Monday, February 15, 2010

திலகு டான்ஸ்!

பப்பு, நீ என்ன டான்ஸ் ஆடப்போறே?

”திலகு டான்ஸ்! ”


கடந்த ஐந்தாம் தேதியன்று பப்புவின் பள்ளியில் ஆனுவல் டே. ராணி சீதை ஹாலில் நடந்தது. அண்ணா பல்கலை மற்றும் ஐ.ஐ.டி யிலிருந்து இரு விரைவுரையாளர்கள் தலைமை தாங்கவும், சிறப்புரை ஆற்றவும் வந்திருந்தார்கள். பாடல்கள், இந்திய கலாச்சார நடனங்கள்(பரதநாட்டியம், மோகினியாட்டம், பஞ்சாபி, குஜராத்தி, தெலுகு, அருணாச்சல பிரதேச நடனம்) மற்றும் வன பாதுகாப்பு நாடகம்.


'திலகு' டான்ஸ் வீடியோ - (திருட்டுத்தனமா ) கொஞ்சம்தான் ரெக்கார்ட் பண்ண முடிஞ்சுது! - தலையில் ஜிட்டு போட்டிருக்கறதுதான் பப்பு.






ஆஷிர்வாத் விளம்பரத்துலே சினேகா சப்பாத்தி செஞ்சு கொடுப்பாங்க...அப்புறம் அந்த குட்டி பொண்ணு நல்லா டான்ஸ் ஆடுவாங்க.....அதேமாதிரி, பப்புவும் திலகு டான்ஸ் நல்லா ஆடட்டுமேன்னுதான் சினேகாவை சப்பாத்தி செஞ்சு கொடுக்க கூப்பிட்டேன்!

வாழ்த்திய, பின்னூட்டமிட்ட, மடலிட்ட அனைவருக்கும் நன்றிகள்!

18 comments:

Thamiz Priyan said...

வாவ்! பப்பு நல்லா தான் ஓடி ஆடுறாங்க... வாழ்த்துக்கள்!

ஹுஸைனம்மா said...

சிநேகா - விளக்கத்திற்கு நன்றி. ஏற்கனவே உங்க ரசிகர் மன்ற கொ.ப. செ. யும் சொல்லிட்டார்.

//தலையில் ஜிட்டு //

ஜிட்டுன்னா என்னங்க? ஏங்க என்னை எப்பவும் கேள்வி கேக்க வைக்கிறீங்க? ;-)

க ரா said...

நல்ல பதிவுங்க. குழந்தைங்க டான்ஸ் ஆடறத பாக்கறப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. பகிர்விற்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

எனக்கு வீடியோ தெரியலைப்பா :-((

வல்லிசிம்ஹன் said...

Hi Mullai, I cannot see the video. sari seyyuingappa. romba asaiyaa irukku

ராமலக்ஷ்மி said...

சூப்பர்:)! எனர்ஜெடிக்கா ஆடும் பப்புவைப் பார்க்கப் பரவசம். வாழ்த்துக்கள் பப்பு!

கவிதா | Kavitha said...

Cute..!! :)) popout வரலைடா.. மெயில் ல அனுப்புவீங்களாம், பப்புவோட ஆல்பம் ல சேவ் செய்துக்குவேன்..

இது சேவ் செய்ய முடியல..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கும் வீடியோ தெரியலயேப்பா.. :(

குடுகுடுப்பை said...

வீடீயோ தெரியுது, டான்ஸ் ஆடிய பப்புவிற்கு வாழ்த்துகள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வழக்கம் போல எனக்கு வீடியோ தெரியல :(((((

Deepa said...

:-(( Even I am not able to see the video. Will try again later.

congrats to Pappu

ஹூஸைனம்மா!

ஜிட்டுன்னா குடுமி. :)
குடுமி போட்ட பப்புவைப் பாக்கணுமே. ஒரு ஃபோட்டோவும் போடுங்க முல்லை.

☀நான் ஆதவன்☀ said...

வீடியோ தெரியுது. பட் ஜிட்டுன்னா என்னானு தெரியாததால பப்பு எதுன்னு தெரியல....

ஜிட்டு விளக்கம் ப்ளீஸ்!

Unknown said...

so cute :-)

Anonymous said...

சினேகா விளம்பரம் பாத்ததில்லை ஆச்சி. அதனாலதான் புரியலை.

நட்புடன் ஜமால் said...

பப்புவை அடையாளம் காண முடிகின்றது தலையில் ஏதோ இருப்பது ஜிட்டுன்னு முடிவு செய்துகிட்டேன்

வாழ்த்துகள் பப்பு.

அம்பிகா said...

video தெரியவில்லை.
ஆனாலும் பப்புவுக்கு வாழ்த்துக்கள்.

Dhiyana said...

பப்பு சூப்பரா ஆடுகிறா முல்லை.. நிறைய சப்பாத்தி செய்து கொடுத்தீங்க போல

Sanjai Gandhi said...

சூப்பரப்பு.. :)