பப்புவிற்கு என்ன பிடிக்கும் என்றும் அவளைப் பற்றியும் எனக்குத்தான் தெரியும் என்று சிலசமயங்களில் பெருமை/பூரிப்பு எல்லாம் வருவதுண்டு! எல்லா அம்மாக்களுக்குமே அந்த பெருமை..நினைப்பு உண்டென்று அறிந்திருக்கிறேன்.
ஏனெனில் யார் வீட்டிற்காவது செல்லும்போது “அவளுக்கு காரம் பிடிக்காது, வேண்டாங்க, அதெல்லாம் சாப்பிட மாட்டா” என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்..ஆனால், அவர்கள் முன் நாம் அந்த சாப்பாட்டு ஐட்டங்களை வெளுத்து வாங்கிக் கொண்டிருப்போம்!! அப்போது ஒரு பார்வை வருமே..அப்போது அம்மா/பெரிம்மாவிடமிருந்து!!:-))
ஆம்பூரிலிருந்து பெரிம்மா வரும்போதெல்லாம் பிரியாணியும், மக்கப் பேடாவும் வாங்கி வருவது வழக்கம். இனிப்புப் பெட்டியைப் பிரித்து எல்லாருக்கும் கொடுத்துவிட்டு, நானும் உண்ணத் துவங்கினேன்..பாதி சாப்பிட்ட பப்பு, மீதியை என் வாயில் திணித்தாள். நான் தான் வச்சிருக்கேனே பப்பு, நீ சாப்பிடு என்ற போது,
“நீ சாப்பிடு ஆச்சி, உனக்குத்தானே பிடிக்கும்!!” -என்றாள்!!
பப்புவிற்கு ஜிராஃப்பும், சிங்கமும், முயலும் மானும் பிடிக்குமெம்று அறிந்திருக்கிறேன்.
மொறு மொறு தின்பண்டங்கள் பிரியமென்று அறிந்திருக்கிறேன்..ஆனால், எனக்கு என்ன பிடிக்குமென்றும் அவள் அறிந்திருக்கிறாள் என்பதை இன்று அறிந்துக்கொண்டேன்!!
ஒரு சின்னக் கடி: அறிவாள்மனை வெங்காயத்தை பார்த்து பாடினால் என்னப் பாடும்?
யோசிங்க..
யோசிங்க...
விடை:
தலைப்பைப் பார்க்கவும்!! :-))
16 comments:
//எல்லா அம்மாக்களுக்குமே அந்த பெருமை..நினைப்பு உண்டென்று அறிந்திருக்கிறேன்.//
உண்மைதான் !
என்னை பற்றி எங்கம்மா பெருமை பேசும்போது ஒரு கட்டத்தில் எனக்கு டென்ஷனாகிடும் - அம்மா கொஞ்சம் ஒவராத்தான் பில்ட் அப் கொடுக்குதோன்னு :)))
//இனிப்புப் பெட்டியைப் பிரித்து எல்லாருக்கும் கொடுத்துவிட்டு, நானும் உண்ணத் துவங்கினேன்..///
ஆச்சி பாஸ்! நீங்க படுக்கில்லாடிதான்!
மக்கப்பேடா மட்டும் பிரித்து கொடுத்துட்டு பிரியாணி ஃபுல் கட்டு கட்றீங்களா பலே! பலே!
//ஆனால், எனக்கு என்ன பிடிக்குமென்றும் அவள் அறிந்திருக்கிறாள் என்பதை இன்று அறிந்துக்கொண்டேன்!!//
பப்பு உங்களை மட்டுமின்றி எங்களையும் நெகிழ வைத்துக் கொண்டே இருக்கிறாள்.
புதிருக்கு விடை:
உன் கண்ணில் நீர் வழிந்தால்...
:)) சரியா?
[ஸ்மைலியை அப்படி ஒரு வரிக்குப் பக்கத்தில் போடக் கூடாதுல்ல...அதான் கீழே போட்டிருக்கேன்:))))]
“நீ சாப்பிடு ஆச்சி, உனக்குத்தானே பிடிக்கும்!!” -என்றாள்!!
:-)
அருமை
Excellent ..
So sweet
/
பப்புவிற்கு ஜிராஃப்பும், சிங்கமும், முயலும் மானும் பிடிக்குமெம்று அறிந்திருக்கிறேன்.
மொறு மொறு தின்பண்டங்கள் பிரியமென்று அறிந்திருக்கிறேன்..ஆனால், எனக்கு என்ன பிடிக்குமென்றும் அவள் அறிந்திருக்கிறாள் என்பதை இன்று அறிந்துக்கொண்டேன்!!
/
Superrrr papppU
ஆஹா! பப்பு பாப்பா அசத்துகிறாள்....
குழந்தைகள் பெரிய திறமைசாலிகள் :)
கடி சூப்பர் கடீ...... :)
என்ன இப்படி ஒடனேயே பதிலைப்போட்டு யோசிக்கவே விடலையே.. :(
ஆனா செம கடி..
அப்பறம் பப்பு ரொம்ப நல்ல பொண்ணு .. :)
//“நீ சாப்பிடு ஆச்சி, உனக்குத்தானே பிடிக்கும்!!” -என்றாள்!!//
ம்ம்ம், பாசக்கார பப்பு :)
நன்றி ஆயில்ஸ்!
//அம்மா கொஞ்சம் ஒவராத்தான் பில்ட் அப் கொடுக்குதோன்னு :)))//
கண்டுக்காதீங்க!! ;-)
//மக்கப்பேடா மட்டும் பிரித்து கொடுத்துட்டு பிரியாணி ஃபுல் கட்டு கட்றீங்களா பலே! பலே!//
நான் உங்க தங்கச்சியாச்சே!! நீங்க சொல்லிக் கொடுத்ததுதானே!
நன்றி ராமலஷ்மி!!
சாரிப்பா, விடைன்னு சொல்லி, தலைப்பை பாருங்கன்னு சொல்லிட்டேனெ!! அதான் "உன்னை நான் அறி ("ரி")வேன்!! ;-))
நன்றி அமுதா!!
நன்றி sk..ஆமா ஸ்வீட்தான்..பப்புவும், மக்கன் பேடாவும்!! ;-))
நன்றி சிவா!
நன்றி ஆகாய நதி!! பொழிலன் எப்படி இருக்கிறான்? அன்பு முத்தங்கள் அவனுக்கு!!
நன்றி முத்துலெட்சுமி..ஓ..உடனேயே சொல்லிட்டேனா..சாரி..அடுத்த முறை ஆகட்டும்!! :-))
நன்றி பிரேம்!
ரசித்தேன்..
ஆச்சி பாஸ்! நீங்க படுக்கில்லாடிதான்!
மக்கப்பேடா மட்டும் பிரித்து கொடுத்துட்டு பிரியாணி ஃபுல் கட்டு கட்றீங்களா பலே! பலே
ரிப்பீட்டே
ஆனால், எனக்கு என்ன பிடிக்குமென்றும் அவள் அறிந்திருக்கிறாள் என்பதை இன்று அறிந்துக்கொண்டேன்!!
உன்னை நான் அறிவேன்
என்னை நீ அறிவாய்
வெங்காயத்தை அரிவாள்மனை அரியும்.
ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், இப்போப் புரியுது பப்பு எப்டி பாக்சையும் சிக்சையும் கலந்துக்கட்டி ரிவிட்டடிக்கரான்னு:):):)
Post a Comment