வல்லியம்மாவின் மாமியார் டைரியை வாசித்ததும் மருமகளின் டைரிக்குறிப்புகள் நினைவுக்கு வந்துவிட்டது. :-)
திருமண ஆல்பங்களில் புகைப்பட கவரேஜில் புது மாமியாருக்கு எழுந்த முதல் தர்மசங்கடத்தைப் பற்றி சுவாரசியமாக எழுதியிருந்தார்.
எனது இடுகை திருமண அழைப்பிதழ் பற்றி.
திருமண அழைப்பிதழ்களையும் இருவீட்டாரும் தனித்தனியாகவே அச்சடித்து அழைப்பார்கள். திருமண சம்பிரதாயங்களில் எனது அறிவும், ஆர்வமும் பூஜ்மாதலால் 'இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்' என்று ஒதுங்கிவிட்டதில் இந்த ஞானமெல்லாம் மிஸ்ஸிங். இருவீட்டாரும் அவரவர் பக்கத்திலிருந்து 50 பத்திரிக்கைகளை மாற்றிக்கொண்டதாக நினைவு.
பெரியவர்கள் சார்பான அழைப்பிதழை தவிர்த்து, எங்கள் சார்பாக ஒரே மாதிரியான அழைப்பிதழையே நண்பர்களுக்குக் கொடுக்கலாமென்று நானும் முகிலும் தீர்மானித்திருந்தோம். ஓலைச்சுவடி போன்ற ‘நறுக்கிதழை' - மூன்று இலைகள் கொண்ட அழைப்பிதழை தேர்ந்தெடுத்திருந்தோம். முகிலுக்கு 200 . எனக்கு 150. அழைப்பிதழ்களின் எண்ணிக்கைதான்!
அழைப்பிதழின் அட்டையில் “Mugil weds Mullai' என்பதற்கு பதிலாக, எனக்கு வேண்டிய அழைப்பிதழில் "Mullai weds Mugil" என்றும் , உள்ளேயும் மற்றும் சைன் ஆஃபிலும் எனது பெயர் முன்னால் வரும்படி அச்சடித்து தரும்படியும் கேட்டிருந்தேன். முகிலும் அவரது தந்தையிடம் கூறினார். ஆனால், அங்கிளுக்கு இருந்த வேலைப் பளுவில் எனது விண்ணப்பம் மறக்கப்பட்டு கீழ் கண்டது போல எல்லா அழைப்பிதழ்களும் வந்து சேர்ந்தன.

எல்லா இடங்களிலும் முகில் பெயரே முதலில். எனக்கோ ஏமாற்றம். ஏதோ, வாழ்க்கையில் நமது பெயர் தாங்கி வரும் பத்திரிக்கை இது ஒன்றுதான். அதில் கூட நமது ஆசையில் மண் என்று பெருத்த ஏமாற்றம்(!).
எனது ஒரு சில நண்பர்கள் மணமகனுக்கு அடிக்கப்பட்ட அழைப்பிதழ்களையே கொடுத்திருக்கிறார்கள். “உன் இன்விடேஷன்லே மாத்தி போட்டிருக்கலாம் இல்லே” என்றதற்கு ”நீ கொடுக்கப் போற 100 இன்விடேஷனுக்கு மாத்தி போடணுமான்னு அவர் சொல்லிட்டாரு” (ஹ்ம்ம்...இங்கே தொடங்கும் காம்ப்ரமைஸ்....!) என்று சொல்லியிருந்தார்கள். எனக்கு 50 இன்விடேஷன்கள் என்றாலும் நிச்சயம் நானும் இதே போல செய்துவிடக்கூடாது என்றும் நினைத்திருந்தேன்.
அதுவும் முகில் அழைப்பது போன்ற அழைப்பிதழை எனது நண்பர்களுக்கு எப்படி நான் கொடுப்பது?
எனது கல்லூரி மற்றும் பள்ளி நண்பர்கள் என்னையல்லவா அறிவார்கள். முகிலை எப்படி அறிவார்கள்?
உடனே ட்ரிங்...ட்ரிங்...
பெரிம்மாவுக்குத்தான்!
ஆனால், அம்மாவும் மாமாவும் ”இதையே கொடேன், என்ன பெரிசா” என்று ‘ இது எல்லாம் ஒரு விஷயமா' என்பது போல சமாதானம் பேசி எதிரிகளாகிப் போயினர்.
ஓரிரு நாட்களில், எங்கள் தரப்புக்கான அழைப்பிதழை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. சென்னை மேனகா கார்ட்ஸ். என் முகம் வாடுவதை ஒருபோதும் தாங்கவியலாத பெரிம்மாவுடன் சென்று எனக்கான அழைப்பிதழைத் தேர்ந்தெடுத்து கீழ்கண்டது போல அச்சடிக்கப் பெற்றேன்.
நான் அழைப்பது போன்று அழைப்பிதழின் வடிவமும், அட்டையில் எனது பெயரே முதலிலும். அதன் பிறகே மனம் கொஞ்சம் ஆறியது. முகத்தில் மகிழ்ச்சி கொஞ்சியது(!). ஆனால் அந்த பேதை நெஞ்சத்திற்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.... திருமண வாழ்க்கையே காம்ப்ரமைஸ்களால் ஆனது என்று.. (யார் வாய்ஸிலாவது மாற்றி படித்து நொந்து போகவும்...ஹிஹி!!)
சிலருக்கு இது சிறிய விஷயமாக இருக்கலாம். நமக்கு சிறிய விஷயமாக தோன்றுவது பிறருக்கு பெரிதாகத் தோன்றிவிடுகிறது இல்லையா, அதுபோலத்தான்.
(அந்த அழைப்பிதழ்களை, மீதியானவற்றில் 100 அழைப்பிதழ்களை முகில் உபயோகப்படுத்திக்கொண்டார்.அந்த அழைப்பிதழ்களை நான் பயன்படுத்த -வில்லை என்ற மனவருத்தம் முகிலுக்கு இருந்தது தெரிந்தே இருந்தது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்!)
எங்கள் உறவுகளில் - ஐயர் வைத்து செய்யும் வழக்கம் இல்லை. ராமலிங்க அடிகளின் திருவருட்பாவை ஓதூவார் பாட யாராவது ஒரு பெரியவர் தாலியை எடுத்துக் கொடுக்க டும் டும் டும்தான். உறவினர்கள் திருமணங்களில் நானும் குட்டியும் கலந்துக்கொண்டதை விரல் விட்டு எண்ணி விடலாம். அதனால், இவை தவிர மற்ற சம்பிரதாயங்கள் எதுவும் நுணுக்கமாக எனக்குத் தெரியாது.
ஆனால், முகில் வீட்டார் வழக்கமோ தலைக்கீழ்.
அதில், 'கூரைப்புடவை' என்ற வார்த்தை புதிதாகக் காதில் விழுந்தது. அதைப் பற்றிய அறிவு எனக்கு கிஞ்சித்தும் இல்லை. யாருக்கோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஏனெனில் உறவினர்களுக்கு கொடுக்க நிறைய புடவைகள் எடுத்து வைத்திருந்தோம். அதனால், யாரோ ஒரு உறவுக்கு கொடுக்க வேண்டியது போல என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, அது எனக்குத்தான் என தெரியவந்தது. என்னவென்று கேட்கப் போக 'கட்டங்கள் போட்ட வாயில் புடவை' என்று பதில் வந்தது.
சமீபத்தில் கற்றுக்கொண்ட பாடம் நினைவுக்கு வந்தது. அது - முகிலிடம் சொல்வதை விட நேரடியாக அங்கிளிடம் சொல்லிவிடுவதே பெட்டர் என்பதே!
அடுத்த ட்ரிங்..ட்ரிங்...
அங்கிளுக்குத்தான்!
“எனக்கு வாயில் புடவைல்லாம் வேணாம் அங்கிள், கல்யாண புடவை இருக்கு இல்லே அதுதான் கட்டிக்கப்போறேன்.”
“தாலி கட்டும்போது கூரைப்புடவைதாம்மா கட்டணும், அதுக்கு அப்புறம் நீ வேற புடவை மாத்திக்கலாம்”
“ஹைய்யோ..அங்கிள்..அது என்னோட ஹைட்டுக்கு முழங்காலுக்கு ஏறிடும்.. பாக்க நல்லாவே இருக்காது. அதுவும் இல்லாம கட்டம் போட்டதுன்னா எனக்கு ஜெயில்லே இருக்கறவங்க கட்டியிருக்க புடவைதான் அங்கிள் ஞாபகம் வருது. ஃபோட்டோலேயும் நல்லா இருக்காது..ப்லீஸ் அங்கிள்” என்று புலம்பி வைத்தேன்.
“இதை ஒரு விஷயமா எடுத்துக்காதே, என்ன? மேடையிலே உட்காரப் போறது ஒரு மணிநேரம் இருக்குமா?!” என்று சின்ன அத்தை அறிவுரை.
சிறைபுகப் போகிறோம் என்பதை சிம்பாலிக்காக குறிக்கவே இந்தப் புடவையோ- சிறைப்புடவை மருவி கூரைப்புடவையாகி விட்டதோ(!!) என்ற கண்டுப்பிடிப்பை லதாவிடம் சொல்லப் போக அவளோ பார்வையால் எரிக்காத குறை!
”புடவையை மாத்திட்டேம்மா, வாயில் புடவையை மாத்திட்டு பட்டுலேயே கூரைப்புடவையைத் தேடி எடுத்திருக்கேன்” - அடுத்த நாள் அங்கிளிடமிருந்து ஃபோன்.
கடைசியாக, கூரைப்புடவையிலிருந்து தப்பிக்கவே முடியவில்லை...சிறை புகுவதிலிருந்தும்தான்..!
இதனால் அறியப்படும் நீதி : புது மாமியார்களுக்கு மட்டுமல்ல..பிரச்சினை புது மருமகள்களுக்கும் வரலாம். (மரு)மகள்களின் விருப்பத்தையும் (இரு) வீட்டு பெரியவர்கள் கேட்கலாம். சம்பிரதாயங்களையும் வளைத்துக் கொள்ளலாம். கூரை இடிந்து விழாது! :-)
உங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள்/தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை” (கண்டிப்பா இது ஒரு அனுமார்வால்தான்!) கொஞ்சம் எடுத்துவிடும்படி தீபா, ஜெயந்தி, அமைதிச்சாரல் மற்றும் சாந்தி லஷ்மணை கேட்டுக்கொள்கிறேன்.
21 comments:
ஹை! எங்க கல்யாணத்துல எல்லாப் பத்திரிகையிலயும், என் பேர் தான் முதல்ல! :) (கொக்கு! கொக்கு!)
//கூரை இடிந்து விழாது! :-)//
நீ மருமகளா வர்றேன்ன உடனேயே அவங்க வீட்ல நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கும். அதுக்கு மேல கூரை என்ன பெரிய விஷயம்னு நெனச்சிருப்பாங்களோ?? :))))))
//”புடவையை மாத்திட்டேம்மா, வாயில் புடவையை மாத்திட்டு பட்டுலேயே கூரைப்புடவையைத் தேடி எடுத்திருக்கேன்” - அடுத்த நாள் அங்கிளிடமிருந்து ஃபோன்// How Sweet of him!
நான் கூட தான் வேட்டி வேணாம்னு சொன்னேன், எங்க கேட்டாங்க! ஒரு கையில இடுப்ப புடிச்சிகிட்டே நின்னேன்!
எங்களுக்கும் நிராசைகள் இருக்குங்க!
:)
@வால்பையன் ,ஆமா வேட்டியோட இப்பல்லாம் வேட்டி பெல்ட் ராமராஜ் ல கிடைக்குது ..
பேண்ட் போட்டுட்டு கீழே உட்கார்ந்து தாலி கட்டுற சீன் நல்லாவேயில்லை வால்..ஏழை மனிதர்கள் கட்டுவது நூல் புடவை..மஞ்சள் கயிறு..எளிமையை அறிமுகப்படுத்த இந்த வழக்கத்தை ஆரம்பித்து இருப்பார்களோ..பெரியவர்கள் சொன்னால் அதில் ஏதாவது அறிவியல் சார்ந்த உண்மை இருக்கும் என்பது என்னுடைய எண்ணம்..
முல்லை.. முகிலின் பத்திரிக்கையே நல்லா இருக்கு.. !!
அட்லீஸ்ட் இங்க - வளைகுடா -இருக்றவங்களுக்காது அது அனுப்பி வைத்திருக்கலாமே? நீங்க சொன்ன மாதிரி உங்க பேர் தான் முதலில் வந்திருக்கும்.. ம்ம்ம்ம் எப்டின்னா..
இங்க படிக்கறது தான் “வலமிருந்து இடமாச்சே” :)
கல்யாண பத்திருக்கைய பார்க்கையில்
’ஹை’ வித்தியாசம இருக்கேன்னு தோனுச்சு கூடவே
இதுவும்
எல்லா இடங்களிலும் முகில் பெயரே முதலில்.
யோசிச்சிக்கிட்டே இருந்தேன் என்னை ஏமாற்றாமல் அதற்கு கீழேயே இருந்திச்சி ...
என்னமோ போங்கோ ...
நிச்சயதார்த saree லையே என் compromise ஆரம்பிச்சுது. பெரிய border saree வேண்டாம். என் height கு நல்லா இருக்காது னு சொன்னேன். யாரு கேட்டா?
முட்டி வரைக்கும் border வந்து, அதுக்கும் மேலே பாதி saree ய உள்ள சொருகி ஒரு range அ நின்னு ... ச்சே! photos பார்கறப்போ எல்லாம் ஒரே பீலிங்க்ஸ். :-( (பாதி border அ cut பண்ண முடியுமா? )
//உங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள்/தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை” (கண்டிப்பா இது ஒரு அனுமார்வால்தான்!) கொஞ்சம் எடுத்துவிடும்படி தீபா, ஜெயந்தி, அமைதிச்சாரல் மற்றும் சாந்தி லஷ்மணை கேட்டுக்கொள்கிறேன்.//
ஓடுங்க அந்த தொடர்பதிவு நம்மள நோக்கி வந்துட்டு இருக்கு!!
//இதனால் அறியப்படும் நீதி : புது மாமியார்களுக்கு மட்டுமல்ல..பிரச்சினை புது மருமகள்களுக்கும் வரலாம். (மரு)மகள்களின் விருப்பத்தையும் (இரு) வீட்டு பெரியவர்கள் கேட்கலாம். சம்பிரதாயங்களையும் வளைத்துக் கொள்ளலாம். கூரை இடிந்து விழாது! :-)//
பாஸ் நன்றி
Blogger வால்பையன் said...
நான் கூட தான் வேட்டி வேணாம்னு சொன்னேன், எங்க கேட்டாங்க! ஒரு கையில இடுப்ப புடிச்சிகிட்டே நின்னேன்!
எங்களுக்கும் நிராசைகள் இருக்குங்க!
அதானே!!!
நானெல்லாம் என் மாமியார் கூடவே போய் எனக்கு வேணுங்கற மாதிரி எடுத்தேன். :)
இப்பவே மாமியாரை கைக்குள்ள போட்டுக்கறியான்னு கமெண்ட்டு :)
ஆஹா, முல்லை!
இத்தனை தடைகளையும் தாண்டி வீரமாப் போராடி ஜெயிச்சதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நல்ல தொடராக அமையப் போகிறது இது!!!
உங்க மாமனாருக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
பத்மஜா, என் கல்யாண நிச்சயப் புடவையும் அந்தக் கால வைர ஊசி. கனம்+பெரிய பார்டர்.
கட்டத்தெரியாமல் கட்டி...தஸ்ஸா புஸ்ஸான்னு ஒரு
கூடையை முன்னாடி
கவுத்தின எஃபெக்ட்:) இப்ப எல்லாம் எவ்வளவு அழகா இருக்காங்க மணப் பெண்கள்.!
சுவாரஸ்யமா படிச்சிக்கிட்டே வந்தேனா... திடீர்ன்னு நிலநடுக்கத்தின் ஆரம்பப்புள்ளியில் மாட்டிக்கிட்டது மாதிரி உணர்ந்தேன். ஏன்னு மாட்டிவிட்ட உங்களுக்கே தெரியும்.
நம்ம விஷயத்துல கூரைப்புடவை கலர் மட்டும்தான் என் சாய்ஸ். மத்தபடி காம்பரமைஸ் எக்கச்சக்கம். நினைச்சாலே அழுகை வருது :-))))). தொடர முயற்சி பண்றேன். இல்லைன்னாலும் கண்டுக்காதீங்க.(மூன்றாம் உலகப்போரை தடுத்ததாக இருக்கட்டுமே :-))))))))
//நானெல்லாம் என் மாமியார் கூடவே போய் எனக்கு வேணுங்கற மாதிரி
எடுத்தேன்//
அம்மிணி இந்த ஆட்டையிலே உங்களுக்கு இடம் கிடையாது, நீங்க ஒரு சாமியாடி ன்னு எங்களுக்கு இப்பதானே தெரியும், அவங்களுக்கு எல்லாம் எப்பவோ தெரிந்து இருக்கும்.
//இப்பவே மாமியாரை கைக்குள்ள போட்டுக்கறியான்னு கமெண்ட்டு :)//
அவங்க கைக்குள்ளே வரலைனாலும் நீங்க கையாலே ரெண்டு போட்டாலும் போடுவீங்க
//கூரைப்புடவையிலிருந்து தப்பிக்கவே முடியவில்லை...சிறை புகுவதிலிருந்தும்தான்..!//
ஒரு சின்ன திருத்தம் சிறை புகுந்தது நீங்க இல்லை.. முகில் தான்
முல்லை,
உங்கள் மூலமாக மீண்டும் ஒரு மெகாசீரீயல்; எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்..
//ஆனால் அந்த பேதை நெஞ்சத்திற்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.... திருமண வாழ்க்கையே காம்ப்ரமைஸ்களால் ஆனது என்று..//
பாவம் இவ்வளவு அப்பாவியா இருந்திருக்கீங்களே?
எங்க பத்திரிக்கையில் யார் பேர் முதல்ல இருந்திச்சுனு ஞாபகமில்லையே முல்லை.. அதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
நல்ல நடை
பகிர்வுக்கு நன்றி
பத்திரிக்கையை பார்த்தவுடன் மனதில் எழுந்த ஏமாற்றத்தை இன்னும் தோண்டியிருக்கலாம்
அப்படி அடிபட்ட தருணங்களில்தான் உங்கள் உண்மையான முகம் ஒளிந்துகிடக்கும்
அப்புறம் முகிலுக்கு நீங்களும் உங்களுக்கு முகிலும் பொருத்தமானவர்கள்தானே
met என்று போட்டுருப்பது உங்கள் இருவரின் காதலையும் அம்பலப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் !!!!!
இதை இப்போத்தான் பார்த்தேன். முயற்சி செய்கிறேன். உங்கள் அனுபவம் அருமை.
Post a Comment