Monday, June 28, 2010

பப்பு டைம்ஸ்



ரொம்ப நாளைக்கு அப்புறம் ஆர்ட் ஆக்டிவிட்டீஸ் செஞ்சோம்.

எல்லாம் நம்ம 'ச்செம்மூ'வாலேதான் ('செம்மொழி'யைத்தான் சுருக்கிட்டேன்!). பப்புவுக்கு லீவ்...பெரிம்மாவுக்கு லீவ்...போன வாரம் எல்லாம் செம ஜாலி! சனிக்கிழமை பெரிம்மா கிளம்பிவிட பப்புவுக்கு போர்...திரும்ப என்கிட்டேதானே வரணும்! :-)





ஒரு Nature walk போனோம். இலைகளை,பூக்களை சேகரிச்சுக்கிட்டு வந்தோம். வழியிலே பார்த்த எறும்பு அரண்மனைகளுக்குள்ளே போகணும்னு பப்புவுக்கு ஒரே ஆசை. எறும்புகளுக்கு 'ராணி'தான் அம்மான்னு சொன்னதும், ‘அப்போ நீதான் நம்ம வீட்டுக்கு ராணி'ன்னு சொன்னா. அப்போவே எனக்கு தலையிலே கிரீடமும் கையிலே செங்கோலும் வந்துட்ட ஃப்லீங்.

'நீதான் இளவரசி'-ன்னு பதிலுக்கு சொன்னேன்..அவளுக்கு எந்த ஃப்லீங்கும் வந்த மாதிரி தெரியலை..பார்வையும் கவனமும் 'எங்கேடா அடுத்த அரண்மனை'ன்னே இருந்துச்சு.




வண்ணங்களை குழைத்தும், அவள் சொல்லும் இலைகளை எடுத்துக்கொடுத்தும், ஒட்டியபின் கொடுப்பவற்றை வாங்கிவைப்பதுமாக எடுபிடி வேலை ராணிக்கு. சேகரிச்சதை வண்ணத்தில் தோய்ச்சு பேப்பரில் பதிய வைத்தது இளவரசி!

பராக்..பராக்..பராக்!!

22 comments:

சென்ஷி said...

இலைகளைச் சேர்த்த அந்த இரண்டாம் படம் அழகான பூங்கொத்து..

☀நான் ஆதவன்☀ said...

இளவரசியின் கைவண்ணத்திற்கு வாழ்த்துகள் :)

எடுபிடி ராணிக்கும் வாழ்த்துகள் :P

ராமலக்ஷ்மி said...

இளவரசியின் கைவண்ணம் அருமை.

Dhiyana said...

இள‌வ‌ர‌சி செஞ்ச‌து ந‌ல்லாயிருந்த‌து ராணி!!!!

பின்னோக்கி said...

//எறும்புகளுக்கு 'ராணி'தான் அம்மான்னு சொன்னதும்,

அங்கயுமா ?

☀நான் ஆதவன்☀ said...

இளவரசியின் கைவண்ணத்திற்கு வாழ்த்துகள் :)

எடுபுடி ராணிக்கும் வாழ்த்துகள் :P

Deepa said...

ஹை! pencil shavings flowers அழகு!
இலை ப்ரின்டின்கும்!
அது சரி, நேச்சர் வாக் கூட்டிட்டுப் போய் நைஸா பிட்டைப் போட்டு வாங்கி இருக்கே!
//எறும்புகளுக்கு 'ராணி'தான் அம்மான்னு சொன்னதும், ‘அப்போ நீதான் நம்ம வீட்டுக்கு ராணி'ன்னு சொன்னா.//
:)))

அமுதா said...

/*எல்லாம் நம்ம 'ச்செம்மூ'வாலேதான் */
இது கொஞ்சம் ஓவர் :-)
இளவரசியின் கைவண்ணம் எழில்வண்ணம்

அம்பிகா said...

இளவரசியின் கைவண்ணத்திற்கு வாழ்த்துகள் :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஆச்சி :-)

பா.ராஜாராம் said...

ஆஹா!

அழகா வந்துருக்குடா பப்பு.

Anonymous said...

ரெண்டாவது - ஸ்கூல் படிக்கும்போது ரெகார்ட் நோட்டுக்கு இலை, பூ தேடி அலைஞ்சோம். அந்த ஞாபகம்

நட்புடன் ஜமால் said...

இளவரசி முன்னே
ராஸாவோ ராணியோ எல்லாம் எடுபிடி தான்

பென்சில் சீவல் பார்த்தவுடன் அட!!!

அன்புடன் அருணா said...

அட! எங்க ஸ்கூலில் கூட் நாளைக்கு குட்டீஸுக்கு Nature walk!

மாதேவி said...

பப்புவின் கைவண்ணம் அசத்துகிறது.

சாந்தி மாரியப்பன் said...

இளவரசியோட கைவண்ணம் நல்லாருக்கு. அந்த பென்சில் சீவல்களை பாக்கும்போது, என் பசங்க, சூரியகாந்திப்பூ செஞ்ச ஞாபகம் வருது.

செ.சரவணக்குமார் said...

Good work pappu.

நசரேயன் said...

//
இளவரசியின் கைவண்ணத்திற்கு வாழ்த்துகள் :)

எடுபிடி ராணிக்கும் வாழ்த்துகள் :P

//

எடுபிடி ராணி யாரு ?

வல்லிசிம்ஹன் said...

இலைப் பூங்கொத்தும், அந்தப் பென்சில் சீவலும் அழகா இருக்கு பப்புமா.
எறும்பு வீட்ல வேணா அம்மா ராணியா இருக்கலாம். உங்க வீட்டுக்கு நீதான் ராணி.

Sundari said...

Very Nice

Sundari said...

Its very nice.
I am reading u'r blog regularly.It will help for me in future to guide my son.

சுந்தரா said...

சின்ன ராணியின் கைவண்ணம் ரொம்ப அழகு :)

வாழ்த்துக்கள் பப்பு!