல்காரன்
மாரியாத்தா ஆட்டம் போடும் கோவக்காரன்டி
.........
........


ஏ..பேய் நடுங்கும்..புயல் நடுங்கும்
உள்ள வந்தா முனி நடுங்கும்..
சாமி கூட இங்க வந்த சத்தியமா கொல நடுங்கும்!!
முள்ளவேலங்காட்டுக்குள்ள 36 வருசங்களா
ஓடி ஓடி அலஞ்சப்பறம்
ஓஞ்ச எடம் இந்த எடம்..
பூச்சொரியும் நந்தவனம்!

Digicam-ல் ரெக்கார்ட் செய்தது. பப்பு பின்னால் கத்திக்கொண்டிருந்ததை தவிர்க்க முடியவில்லை!
வார்த்தைகள் புரியாத இடங்களையெல்லாம் .... நிரப்பியிருக்கிறேன்.



இந்த வீரம், ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பென்றால் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கும்...
ஒரு நூற்றாண்டுக்கு முன்பென்றால் ஆங்கிலேயனை ஓட ஓட துரத்தியிருக்கும்!!

Tuesday, January 08, 2008

அது ஒரு கதைக் காலம்



காக்கையை ஏமாற்றிய நரியும்
நரியை ஏமாற்றிய காக்கையும்
கொக்குக்கு விருந்து வைத்த ஓநாயும்
ஒநாய்க்கு விருந்து வைத்த கொக்கும்
திராட்சைக்கு ஏங்கிய நரியும்
பாட்டிவீட்டு தோட்டத்தில்
உலாவிக்கொண்டிருந்தன கேட்பாரற்று!
சன்,விஜய், கலைஞர் அலைவரிசைகளில்
கரைந்துப் போயிருந்தாள் பாட்டி!!
பஞ்ச காலத்தில்
காட்டில் தொலைத்து விடப்பட்ட
சித்திரக்குள்ளனும் அவன் சகோதரர்களும்
அலைந்துக்கொண்டிருந்தனர்...
தடயத்திற்காய் விட்டுவந்த
அப்பத்துண்டுகளைத் தேடி!!!

Monday, January 07, 2008

முதல் இரவு

ஒரே கலக்கம்...தயக்கம்!!
மனம் நிறைய குழப்பங்கள்!!
ஆனால் ஆசை ஒருபக்கம்!! வேறு வழியில்லை!!

உள்ளே போய் அழ நேர்ந்தால்..! வேறு வழியில்லை..வெளியே வந்துவிடத்தான் வேண்டும்.
ஆனாலும், குடிக்க தண்ணீர் எடுத்து வைக்க வேண்டும் அவன் எடுத்து வைத்திருப்பான்.

நான் செய்வது சரியா..தவறா? யார் தான் சொல்ல முடியும்..?
எனக்கு முன்பும் பல பேர் செய்திருக்கிறார்கள்..இனிமேலும் செய்யத்தான் போகிறார்கள்!!
துணிந்து விட வேண்டியதுதான்...ம்ம்..

வருவது வரட்டும்..என் அம்மா, பாட்டி செய்யாததையா நான் செய்துவிட போகிறேன்..
பலவித எண்ணங்களுக்குப் பிறகு....போய் சேர்ந்தோம்..சத்யம் தியேட்டர் வாசலில் என்
குட்டிப்பெண் பப்புவோடு...முதல் முறையாக..நைட் ஷோ பில்லா 2008 பார்க்க!!

எதிர்பார்த்தபடி பிரச்சினை ஏதும் செய்யாமல் சமர்த்தாய் தூங்கிவிட்டாள்!!!

Friday, January 04, 2008

மழைக்கால நினைவுகள்




ஒவ்வொரு மழைக்காலமும்
கடந்து செல்கிறது...
என் நினைவுக்கூட்டில்
புதைந்திருக்கும்
உன் படிமங்களை
விடுவித்தபடி!!

Thursday, October 18, 2007

இந்தி பாப் ஆல்பங்கள் - Bally Sagoo - III

பாலி சாகு...இவருக்கு அறிமுகம் தேவையில்லை! நாம் எல்லோரும் இவரது இசையை கண்டிப்பாக கேட்டிருக்கிரோம் ..நேரடியாக இல்லாவிடினும்,இவரது இசையால் கவரப்பட்டவர்கள் அதை நமக்கு வேறு வடிவமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்..!! இவரது ஒரிஜினல் பாடல்களை கேட்டால் உங்களுக்கே புரியும்..(காப்பி அடித்துதான்..)!
இவர் பாடகர் அல்ல..DJ..ரிமிக்ஸ் என்ற கான்செப்டை இந்தி இசையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்..இந்தி பாப் உலகை உயர்த்தியவர்..பாப் உலகின் முன்னோடி!

லூதியானாவில் பிறந்திருந்தாலும், இங்கிலாந்து வாழ் இந்தியர். ஆனாலும், அவரது வேர்களை தேடி இந்தியா வந்தவர். இந்திய பாரம்பரிய பஞ்சாப் பாங்ரா மீது இயல்பிலேயே நாட்டம்..ஒரிஜினல் பாங்ரா பாடல்கள் மட்டும் அல்லாது, இவரே பல ஆல்பங்களில் இசை கம்போஸ் செய்துள்ளார்.. இவரது ரீமிக்ஸ் பற்றி தனியாக பதிவு எழுத வேண்டும்..ஒரே பதிவில் இவரை பற்றி சொல்லிவிட முடியாது கண்டிப்பாக....சினிமாவில் அதிகபட்சமாக காதல், சந்தோஷம், துக்கம், இல்லையென்றால் ஏதாவது விழா/விசேஷங்களை வைத்து பாடல் காட்சிகள் அமையும்.ஆனால் வாழ்க்கை, இளம்பிராயத்து பிரச்சைனைகள்,
கனவுகள்..தத்துவம், மக்கள்,கலாச்சாரம், கவிதை..அரசியல்..இவை எல்லாவற்றையும்..இன்னும் பட்டியலிடாதவையும் கூட..பாப் ஆல்பங்களில் தொட்டிட முடியும்..வசீகரிக்கும் இசையின் துணையோடு!!


இந்த பாடலை கேட்டு பாருங்களேன்..இது கண்டிப்பாக தமிழுக்கு புதிதல்ல..ஆனால், உள்ளத்தை அள்ளித் தா வருவதற்க்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பே வந்து விட்டது..இவரது இந்த பாடல், எப்போது கேட்டாலும் உள்ளத்தை அள்ளும்.


Piche piche aaunda meri chal be na aaye

Mera Laung Gawacha - Bally Sagoo





Dil de pariyan aankh maar maar jande ve
milan main aayi tenu roti de khavane ve
roti de khavane ve



இந்த பாடலும் நமக்கு புதிதல்ல என நினைக்கிறேன். விறுவிறுப்பான டான்ஸ்க்கு உத்திரவாதம்..




சில தாபாக்களில் கேட்கலாம். நம்ம ரேடியோகளில் பாப் இசையை ஊக்குவித்தால், அனைவரும் கேட்டு மகிழலாம்.இப்போழுது பாப் இசையே மங்கிக் கொண்டு வருகிறது.. இப்போவோ அப்போவோ என உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கும் பாப் உலகின் நிலை மாறலாம்.

Bally Sagoo - Aaja Nachle

பதிவர் செல்லாவுக்கு ?

Buffalo soldier - Bob morley

Buffalo soldier, dreadlock rasta
There was a buffalo soldier in the heart of america,
Stolen from africa, brought to america,
Fighting on arrival, fighting for survival.

I mean it, when I analyze the stench -
To me it makes a lot of sense:
How the dreadlock rasta was the buffalo soldier,
And he was taken from africa, brought to america,
Fighting on arrival, fighting for survival.

Said he was a buffalo soldier, dreadlock rasta -
Buffalo soldier in the heart of america.

If you know your history,
Then you would know where you coming from,
Then you wouldn't have to ask me,
Who the 'eck do I think I am.

I'm just a buffalo soldier in the heart of america,
Stolen from africa, brought to america,
Said he was fighting on arrival, fighting for survival;
Said he was a buffalo soldier win the war for america.

Dreadie, woy yoy yoy, woy yoy-yoy yoy,
Woy yoy yoy yoy, yoy yoy-yoy yoy!

Woy yoy yoy, woy yoy-yoy yoy,
Woy yoy yoy yoy, yoy yoy-yoy yoy!

Buffalo soldier troddin through the land, wo-ho-ooh!
Said he wanna ran, then you wanna hand,
Troddin' through the land, yea-hea, yea-ea.

Said he was a buffalo soldier win the war for america;
Buffalo soldier, dreadlock rasta,
Fighting on arrival, fighting for survival;
Driven from the mainland to the heart of the caribbean.

Singing, woy yoy yoy, woy yoy-yoy yoy,
Woy yoy yoy yoy, yoy yoy-yoy yoy!
Woy yoy yoy, woy yoy-yoy yoy,
Woy yoy yoy yoy, yoy yoy-yoy yoy!

Troddin' through san juan in the arms of america;
Troddin' through jamaica, a buffalo soldier
Fighting on arrival, fighting for survival:
Buffalo soldier, dreadlock rasta.

Woy yoy yoy, woy yoy-yoy yoy,
Woy yoy yoy yoy, yoy yoy-yoy yoy!

பதிவின் தலைப்பு : குசும்பனின் வழிகாட்டுதல் பதிவின் வழியில்...

ஒரு முன்னோட்டம்-கற்றது கம்ப்யூட்டர்

நான் பரவால்ல சார்..கோடிங் அடிக்காட்டியும் டெஸ்டிங் செஞ்சு
பொழச்சுக்குவேன்..ஆன 15ஆயிரம் குடுத்து ஜாவா படிச்சவன்..
30ஆயிரம் குடுத்து மெயின்ஃப்ரேம்ஸ் படிச்சவன்..
25 ஆயிரம் குடுத்து சாப் படிச்சவன்..ஆர்டிஃப்சியல் இன்டெலிஜென்ஸ் கரைச்சு குடிச்சவன்..
நியூரல் நெட்வொர்க்கிங் சிமுலேட் பண்ணவன்ல்லாம் எங்க சார் போவான்? -

இது போன்ற யதார்த்த உலகை காட்டும் சமூக அக்கறை கொண்ட படம்..

கற்றது கம்ப்யூட்டர்... I

கற்றது கம்ப்யூட்டர் - II

இட்ஸ் மை லைஃப் - டாக்டர்.ஆல்பன்

It's my life - Dr. Alban



It's my life take it or leave it
Set me free what's that crap papa-knew-it-all
I got my own life you got your own life
Live your life and set me free
Mind your business and leave my business
You know everything papa-knew-it-all
Very little knowledge is dangerous
Stop bugging me stop bothering me
Stop bugging me stop forcing me
Stop fighting me stop yelling me
It's my life

Chorus:

It's my life it's my life my worries
It's my life it's my life my problems
It's my life it's my life my worries
It's my life it's my life my problems


It's my life do you understand
I live the way I want to live
I make decisions day and night
Show me signs and good examples
Stop telling me how to run your business
Take a trip to east and west
You find that you don't know anything
Every's getting tired of you
Sometimes you have to look and listen
You can even learn from me

Little knowledge is dangerous
It's my life



It's my life set me free
So you bed so you lie
What you see is what you get
Listen to people and sort things out
Things I do I do them no more
Things I say I say them no more
Changes come once in life

Stop bugging me stop bothering me
Stop bugging me stop forcing me
Stop fighting me stop yelling me
Stop telling me stop seeing me
It's my life.



It's my life...
Ohhhhhhhh yeah

It's my life...Stop bugging me stop bothering me
It's my life...Stop forcing me stop yelling at me
It's my life...it's my life

கேட்டிருக்கிறீர்களா எப்போதாவது இந்த பாடலை!! இல்லையெனில்..

Get this widget | Track details | eSnips Social DNA

தாங்ஸ் டூ செல்லா...மற்றும் மாசிலா & அனைவருக்கும்

பாப் மார்லியை நினைவு கொண்டமைக்கு!!

பாப் மார்லி, steve wonder மற்றும் dr.Alban.... இசையால்
வாழ்ந்து காட்டியவர்கள்... அவர்கள் சமூகத்து வேதனையை இசையால்
வெளிப்படுத்த முயன்றவர்கள்...நாமும் ஆப்ரிக்க சமூகத்திலிருந்து வந்தவர்கள்
என்று சொல்வது உண்மைதான் என்பதை ARR மற்றும் தேவாவின் இசையைக் கேட்கும்போது உணரலாம். ARR, தேவாவின் ஹிட்ஸ் எல்லாவற்றிலும் இவர்களின் தாக்கம் இருக்கும்... (காப்பிய தாங்க அப்படி சொன்னேன்!!)


Buffalo soldier - Bob Marley

Get this widget | Track details | eSnips Social DNA



இதன் தாக்கம் - தமிழில்...

Get this widget | Track details | eSnips Social DNA



Enemies (Dr. ஆல்பன்)
Get this widget | Track details | eSnips Social DNA




"முகவரி"யில் இதன் தாக்கம்.

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, October 16, 2007

கற்றது கம்ப்யூட்டர்... II

பாகம் I படிக்க..

கற்றது கம்ப்யூட்டர்... I

மக்கள் கொந்தளிக்கிறார்கள். கருத்து கணிப்பு, பேட்டிகள் நடக்கின்றன..
சாப்ட்வேர் சமூக ஆர்வலர் ஒருவர் பேசுகிறார்...

எல்லாரும் சாப்ட்வேர்ல நிறைய சம்பாரிக்கறாங்க, சந்தோஷமா இருக்காங்கன்னுதான நினைக்கறீங்க..ஆனா இல்ல..,எவ்ளோ சம்பாரிச்சாலும், அள்ளி அள்ளி செலவழிக்க எவ்ளோ பெரிய பணக்காரணா இருந்தாலும் ஆசைப்படமாட்டான்.அதுவும் இல்லாம, அவங்களுக்கு, மத்த வேலைல இருக்கற மாதிரி பென்ஷன் கிடையாது..ஜாப் செக்யூரிடியும் கிடையாது..
அமெரிக்கால சந்தை வீழ்ச்சின்னா..பாதிக்க படறது இவங்கதான். எப்போ ஃபயர் பண்ணுவான்னு யாருக்கும் தெரியாது.அது மட்டுமா..ஒரு நாளைக்கு குறைஞ்சது 12 மணி நேரமாவது வேலை செய்யணும். அதுவும் இல்லாம..மேல் நாட்டு டைம்ல கான்ஃப் கால்ல ஸ்டேட்டஸ் குடுக்கணும். மத்தவங்க மாதிரி 8 மணி நேர வேலை மட்டும் இல்ல. விளைவு..50 வயசுல வரவேண்டிய வியாதில்ல்லாம் 35 வயசுலயே வருது அவங்களுக்கு..அதை பத்தி யாராவது கவலைபபடறீங்களா?!!அதுவும் இல்லாம, அவங்க சம்பளத்தில பாதிய வருமானவரியா கட்டறாங்க. அத நேர்மையா கட்டறதனாலதான்.."இந்தியா ஒளிர்கிறது". அதனால அவங்களை குற்றம் சொல்றத விட்டுட்டு, எல்லா விலைவாசியையும் கட்டுப்படுத்துங்க..

சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் :

சார்..நான் இந்த வேலைய வாங்க எவ்ளோ கஷ்டபட்டேன் எனக்குத்தான் தெரியும் சார். 2001 recession-ல என் வேலை போச்சு..அப்போ இவங்க என்ன சார் பண்ணிக்கிட்டிருந்தாங்க..அதுவும் இல்லாம நான் வருஷாவருஷம் புதுசா
வர்ற டெக்னாலஜிய படிச்சு என்னை மேம்படுத்திக்க வேண்டியிருக்கு..இந்த கஷ்டம் வேற ஃபீல்டுல இருக்கா சார்.

இன்னொரு சாப்ட்வேர் இஞ்சினியர் :

சார்..நான் mca படிச்சிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில பதிவு செஞ்சேன்.இப்ப வரைக்கும் எந்த வாய்ப்பும் எனக்கும் வரல சார்..கம்ப்யூட்டர் மட்டும் இல்ல..வேற என்ன துறையில இளங்கலை படிச்சிருந்தாலும், ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சிட்டு சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகிடமுடியுதே..அதை யாரும் தடுக்கலையே!! மொத்ததுல இது ஒரு அட்வாண்டேஜ்!

மற்றொரு சாப்ட்வேர் இஞ்சினியர் :

சார்..10ஆயிரம்/15 ஆயிரம் வீட்டு வாடகை எதுக்கு கொடுக்கணும்..அதை பேங்க்குக்கு குடுத்தா
கொஞ்ச நாள் கழிச்சு வீடாவது நாக்கு சொந்தமாகும்ன்னு ஒரு நப்பாசையில் வீடு வாங்குறோம்!!
ஆனா...வட்டி உயர்ந்து உயர்ந்து இப்ப..மொத்த சம்பளத்தையும் இல்ல EMI கட்ட வேண்டியிருக்கு! இதுக்கு பேங்க் காரணமா..இல்ல நாங்க காரணமா??


இன்னொரு சமூக ஆர்வலர் :

சாப்ட்வேர்-ல அதிகம் சம்பாரிக்கறான்னா, அவங்கள உருவாக்கிற ஆசிரியைகளுக்கும் அவங்க அளவுக்கு சம்பளத்தை normalise பண்ணு!! அவங்களை உருவாக்கின 5ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் எல்லாம் இன்னும் 10ஆயிரம்தான் வாங்கறான்னா..அதுல சாப்ட்வேர் மக்களோட தப்பு என்ன?

போலீஸ் அவர்களைத் தேடவில்லை....ஏன்னா இது spoof...

"நாம இந்த கம்ப்யூட்டரை படிச்சதுக்கு ஆர்குட்-ஐயும், தமிழ்மணத்தையும் effective-ஆ
உபயோகிக்க கத்துகிட்டதுதான் ஒரே பயன்னு" சொல்லிட்டு அவங்க ரெண்டு பேரும் பதிவு எழுத/படிக்க போய்டறாங்க..
வாங்க..நாமளும் போவோம்!!

யார் இந்த MCA..?

அதை இங்க போய் பாருங்க...நானே எப்படி சொல்றது??




Spoof of கற்றது தமிழ்...

ஹிஹி..எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்!!

Monday, October 15, 2007

கற்றது கம்ப்யூட்டர்...

நான் ஏன் உனக்கு மெயில் டைப் செய்து எல்லாருக்கும் ஃபார்வர்டு பண்றேன்னா..உன் மெயில் ஐ.டி எனக்குத் தெரியாது. இது இப்படியே ஃபார்வ்ர்டு ஆகி என்னைக்காவது உன் கையில் வந்து சேரும்னுதான். நான் தற்கொலை பண்ணிக்காம இருக்கேன்னா...கஸ்டமர் முன்னாடி என் மானம் போச்சு..சொன்ன டெட் லைன்ல முடிக்க முடியல..அதானால என்ன.மானமே போச்சுன்னாலும், அடுத்த ப்ராஜ்கட்ட பார்க்க, ஆன்சைட் போறேன்.
இன்னும் நாலு வருஷத்தில, இந்த மெயில் நீ படிக்க நேர்ந்தா..பதில் போடு!

இந்த மெயில அனுப்பிட்டு, தூதரகத்துக்கு போலாம்னு கிளம்பறேன்...எங்க டேமெஜர் கூப்பிடறார்..என்னனு பார்த்தா, அந்த ப்ராஜ்கட் ஊத்தி மூடிட்டாங்களாம்..ஏன்னா, அமெரிக்கானோட வேலையெல்லாம் இந்தியனுக்குதான் போகுதுன்னு மக்கள் கலவரம் பண்றாங்களாம்..அதனால் அமெரிக்க அதிபர் H1B விசா-வை கட்டுப்ப்டுத்தி வச்சிருக்காராம்..ம்ம்..இந்த மாதிரி நேரத்தில நான் ஆன்சைட் கிளம்புனது..வேற என்ன..
என்னோட துரதிருஷடம்..!!

சரி..அதாவது போச்சுன்னு இன்னொரு ப்ராஜக்ட்-ல தூக்கி போட்டாங்க..2 வருஷம்...ஜப்பான் கஸ்டமர்....சரின்னு அங்க போனா..அவன்..ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலை செய்றானாம்..4 மணிநேரம் தான் தூக்கம்..அதுவும் lab-லயே படுத்து!! பாஸ்போர்டையும் பிடுங்கி வைச்சிக்கிட்டான்..ப்ராஜக்ட் முடிஞ்சாதான் தருவேன்னு!!அது மட்டும் இல்ல..பெர்சனல் மெயிலும் செக் பண்ண முடியாது அவன் lab-ல!!நான் அனுப்பின மெயில் உனக்கு கிடைச்சதான்..இல்ல..எனக்கே திரும்ப ஃபார்வ்ர்டு ஆகிடுச்சான்னும் தெரியல!!
அவன் மொழியும் புரியாம, சாப்பாடும் கிடைக்காம, அந்த ப்ராஜ்க்ட முடிச்சேன்! அங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசை வச்சு இங்க செட்டில் ஆகலாம்னு, கிடைச்ச ஏர்பஸ்-சை பிடிச்சி இங்க வந்தா....

முதல்ல ஒரு வாடகை வீட்ட பார்த்து குடியேறலாம்னு வீடு பார்க்கப் போனேன்..தெரியாம வீட்டு புரோக்கர் ஒருத்தன் கிட்ட மாட்டினேன். அது எப்ப்டை அவனுங்களுக்கு நம்ம மூஞ்சிய பார்த்தாலே தெரிஞ்சுடும் போல..என்ன...சாப்ட்வேர் எஞ்சினியரான்னான்.
ஆமான்னேன். எங்க வேலை பார்க்கற...TCS-ஆ...CTS-ஆ..விப்ரோ-வா..சத்யமா ன்னு கேட்டான். இவன் ஏன் இதையெல்லாம் கேட்கறான்னு மனசுல நெனச்சிகிட்டு..விப்ரோன்னு சொன்னேன். அப்போ ஒரு 30/35 வாங்குவியா..சரி..இந்த வீடுதான்..15ஆயிரம்
வாடகை..10மாசம் அட்வான்ஸ் ன்னு சொன்னான். இயோ..15ஆயிரமா...2 பெட்ரூம் வீடுதானே..ஏன் இவ்ளோன்னு 10 மாசம் அட்வான்ஸ் -ல்லம் அதிகம்ங்க..ன்னேன்.
யோவ்..35ஆயிரம் வாங்கறே..15ஆயிரம் வாடகை கொடுக்க மாட்டியான்னான் அவன்.
நான் எப்பங்க 35ஆயிரம் வாங்கறேன்ன்னு சொன்னேன்..என் சம்பளம் 25ஆயிரம்ரூபாதாங்க, எதுவாயிருந்தாலும் அவ்ளோ வாடகை கஷ்டங்கனேன்.இப்படி வீடு தேடி அலைஞ்சப்பதான் புரிஞ்சது..சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பேர்ல, மத்தவங்க எல்லாம் குளிர் காயரது..அதனால..எல்லா ரியல் எஸ்டேட்காரனையும் போட்டேன்.
அப்புறம்..பார்த்தா..departmant store..உளுந்து ஒரு கிலோ 30 ரூபான்னு வாங்கினது போய்..இப்போ கிலோ 98 ரூபா. அபுறம்..பால்..எலலா விலயும் ரெண்டு பங்கா இருக்கு! இதுக்கெல்லாம் நான் 25அயிரம் சம்பளம் வாங்குறது மட்டும்தான் காரணமா..?சொல்லு..சொல்லு!!

ம்ம்..இல்ல சார்..- கருணாஸ் பயந்துகொண்டே!

ஏண்டா..எங்க அப்பா, ஒரு சாதரண கிளார்க். அவரு சம்பளத்துல என்னை +2 வரைக்கும் படிக்க வச்சாரு..கவர்மெண்ட் கோட்டால,BE படிச்சேன்..அதுக்கே அவரு கடன் வாங்கி..PFவாங்கின்னு கஷ்டப்பட்டாரு..எதுக்கு..நல்ல வேலைக்கு போனா, நாலு காசு
சம்பாரிக்கலாமேன்னு! அத முடிச்சு வெளில வந்தா அங்க படிச்ச பேசிக், ஃபோட்ரானு, கோபாலும் எங்கயும் வேலைக்கு ஆகல..நான் compiler design-la செய்ச ப்ராஜக்டயும் எவனும் மதிக்கல..மறுபடியும் ஒரு கோர்ஸ் படிச்சு, வாக்-இன் வாக்-இன்னா
ஏறி இறங்கி..ஒரு வேலைய வாங்குறதுக்குள்ள...தாவு தீர்ந்துடுச்சு!! வாடகை, மளிகை,பால்,கரெண்ட் பில், போன் பில் எலலாம் போக கையில நிக்கறது 500 ரூபாதான்!இதுகெல்லாம் என்ன காரணம்..சொல்லுடா..?

பே - கருணாஸ்!


இது நடுவில, எவனோ. என் மெயில ஹாக் செஞ்சு, ஆனந்திக்கு மெயில் ஃபார்வர்டு பண்றான்.
அத திரும்ப மீட்டு, நான் அவளை சந்திச்சேன்.அவளும் ஒரு சாப்ட்வேர் கம்பெனில HR-ஆ இருக்கா..20ஆயிரம் ரூபா சம்பளத்துல! அதான்..யார் யார் சாப்ட்வேர்காரனை ஏமாத்தறானோ அவ்னையெல்லாம் போட்டேன்.!! சரி..சரி..கேசட்டை குடு..நானே சன் டீ.வி ஆபிசிலே குடுத்திடறேன்.

ஓ..அப்படியா சார்..நீங்க செஞ்சதெல்லாம் கொலையா சார்..டாக்டருங்க சம்பாரிக்கலயா..இல்ல
சினிமாகாரங்கதான் லட்ச லட்சமா சம்பாரிக்கலயா..சாப்ட்வேர்-னாலதான்னு சொல்றது தப்புதான் சார்!! - கருணாஸ்.

டேய்..சொன்னத மட்டும் செய்..அந்த கேசட்ட மட்டும் குடுத்துட்டுக் கிளம்பு!!


கேசட் ஒளிபரப்பப்படுகிறது... மீதி பார்ட் -2இல்!!

இது ஒன் அண்ட் ஒன்லி ஜாலிக்காக!!

என் பதின்ம வயது பாப் பாடல்கள் - II

90 களில் டீனேஜை கடந்தவரா நீங்கள்?
அம்மா ப்ளீஸ்..இனிமே நான் ஒழுங்கா படிக்கறேன்...நாமளும் கேபிள் கனெக்ன் வாங்கலாம்..அம்மா..ப்ளீஸ் - என்று ஸ்டார் டீ.வீ, எம் டீ.வீ பார்க்க (1992/1993களில்) உங்கள் அம்மா/அப்பாவை நச்சரித்தவரா நீங்கள்?

ம்ம்...Me wan gal from jullunder city என்று ஒலிக்கும் குரலை கேட்டிருப்பீர்கள்தானே?

1993 களில், தனது முதல் ஆல்பமான No Reservations மூலம் பாப் உலகை ஆக்கிரமித்தாரே ஒருவர்..Steven Kapoor aka. Apache Indian. அவரது இந்த பாடல் நினைவிருக்கிறதா...

Get this widget | Track details | eSnips Social DNA


அவரது அடுத்த ரிலீஸ் "Choke there"!! அதன் அர்த்தம்
புரியாவிட்டாலும், chorus மட்டும் கூட பாடி, மனதைத் தேற்றிக் கொண்டிருந்தேன்.இந்த பாடலை பாட ஆசைதான் என் வயதொத்த அனைவருக்கும் அப்போது!! ஆனால் பாடல் வரிகள்...?? அதனால் chorus மட்டும் பாடி ஆசையை தீர்த்துக்கொள்வோம்.... Here it is..Choke there!!

Chok there - them a ball when they see the Indian
Chok there - raggamuffin under style and pattern
Chok there - when me come that a different fashion


Get this widget | Track details | eSnips Social DNA


பாப் பாடல்கள் என் பாட்டிக்கு பிடிக்கவே பிடிக்காது..திட்டுதான் விழும்!!அது ஏனோ...வயதானவர்களுக்கு இந்த பாப் பாடல்கள் பிடிப்பதில்லை(Generation gap)...ம்ம்..பாவம்..Hi-Fi வாழ்த்துப் போல choke there/Boom Shaka laka என்று பாடல் வரிகளை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு apache indian எங்களை ஆக்ரமித்திருந்தார்!

அவரது அடுத்த ஆல்பமான Nuff Vibes-யின், Boom Shakalakka புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது!!Boom Shakalakka-வின் chorus வரிகளை,

Wine your body
Wriggle your belly
Dip and go down in a the new stylee
Wine and go up, wine and go down
Bubble and a rockca the new style around
You fe line it up, you fe wine it up
Do the boomshackalak till the dance hall full up - தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும்
சொல்லும் அளவுக்கு நான் மனப்பாடம் செய்து வைத்திருந்ததை என் பாட்டியால் தடுக்க முடியவில்லை..ஹா..ஹா!!

இதோ அந்த பாடல்..

Get this widget | Track details | eSnips Social DNA


1995-இல் வெளியான Make Way For The Indian ஆல்பத்தின் Ragamuffin Girl எனக்கு பிடித்தமான பாடல்...ஹிட் பாடலுங்கூட!!
இந்த ஆல்பத்திற்குப் பின், I didn't hear much about Apache Indian the Don Rajah!!
உங்களில் யாரேனும்..Apache Indian-னின் ரசிகராக இருப்பீர்களாயானால், உங்களுக்காக...

Get this widget | Track details | eSnips Social DNA


Any of His fans around??

Monday, October 08, 2007

90'களின் பாப் ஆல்பங்கள் - வீடியோ

என் பதின்ம வயது பாப் பாடல்கள் - I

இந்தி பாப் ஆல்பங்களின் தொடர்ச்சியாக...

Ila Arun
Nigodi kaisi jawani hai

கற்றது தமிழ்...

பிரபாகரின் தற்கொலை முயற்சியிலிருந்து துவங்குகிறது கதை. தன் தற்கொலைக்கான காரணத்தை எழுதும் கடிதத்தின் வாயிலாக விரிகிறது காட்சிகள். எந்தவித உறுதியானக் காரணமுமின்றி, காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டு கஞ்சாக் கடத்தியதாக பொய்யாகக் குற்றசாட்டப்பட்டு அவமானத்துக்குள்ளாகிறார் ஆரம்பப்பள்ளி தமிழ் ஆசிரியரான பிரபாகர்.
காவல்துறையினரிடமிருந்து தப்பியோடி, வெளிமாநிலங்களில் சாதுக்களோடு அலைந்து திரிந்து நீண்ட முடி ம்ற்றும் வெட்டப்படாத தாடியுடன் உருமாறுகிறார். மீண்டும் சென்னை திரும்பும் பிரபாகர், அவரது இந்த நிலைக்குக் காரணமானவர்களைக் கொலைச் செய்கிறார்.
யுவான் சுவாங் கிடம் பத்தாயிரம் தருவதாக கூறி, அவரது தன்னிலை விளக்கத்தை ஒளிப்பதிவு செய்ய சொல்கிறார். அதில் சொல்லப்படுகிறது..அவரது சாவு துரத்தும் வாழ்க்கை..இளைம்பிராயம்...சாலை விபத்தில் தன் குடும்பத்தினரை இழந்து, பள்ளியிறுதி வரை விடுதியில் கழித்தது..தான் தமிழை தேர்ந்தெடுத்து படிக்க காரணமாய்ரிக்கும் அபிமான தமிழ் ஆசிரியர், பால்யத்தோழி ஆனந்தியிடம் ஈற்படும் ஈர்ப்பு...ஆனந்தியிடம் விட்டுப்போகும் கடிதத்தொடர்பு..ஒரு விலைமாதராக அவரைச் சந்திக்க நேர்ந்த அவலம்..தான் கொன்றவர்களின் விவரம்..


ஒளிநாடாவை சன் தொலைக்காட்சியிடம் கொடுத்துவிட்டு, ஆனந்தியுடன் தான் வளர்ந்த வீட்டை காண அம்பாசமுத்திரத்திற்கு பயணப்படுகிறார். காவல்துறை அவரை கைது செய்யத் தேட தொடங்குகிறது....அம்பாசமுத்திரத்தில் கைதுச் செய்யப்படுகிறாரா பிரபாகர்..அவர்கள் இருவருக்கும் என்ன நேர்கிறது?

தயாரிப்பாளர்கள் பெயர் தவிர பெயர் மற்றும் படவிவரங்கள் அனைத்தும் தமிழிலேயே போடப்படுவது அருமை..படக்காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் விதம் நன்று.

"என்ன சேரப்போறே?" என்ற கதாநாயகியின் கேள்விக்கு, தமிழ் படிக்கப்போவதாக சொல்கிறார் கதாநாயகன். உடனே "ஏன், மார்க் கம்மியா" என்ற கதாநாயகியின் கேள்வி "நச்".

"தட்டாமாலை சுத்தறது எனக்கு பிடிக்காது..ஆனா, எனக்கு பிடிக்குமா..ன்னு தெரியாம, பிடிச்சதா நெனைச்சு சுத்துவாரு. அவருக்கு அது பிடிச்சதானால, அதை நான் அவருக்கு சொல்லல!! " போன்ற கணங்கள்!!

கால் சென்டரில வேலை செய்பவரிடம் "உன் பேர் கௌசிக்..ஏன் உன் பேரை தாமஸ்ன்னு சொல்றே..என்பதும் 2000 வருஷத்து தமிழ் படிச்ச எனக்கு 2000 ரூபாதான் சம்பளம்.ஆனா, 25 வருஷத்துக்கு முன்னாடி வந்த பொட்டி, அதாண்டா கம்ப்யூட்டர் அதை படிச்சவனுக்கு 2 லட்சம் சம்பளம்..எப்படி எப்படி?? என்று கேட்பதும்...

நண்பனது சாப்ட்வேர் அலுவலகத்திற்குச் சென்று..."இவ்ளோ பெரிய ஆஃபிஸ், ஏ சி..உங்க எம். டி அமெரிக்காவுல உனக்கு வேற 2 லட்சம் சம்பளம்.." என்றுக் காட்டும் வியப்பு, நக்கல் தொனி..என்று...மிக நன்றாக நடித்திருக்கிறார் ஜீவா!

ஒப்பனை எதுவும் இல்லாமல், மிக எளியத் தோற்றத்தில், நம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பெண் போல அஞ்சலி."நெசமாத்தான் சொல்றியா?" என்று..நான்கு நார்த்தைகொருமுறைக் கேட்பதும்...இவரது அடையாளம்...மட்டுமல்ல..இன்னும் சிறிது நாட்களுக்கு நமது சானல்களுக்கும்தான்!

பின்னனி இசை..மற்றும் பாடல்கள்..நன்று!
தேடலின் இசையாய்.. இன்னும் ஒரு இரவு, துள்ளலின் இசையாய்..பற பற... பட்டாம்பூச்சி,
தனிமையின் இசையாய்..பறவையே எங்கு இருக்கிறாய்..!!

ஆனால் சில கொலைகள் மற்றும் வன்முறையை தவிர்த்திருக்கலாம்..!!

தமிழ் படித்ததனால் சைக்கோ ஆகிறாரா..இல்லை..அவரது வாழ்வில் நிகழ்ந்த பல விபத்துகள் போல தமிழ் படிக்க நேர்ந்ததும் ஒரு விபத்தா?

இங்கு இருக்கும் எல்லா சாப்ட்வேர் கம்பெனி பணியாளார்களும், அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ இருக்கும் கம்பெனிகளுக்குத்தான் நேரடியாகவோ
மறைமுகமாகவோ வேலை செய்கிறோம்.. தமிழ் படிச்சா எந்த கம்பெனியில் டாலர்களில் பணம் வரும்?

- இது எனக்குள் எழுந்த கேள்விகள்!!

Friday, October 05, 2007

என் பதின்ம வயது பாப் பாடல்கள் - I

பாப் பாடல்கள் என்னை எப்போதுமே ஈர்ப்பவை. அதுவும் இந்தி பாப் மீது அளவிட முடியாத காதல் உண்டு!முன்பு தூர்தர்ஷன் காலத்தில் ஹாட் ஸ்பாட் என்று ஒரு நிகழ்ச்சி சனி இரவுகளில் ஒளிபரப்பப்படும்.கவிதா கிருஷ்ணமூர்த்தி, ரெமோ, உஷா உதூப் மற்றும் பல பாப் பாடகர்களின் பாடல்கள் இடம் பெறும். அப்போது பாப் பாடல்கள் அவ்வளவாக பிரபலமாகவில்லை. ஜீ தொலைக்காட்சி வந்தபின், ஓரளவு பாப்பாடல்கள் இடம் பெற துவங்கின. வழக்கமான சினிமாப் டூயட் பாடல் காட்சிகளை விட, வித்தியாசமான காட்சி அமைப்புகள், தாளம் போட வைக்கும் மெட்டுகள், இளம்வயதினரை வசீகரிக்கக்கூடிய டான்ஸ் ஸ்டைல்
எனப் பல காரணங்கள் கவர்வதற்கு இருந்தன இந்த பாப் ஆல்பங்களிடம்.

90களில் வந்த பாப் பாடல்கள்.. இவற்றைக் கேட்கும்போது, என்னை திரும்ப அந்த
பதின்ம வயதுக்கே கொண்டு செல்லும் சக்தி படைத்தவை.

நினைவுகளை அசை போடுவது சுகமானது!

பாப் பாடல்கள் என்றில்லை..பதின்ம வயதில் நாம் ரசிக்கும் ஒவ்வொரு பாடலும்/விஷயமும் மீண்டும் அவற்றை கடக்க நேரிடும்போது பழைய நினைவுகளுக்கு..அந்த கால்கட்டதிற்கு அழைத்துசெல்பவையாக இருக்கிறது!!

அந்த வயதில்தான் எத்தனையெத்தனை கனவுகள்..திட்டங்கள்..வருங்காலத்தை பற்றிய கனவுகள்..
எண்ணங்கள்..நட்புகள்..சந்தோஷங்கள்!!

Pari Hoon Main-Sunita Rao

எனக்கு மிகவும் பிடித்தமான பாட்டு -
இந்த பாடல்தான் சுனிதாவுக்கு அறிமுகத்தை தந்தது! அந்த இன்னொசன்ட் முகமும், பள்ளிச் சீருடையில்
வகுப்பறையில் அமர்ந்திருப்பதும் ..கறுப்பு வெள்ளையில் படக்காட்சிகளில் இந்த பாடலை கேட்பதும், பார்ப்பதுமே
சுகம்தான்.! சுனிதாவின் இன்னொரு ரசிக்கும்படியான பாடல் Kesaria!!
ஆனாலும்,சுனிதாவின் அசர வைக்கும் அழகும், கிறங்கடிக்கும் குரலுமாக....
pari-ஐ போல மற்றொரு பாடலை, ரசிகர்கள் விரும்பினாலும் சுனிதாவாலேயேகூட கொடுக்க முடியாது...
Pari என்றால் Fairy/ beautiful woman..உண்மைதான்!

மைசூர் சுற்றுலா முடிந்து வந்து, நான் உனக்கு பரிசளித்த
சந்தனவாசம் வீசும் சாவிக்கொத்து இருக்கிறதா உன்னிடம் இன்னும்!!

Get this widget | Track details | eSnips Social DNA


Johnny Joker - Shweta Shetty

மறக்க முடியுமா இவரை!! ஷ்வேதா..ஒரு bold voice அலட்சிய பார்வை மற்றும் அநாயசமான ஸ்டைல்! 93 இல் வெளி வந்த பாடல் இவருக்கு பல பாலிவுட் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. இந்த பாடல் யாரிடமாவது இருக்கிறதா?

இவரது மற்ற ஹிட் பாடல் Deewane To Deewane Hain..அதைதான் இணைத்திருக்கிறேன்.

Dil kisika kilona nahin!!

அப்போது ஸ்டார் டீவியின் நெடுந்தொடர் "The Bold and the Beautiful" ஒளிபரப்பாகுமே....அந்த தலைப்பில் நீ எழுதிய கடிதம் பிரிக்கப்படாமல் இருக்கிறது என் ரெக்கார்ட் நோட்டில்!

Get this widget | Track details | eSnips Social DNA


Dole Dole Dil Ye Dole - SUCHITRA

சன்ரைஸ் விளம்பரத்தில் வந்த பெண்..ஷாருக்குடன் ஒரு படதில் நடித்தார்.
இந்த பாடலும், Dum tara என்ற பாடலும் என்னுடைய விருப்ப பாடல்கள்!
இளமை துள்ளும் இந்த பாடலில் வண்ண வண்ண குடைகளுடன் கல்லூரி வராந்தாவில், குட்டை கவுனுடன்
துறு துறுவென்று இருந்த சுசித்ரா..
விரைவில் பாப் உலகில் இருந்து காணாமல் போனார்.

அப்போதெல்லம் அடிக்கடி நினைத்துக் கொள்வேன் எப்போது பெரியவர்களாவோமென்று! இப்போது உணர்கிறேன் சின்ன வயது சந்தனமுல்லையாகவே இருந்திருக்காலாமோவென்று!!

Nigodi kaisi jawani hai -Ila Arun

கிராமத்திய பாப் இசை ராணி...இவரது எல்லா பாடல்களுமே ஹிட்..!
கல்நாயக் பாடல்கள் போதும் இவர் பற்றி தெரிந்துக் கொள்ள!!
இவரது 'ஹஸ்கி வாய்சும்' இந்த ஆல்பம் படமாக்க பட்ட விதமும், இவரது நடிப்பும்...முறைப்பும்..ரொம்பவே அழகு!!

இந்த பாடலையும் தேடிக்கொண்டிருக்கிறேன் இணையத்தில்...உன்னையும் சேர்த்து...நெடுநாட்களாக!!


Baba Sehgal - Thanda Thanda Pani

இவர் இல்லாமல் இந்தி பாப்? இல்லை..இந்தி(ய) ராப் மற்றும் பாப் உலகின் முன்னோடி!
ஆனாலும் இது காப்பிதான்...indianised!!
உடை விஷயத்தில் ரொம்பவே தைரியசாலி..ராமராஜன்..கோவிந்தா போல்!!
பாடலில் ஒருவித நகைச்சுவையும் இருக்கும்! "Manjula" பாடல் ஒரு உதாரணம்!


Get this widget | Track details | eSnips Social DNA