உங்கள் வீட்டில் ஒரு வாண்டாவது இருக்கிறதென்று அர்த்தம்..அர்த்தம்!!
1. அவர்கள் பாடும் குழந்தைப்பாடல்களை(ரைம்ஸ்) உங்களையறிமலேயே முணுமுணுக்கத் தொடங்கியிருப்பீர்கள், அவர்கள் அருகிலில்லாத போதும்!!
2. டூத் பிரஷோ, அல்லது வீட்டுக்கு தேவையான தொங்கும் அலங்காரப் பொருட்களோ, சிறு சாமான்களோ தேர்ந்தெடுக்க நேர்ந்தால் நீங்கள் வாங்கியது ஆரஞ்ச்/மஞ்சள் ப்ளோரசண்ட் கலர்களில் இருக்கும்!!
3. மளிகை சாமான்கள் வாங்கும்போது, எதனுடன் இலவசமாக பெரிய பாட்டில்கள், கண்டெய்னர்கள் வருகிறதென்று பார்த்து வாங்குவீர்கள், குட்டீஸின் விளையாட்டு சாமான்கள் போட உபயோகமாகுமென்று!
4. புத்தகக் கடைக்குச் செல்வீர்கள், வாங்கவேண்டியவற்றை மனதில் நினைத்துக் கொண்டு! ஆனால், நேராக குழந்தைகள் பகுதிக்குச் சென்று நிற்பீர்கள். கடைசியில், இன்னொரு நாள் பார்க்கலாம் என்று பில் போடும்போது நினைத்துக் கொள்வீர்கள்!!
5. புதிதாக முளைக்கும் குழந்தைகளுக்கான கடைகளை உள்ளே சென்று பார்த்துவிட ஆசையிருக்கும், வாங்குவத்ற்கு ஒன்றுமில்லாவிட்டாலும்!!
9 comments:
உண்மை முல்லை - பேரன் பேத்திகள் வந்தபோது இதெல்லாம் தானாகவே வந்து விட்டன
me the 2ND?:):):)
எனக்கு குழந்தை இப்போதைக்கு இல்ல, ஆனாலும் நான் இதையேத்தான் செய்றேன்:):):)
நன்றி சீனா அய்யா!
நன்றி ராப்! ஆமா, நீங்கதான் 2ண்ட்!
ம்ம்..அப்போ இது உங்க வீட்டுல இருக்கறவங்க படிக்க வேண்டியது....வாண்டு நீங்கதானோ?:-)
நன்றி அமித்து அம்மா!
நன்றி அமுதா!
:........)
நன்றி சீனா அய்யா!
நன்றி ராப்!
நன்றி அமித்து அம்மா!
நன்றி அமுதா!
எல்லாருக்கும் நன்றி சொன்ன ஆச்சிக்கும் நன்றி :))))
அவ்வ்.. ஆமா எனக்கும் இருக்குது இந்த பிரச்சினை.? என்ன பண்ணலாம்னு சொல்லவேயில்லையே நீங்க..
ம்ம்ம், இந்த அறிகுறிகள் இன்னும் எங்களுக்கு வரலீயே.... கொஞ்ச நாள் போகனும் போல :)
1000 சதவிகிதம் சரி :))
Post a Comment