பக்கத்து வீட்டு சிறுவனுக்கு பப்புவின் ஆம்பூர் ஆயாவிடம் பிரியம், பப்புவுக்கு அவனது ஆயாவிடம் இருப்பது போல.
ஆம்பூர் ஆயாவிடம் தன்னைத் தூக்கச் சொல்லிக்கொண்டே இருப்பான்.
உலகின் மிகக்கொடிய பொறாமைக்கார பப்பு ஓரிரு தடவைகள் பொறுத்து பார்த்து, பின்னர் பொங்கி எழுந்து ஆயாவை வீட்டுக்குள் அனுப்பி கதவை தாளிட்டுக் கூறினாள் :
"நீங்க என்னோட வீட்டுக்கு வந்துருக்கீங்களா..ஆதி வீட்டுக்கு வந்துருக்கீங்களா?"
இதைக் கேட்ட ஆம்பூர் ஆயா மட்டுமல்ல.....வீட்டில் இருந்த அனைவரும் உறைந்து போயினர்.
சிரித்து சிரித்து மாய்ந்தனர்.
வெயிட்..வெயிட்...Mom has a history...oh no..her story too..!
சில மாதங்கள் முன்பு வீட்டுக்கு வந்த பெரிம்மா அடிக்கடி தொலைபேசிக் கொண்டிருப்பதை கவனித்தார், அம்மா. அதுவும் பெரிம்மாவின் பேச்சில் கொஞ்சம் பாசம் தொனிப்பதாக தெரிந்ததும் அம்மாவுக்கு itching தாங்க முடியவில்லை.
ஆம்பூரில் எதிர் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு குடும்பப் பிரச்சினை. அம்மா வீட்டுக்கு சென்றிருக்கும் அவரிடம் ஆறுதலாக, அன்பாக நாலு வார்த்தை பேசுவதாக தெரிய வந்ததும்....
"நீங்க எனக்கு பெரிம்மாவா...அதுக்கு பெரிம்மாவா..." என்று அழுகையும், கோபமும் கொப்புளிக்க கூறிவிட்டு கதவடைத்துக்கொண்டார் மதிப்பிற்குரிய அம்மா!
தாயைப் போல சேலை..நூலைப் போல பிள்ளைன்னு பெரியவங்க தெரியாமயா சொல்லியிருப்பாங்க!
21 comments:
athu "thaayaippola piLLai, noolaippola selai" -nu ninaikkiraen.
பப்பு ஏஞ்சல் என்பதில் எங்களுக்கு சந்தேகமில்லை. அந்த demon யாருங்க :-)))))
lovely title for the blog!
:))) History repeats!
வர்றது எங்க வீட்டுக்கு. ஆனா அக்கறை எல்லாம் அடுத்தவங்க மேலை. நல்லா சண்டை போடுங்க :)
//உலகின் மிகக்கொடிய பொறாமைக்கார பப்பு//
திடுக்கென்றது, யதார்த்தம் கடினம் தானே. கடைசி வரிகள் சிரிப்பை வரவழைத்தது. மிகவும் ரசித்தேன்.
ha..ha! very interesting.. romba azhagana pathivu...
Mom has a history! Daughter has a history too!
:)))))))))))))))))))))))
Deepa said...
:))) History repeats!//
:))))
ஆகா பப்புவுக்கு உள் வீட்டிலேயே எதிரியா ;)
//பொறாமைக்கார பப்பு...மதிப்பிற்குரிய அம்மா//
என்ன partiality !!! சரியே இல்லைங்க. இதில டைட்டில் வேற நல்லா இருக்குன்னு ஒருத்தர் :))
// Deepa said...
:))) History repeats!//
repeat
\\அன்புடன் அருணா said...
Mom has a history! Daughter has a history too!\\
:-))
சின்ன புள்ளையை கெடுக்கிறதே நீங்கதானா :)
:)
ஒன்னு ரெண்டு முறை தூக்க விட்டதே பெரிசு.
எங்க வீட்டிலும் இதேதான் அப்பாவுக்கும் மகனுக்குமே தகராறு நடக்கும் நான் யாருக்கு சொந்தம்னு. அவன் தூங்கிய பின் என் வீட்டுக்காரரு என்கிட்ட சொல்வாரு, "என்ன என்னை விட உன்மேல அதிக சொந்தம் கொண்டாடறான்?" நான் என்ன சொல்ல?
//ஆயாவை வீட்டுக்குள் அனுப்பி கதவை தாளிட்டுக் கூறினாள் //
நாகரிகம் தெரிந்தவள்.. வெளிய வெச்சே சொல்லலயே :-)
:)
பப்புவை பொறாமைக்கார என்று சொன்னதுக்காக பெரிய போராட்டம் நடத்தலாம்ன்னு யோசிச்சேன்
நீங்களும் அப்படின்னு சொன்னதால 50% கோபம் தான் இருக்கு
எதுக்கும் எச்சரிக்கிறேன் :)
Post a Comment