Tuesday, November 11, 2008

என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு?!

jingle bells பாடல் பப்புவுக்கு மிகவும் விருப்பம். இருவரும் ஒன்றாகச் சேர்ந்துப் பாட கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு ஸ்டான்சாதான்! (விரைவில்
ஒலிபதிவேற்றப்படும்!! :-))

Oh, jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh
Jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh


எங்களின் இன்னொரு விருப்பப் பாடல்,

முட்டைக்குள்ளே இருக்கும்போது
முட்டைக்குள்ளே இருக்கும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!

றெக்கையை பிக்கும்போது
றெக்கையை பிக்கும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
ஹேர்கட் பண்ணிக்கறேன்
ஹேர்கட் பண்ணிக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!

மசாலாத் தடவும்போது
மசாலாத் தடவும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
மேக்கப்பு போட்டுக்கறேன்
மேக்கப்பு போட்டுக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!


எண்ணெய்க்குள்ள போடும்போது
எண்ணெய்க்குள்ள போடும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
ஆயில்பாத் எடுத்துக்கறேன்
ஆயில்பாத் எடுத்துக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!

வாய்க்குள்ள போடும்போது
வாய்க்குள்ள போடும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!

சாதாரண sing-song ட்யூன்தான்! பாடுவதற்கு எளிதாகவும், விளையாட்டாகவும் இருக்கும்!!

17 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோழிக்குஞ்சு பாட்டு வித்தியாசமா இருந்தது.. ஆனா பாவம் கடைசியில்..
ஆமா எப்ப பாட்டு ஏத்தப்போறிங்க..அப்பத்தானெ ராகம் தெரியும் எங்களுக்கு...

சபரி எப்பவும் அந்த வண்டியில் இத்தனை கோழியை ஏன் கொண்டுபோறாங்கன்னு கேப்பான் இப்ப அவனாவே "சாப்பிடக்கொண்டுபோறாங்க"ன்னு சொல்லிடுவான்.. :))

நட்புடன் ஜமால் said...

என் குழந்தைக்கு வய்து 32 நாட்கள் தான் ஆகின்றன, நீங்கள் உங்கள் குழந்தையின் மீது காட்டும் அன்பையும் ஆர்வத்தையும் பார்க்கும் பொழுது. என் குழந்தையோடு கொஞ்சி விளையாடும் அந்த நாளை எதிர்நோக்கியிருக்கின்றேன்.

அமுதா said...

கோழிக் குஞ்சு பாடல் சூப்பர். நான் ஒரு முறை சன் டி.வி.யில் இப்பாடல் யாரோ பாட கேட்டேன். வரிகளை இங்கு படித்ததில் மகிழ்ச்சி.

லக்கிலுக் said...
This comment has been removed by a blog administrator.
அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் விருப்பபாடல் நல்ல இருக்கும்

எங்க விருப்பப்பாடலையும் பாடுங்களேன்.

திரு. பழமைபேசி அவர்களின் பதிவில் நாம் சிறுவயதில் பாடி நாமே மறந்து போன பாடல்களை எல்லாம்
பதிவிட்டிருக்கிறார். முடிந்தால் பாடி பார்க்கவும், பப்புவோடு சேர்ந்து.

http://maniyinpakkam.blogspot.com/2008/11/blog-post_07.html

ராமலக்ஷ்மி said...

மேக்கப் ஹேர்கட்டு ஆயில்பாத்

நல்லாயிருக்கு பாட்டு:))!

ரிதன்யா said...

//கோழிக் குஞ்சு பாடல் சூப்பர். நான் ஒரு முறை சன் டி.வி.யில் இப்பாடல் யாரோ பாட கேட்டேன். வரிகளை இங்கு படித்ததில் மகிழ்ச்சி.//

அனிதா புஷ்பவனம் குப்புசாமி.

ரிதன்யா said...

//கோழிக் குஞ்சு பாடல் சூப்பர். நான் ஒரு முறை சன் டி.வி.யில் இப்பாடல் யாரோ பாட கேட்டேன். வரிகளை இங்கு படித்ததில் மகிழ்ச்சி.//

அனிதா புஷ்பவனம் குப்புசாமி.

cheena (சீனா) said...

ooooo கோழிக்குஞ்சு பாட்டு சூப்பர்

பிள்ளைகளுக்கான ஒலி - ஒளிக் காட்சிகள் நிறைந்த பதிவு

http://naanpudhuvandu.blogspot.com

நேரமிருப்பின் பப்புவுக்குக் காட்டுக

அவள் நிச்சயம் ரசிப்பாள்

ச.பிரேம்குமார் said...

பப்பு பாடினா சரி, நீங்களுமா??? ஓ மை காட் ;)

இந்த கோழிக்குஞ்சு பாட்ட ஒரு முறை புஷ்பவனம் குப்புசாமி & அனிதா பாட கேட்டிருக்கிறேன்..... intersting song :)

மங்களூர் சிவா said...

கோழிக்குஞ்சு பாட்டு வித்தியாசமா இருந்தது.. ஆனா பாவம் கடைசியில்..
:))

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி!!
//இப்ப அவனாவே "சாப்பிடக்கொண்டுபோறாங்க"ன்னு சொல்லிடுவான்.. :))//

உலகத்தைப் புரிஞ்சுக்கிட்டான்னு சொல்லுங்க!

நன்றி அமுதா! சன் டிவியிலா? தெரியவில்லை..இது 13 ஆண்டுகள் முன்பு தமிழ்நாடு அறீவியல் இயக்கத்தின் துளிர் குழந்தைகள் இல்லத்தில் பெரிம்மா கற்றுக்கொண்டது..
சமீபத்தில் பப்புவுக்கு கற்றுக் கொடுத்தது!!

சந்தனமுல்லை said...

நன்றி அதிரை ஜமால்!
மிக்க மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்! தங்களின் வலைப்பூவில் பார்த்தேன்! குட்டி மிக அழகு!! இன்னும் கொஞ்ச நாள்..அப்புறம் ஓடியாடும் வந்துவிடுவாங்க பாருங்க உங்க பாப்பா!

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா!
கண்டிப்பா! சுட்டிய பார்க்கிறேன்! நன்றி! அமித்துவோட குரலை ரெக்கார்ட் பண்றீங்களா?

நன்றி ராமலஷ்மி!

நன்றி ஏகலைவன்!!

நன்றி சீனா! நிச்சயமாக காட்டுகிறேன்!!

சந்தனமுல்லை said...

நன்றி பிரேம்! அப்புறம்..தப்பிக்க முடியுமா? இதோ ரெக்கார்டிங் பதிவு வந்துக்கிட்டே!!

நன்றி சிவா!! கொன்றால் பாவம் தின்றால் போச்சு!! கேள்விப்பட்டிருப்பீங்களே...:-)

Thamira said...

என்ன மாதிரி பிராசஸை.. எப்படி ரசிக்கிறோம் இல்லை..! இத மாதிரி ஒரு பதிவைத்தான் இப்போ போட்டுட்டு வர்றேன்.!

rapp said...

எங்கக்கா பையன் யுகேஜி படிக்கும்போது, இதே மாதிரி வித்தியாசமா ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தாங்க, ஆரம்பம் மறந்திடுச்சி,
மத்தளம் மத்தளம் நாங்கதான், கிராமத்து மக்களும் நாங்கதான்,
கோழிமுட்டய குப்புற போட்டு கூர்ந்து பார்த்தது நாங்கதான்,



இப்டி போகும்:):):)