Monday, February 01, 2010

பொண்ணு வளர்க்கறதுக்கும் பையன் வளர்க்கறதுக்கும்....

மூன்று வயதில் எனக்கு விளையாடக்
கிடைத்தன சிக்-சா படப்புதிர்கள்.
தம்பிக்கு மூன்று வயதில் மூன்று சக்கர சைக்கிள்.
வாட்டர் கலர், பெயிண்டிங் புக், க்யூப் -களோடு பொழுது கழிந்தது
ஐந்து வயது வரை.
பேட்டரி கார், ரேஸ் கார்,பஸ், ட்ரக் -களோடு தூங்கினான்
தம்பி.
பிறந்தநாள்கள் ஒவ்வொன்றும் எனக்குத் தந்துவிட்டு போயின
ஃபேரி டேல் புத்தகங்கள்,
நீண்ட தலைமுடி கொண்ட பொம்மைகள்
மற்றும்
மட்பாண்டங்களோடு கேஸ் அடுப்பு.
தம்பியின் பிறந்தநாள்கள் கொண்டு வந்தன
ரிமோட் கார்கள், ஏரோப்ளேன், ஹெலிகாப்டர் மற்றும் பைக்குகள்.
எனக்கு ரிங்பால் வாங்கியபோது
அவனுக்குரியதாயிற்று மட்டைபந்தும் கால்பந்துகளும்.
கண்காட்சிகளில்
கலைடாஸ்கோப்பும், அலுமினிய சமையல்செட்டும்
என்னை வந்தடைய
இரட்டைகுழல் துப்பாக்கியும், காமிராவும்
அவனுக்குரியனவையாகின.

இவை தவிர,
ஒன்றாய் விளையாட செஸ்ஸும் கேரமும் இருந்தாலும்
'நான் சொல்றா மாதிரி அடிக்கணும்' என்ற கண்டிஷனோடே
அமைந்தது கூட்டணி.
டூத்பிரஷ்களோ பென்சில் பாக்ஸ்களோ
வாங்கி வந்தது எதுவாயினும்
இளஞ்சிவப்பு நிறமே என்னுடையதாயிற்று.
இளஞ்சிவப்பு நிறம் தவிர்த்தது அவனுக்குரியது.
ஆண்டு விழாக்களில்
பாரதியார் வேடமும் கண்ணன் வேடமும்

அவனுக்குக் கிட்ட
பாரதமாதாவும் ஔவையார் வேடமும்
நான் தாங்கினேன்.

‘ரெண்டு பசங்களை வச்சிக்கிட்டு தொல்ல தாங்கல டீச்சர்,
பொண்ணுங்கள பெத்திருந்தா நிம்மதியா இருந்திருக்கலாம், அதுங்க
பாட்டுக்கு வேலையை பார்த்துக்கிட்டு இருந்திருக்கும்'

அலுத்துக்கொண்ட கீழ்வீட்டு ஹரிஷ் அம்மாவிடம்
சொல்லிக்கொண்டிருந்தார் அம்மா
'ஆமாம்மா,பொண்ணு வளர்க்கறதுக்கும்
பையன் வளர்க்கறதுக்கும்
நல்லா டிஃபரன்ஸ் தெரியும்' !!

37 comments:

Rithu`s Dad said...

மலரும் நினைவுகளா முல்லை??

//'ஆமாம்மா,பொண்ணு வளர்க்கறதுக்கும்
பையன் வளர்க்கறதுக்கும் நல்லா டிஃபரன்ஸ் தெரியும்' !! //

மிகச்சரிதான்..

☀நான் ஆதவன்☀ said...

ஒத்துகிறேன் பாஸ்........ உங்க கம்யூட்டரில் எண்டர் கீ நல்லாவே வேலை செய்யுது.

Anonymous said...

//'ஆமாம்மா,பொண்ணு வளர்க்கறதுக்கும்
பையன் வளர்க்கறதுக்கும் நல்லா டிஃபரன்ஸ் தெரியும்' !!

நல்ல டிஃபரன்டான பதிவு

☀நான் ஆதவன்☀ said...

//மூன்று வயதில் எனக்கு விளையாடக்
கிடைத்தன சிக்-சா படப்புதிர்கள்.தம்பிக்கு மூன்று வயதில் மூன்று சக்கர சைக்கிள். வாட்டர் கலர், பெயிண்டிங் புக், க்யூப் -களோடு பொழுது கழிந்தது ஐந்து வயது வரை. பேட்டரி கார், ரேஸ் கார்,பஸ், ட்ரக் -களோடு தூங்கினான் தம்பி. பிறந்தநாள்கள் ஒவ்வொன்றும் எனக்குத் தந்துவிட்டு போயின ஃபேரி டேல் புத்தகங்கள், நீண்ட தலைமுடி கொண்ட பொம்மைகள் மற்றும் மட்பாண்டங்களோடு கேஸ் அடுப்பு. தம்பியின் பிறந்தநாள்கள் கொண்டு வந்தன ரிமோட் கார்கள், ரோப்ளேன், ஹெலிகாப்டர் மற்றும் பைக்குகள். எனக்கு ரிங்பால் வாங்கியபோது அவனுக்குரியதாயிற்று மட்டைபந்தும் கால்பந்துகளும். கண்காட்சிகளில் கலைடாஸ்கோப்பும், அலுமினிய சமையல்செட்டும் என்னை வந்தடைய இரட்டைகுழல் துப்பாக்கியும், காமிராவும் அவனுக்குரியனவையாகின. இவை தவிர, ஒன்றாய் விளையாட செஸ்ஸும் கேரமும் இருந்தாலும்
'நான் சொல்றா மாதிரி அடிக்கணும்' என்ற கண்டிஷனோடே அமைந்தது கூட்டணி. டூத்பிரஷ்களோ பென்சில் பாக்ஸ்களோ வாங்கி வந்தது எதுவாயினும் இளஞ்சிவப்பு நிறமே என்னுடையதாயிற்று. இளஞ்சிவப்பு நிறம் தவிர்த்தது அவனுக்குரியது.
ஆண்டு விழாக்களில் பாரதியார் வேடமும் கண்ணன் வேடமும் அவனுக்குக் கிட்ட பாரதமாதாவும் ஔவையார் வேடமும் நான் தாங்கினேன். ‘ரெண்டு பசங்களை வச்சிக்கிட்டு தொல்ல தாங்கல டீச்சர், பொண்ணுங்கள பெத்திருந்தா நிம்மதியா இருந்திருக்கலாம், அதுங்க
பாட்டுக்கு வேலையை பார்த்துக்கிட்டு இருந்திருக்கும்' அலுத்துக்கொண்ட கீழ்வீட்டு ஹரிஷ் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் அம்மா 'ஆமாம்மா,பொண்ணு வளர்க்கறதுக்கும் பையன் வளர்க்கறதுக்கும் நல்லா டிஃபரன்ஸ் தெரியும்' !!//

இப்படி படிக்க கொஞ்சம் ஈஸியா இருக்கு பாஸ் :)

மாதவராஜ் said...

அருமை!

க.பாலாசி said...

//'ஆமாம்மா,பொண்ணு வளர்க்கறதுக்கும்
பையன் வளர்க்கறதுக்கும் நல்லா டிஃபரன்ஸ் தெரியும்' !!//

அந்தளவுக்கா இருக்கு... இருக்கலாம்... எனக்கு தெரிய கொஞ்ச காலம் ஆவும்...

சொல்லியவிதம் ரசிக்கவைத்தது.

Deepa said...

:-))
இவங்களே வித்தியாசத்தை விதைச்சிட்டு இப்படி சொல்றது டூ மச் தான்!

அம்பிகா said...

குழந்தைகளுக்கு வாங்கும் விளையாட்டு பொருட்களிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது என்பதை அழகாக சுட்டிகாட்டியிருக்கிறீர்கள்.

\\‘ரெண்டு பசங்களை வச்சிக்கிட்டு தொல்ல தாங்கல டீச்சர்,
பொண்ணுங்கள பெத்திருந்தா நிம்மதியா இருந்திருக்கலாம், அதுங்க
பாட்டுக்கு வேலையை பார்த்துக்கிட்டு இருந்திருக்கும்'\\
நானும் அடிக்கடி இப்படி கூறுவதுண்டு.
ஆனால் சில வீட்டில் ரெண்டு பொண்ணுங்க போடுற சண்டைய பாத்தா பசங்களே பரவாயில்லேனு தோனும்.

PPattian said...

உண்மைதான்... இப்போல்லாம் கொஞ்சமா தேவலாம்னு நெனக்கிறேன்..

வல்லிசிம்ஹன் said...

இவங்களே வித்தியாசமா வளப்பாங்க. இவங்களே அலுத்துப்பாங்க.
எங்க வீட்ட்ல எனக்கு வேறு பெயர்.
தம்பிக்கு அடக்கமான பையன்னு சொல்லுவாங்க:)
என்னவொரு வித்தியாசம்!!!

ராமலக்ஷ்மி said...

வித்தியாசத்தை சொன்ன, சொல்லி முடித்த விதம் அருமை முல்லை!

Radhakrishnan said...

:) உண்மைதான்.

நாணல் said...

:)

நட்புடன் ஜமால் said...

தலைப்புல வேற ஒன்றும் தோன்றுது எனக்கு.

--------------------

நிறைய வித்தியாசங்கள் இருக்கு உண்மை தான் - குழந்தைகளிடமும் இப்படி காட்ட வேண்டிய சூழ்நிலைகள்.

---------------------

வளர்ந்த பின் - இன்னும் வேறு விதம்
ஒரு வாட்ச் வாங்கவே தொங்கனும், அங்குட்டு நகையா குமியும் ...

போகட்டும் போனவை

----------------------

நிறைய வித்தியாசங்கள் இப்பவெல்லாம் - நல்லதாகவே பல

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல டிபரன்ஸ் தான் :)

\\வளர்ந்த பின் - இன்னும் வேறு விதம்
ஒரு வாட்ச் வாங்கவே தொங்கனும், அங்குட்டு நகையா குமியும் ...//

:))) ரொம்ப உண்மை ..ஆனா அது பொண்ணுக்காக இல்லை..அதும் வரப்போற பையனுக்காகத்தானே ஜமால்

செல்வநாயகி said...

//////'ஆமாம்மா,பொண்ணு வளர்க்கறதுக்கும் பையன் வளர்க்கறதுக்கும் நல்லா டிஃபரன்ஸ் தெரியும்' !!//

:))

பா.ராஜாராம் said...

அபாரம் முல்லை!

:-)

அமுதா said...

:-)
இதில இருக்கிற சில விஷயங்களை இன்னும் ட்ராப்ட்ல எழுதி வச்சுட்டு இருக்கேன்

துபாய் ராஜா said...

என்னைப் பொறுத்தவரை பொண்ணுங்கதான் பெஸ்ட். ஆண்டவனுக்கு நன்றி. :))

காமராஜ் said...

ஆஹா,என்ன சொல்ல, மிக புதிதான அனுகுமுறை.
வித்தியாசமானதாகவும்.வாழ்த்துக்கள் முல்லை.

ஈரோடு கதிர் said...

:-)

நசரேயன் said...

//'நான் சொல்றா மாதிரி அடிக்கணும்'//

எல்லாம் ஒரு பயம் தான் உங்க மேல

Unknown said...

முல்லை, இது மனோதத்துவ முறையில கூட உறுதிப்படுத்தியிருக்காங்க.. பையன் வளர்ப்பும் பொண்ணு வளர்ப்பும் கண்டிப்பா வேற வேற மாதிரி தான்.

ஒரு சின்ன எக்ஸாம்பிள் சொல்றேனே.. குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் குடிக்கிறதுக்கு மார்பை லாட்ச் பண்ணிக்கிறதுல கூட ஆண்/பெண் வித்தியாசம் இருக்கு (பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட சிறப்பா லாட்ச் செய்துக்கும்)

எனக்குத் தெரிந்த குடும்பத்தில் அவர்களின் பெண் குழந்தையை வித்தியாசப்படுத்தி வளர்க்கக் கூடாது என்று பாய் டாய்ஸ் எனப்படும் பந்து, கார், ட்ரக் என்று வாங்கிக் கொடுத்து வந்தனர். அதுவும் அவற்றை வைத்து விளையாடும். விருப்பப்பட்டு அல்ல அதுதான் இருக்கிறது என்பதைப் போல. சிறிது நாள் கழித்து அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் பார்பி வாங்கி பரிசாகக் கொடுத்தார்.

என்ன நடந்தது தெரியுமா? அந்தக் குழந்தை அதுவரை விளையாடிய பொம்மைகள் எதையும் தொடுவது இல்லை. அந்த பார்பியினுடன் தான் எப்போதும். இப்போது கடைக்குப் போனாலும் அவள் கேர்ள் டாய்ஸ் தான் கேட்கிறாள் (பி.கு: அந்தக் குழந்தையின் வயது 2)

Anonymous said...

வளர்ப்புமுறைல வெளிநாட்டவர்களும் அப்படித்தான். :)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

எனக்கும் நல்லாவே தெரியுது, எனக்கு வாங்கித்தரப்பட்ட 90-95% வி.பொருளெல்லாம் பதிவுப்படி பார்த்தா 'பொண்ணு' விளையாடத்தான்.
-----------------------

ஆண் பெண் பார்த்து "அதற்கேற்ப" விளையாட்டுப் பொருள்கள் வாங்குவதில் விருப்பமேயில்ல. செய்வதையும் மிகவும் குறைத்துக் கொண்டு வருகிறோம். முடிந்தவரை வேறுவிதமான பரிசுப்பொருட்கள் (வயதுக்கேற்ற அறிவியல் பரிசோதனை, புத்தகங்கள்) வாங்குகிறோம்.

அடுத்துப் பிடிக்காதது: இங்கே சிறுமியருக்கான ஆடை/அணிகலன் இத்தியாதி எல்ல்ல்லாமே இளஞ்சிவப்பில் இருப்பது. எனக்குத்தான் அதைப்பார்த்து எரிச்சல் மண்டுகிறது. இதனாலேயே பரிசுப் பொருள் (குறிப்பாக ஆடை) வாங்கும் போது இளஞ்சிவப்பில் சிறுமியருக்கு வாங்குவதில்லை என்று தீர்மானித்து அதன்படியே நடக்கிறது.ஆனாலும் சிலநேரங்களில் அநியாயத்துக்குக் cuteஆன ஆடையெல்லாம் இளஞ்சிவப்பிலேயே இருக்கு. :O(

அமிர்தவர்ஷினி அம்மா said...

//'ஆமாம்மா,பொண்ணு வளர்க்கறதுக்கும்
பையன் வளர்க்கறதுக்கும் நல்லா டிஃபரன்ஸ் தெரியும்' !! //

உண்மைதான்.

ஹுஸைனம்மா said...

நாங்கல்லாம் ஆல்-கேர்ள்ஸா இருந்ததால ரொம்ப வித்தியாசம் தெரியல. இப்ப எனக்கு ரெண்டும் பையனா ஆனதுல, எங்கம்மாகிட்ட சொன்னது, “நல்லவேளை உனக்கு பசங்க இல்ல; உன்னால சமாளிச்சிருக்க முடியாது”.

பின்னோக்கி said...

பொண்ணுங்களை வளர்கிறது ஈஸி.
பசங்க ரௌடித்தனம் பண்ணுவானுங்க.
பொண்ணுங்க நல்லவங்க. அமைதியானவங்க.

லெமூரியன்... said...

இது ஜீன் சமந்தப்பட்ட விஷயம் முல்லை ...

சொல்றதுக்கு ஒண்ணுமில்லை....
நீங்க சொன்னதெல்லாம் சரின்னு நெறைய தாய்மார்கள் ஆதரவை வெச்சே சொல்லிடலாம்.

:-) :-)

CS. Mohan Kumar said...

இது ஒரு கட்டுரை ஆகவே ரொம்ப detailed-ஆக analyse செய்ய பட வேண்டிய மேட்டர்

"உழவன்" "Uzhavan" said...

வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்; இருக்கவும் வேண்டும்.

Agila said...

இதில் குழந்தைகளின் விருப்பமும் உண்டில்லையா.. எனக்கும் gender difference இல்லாமல் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் என் மகள் இளஞ்சிவப்பு அடியைத் தெரிவு செய்யும் போதோ அல்லது barbie பொம்மையைத் தேர்வு செய்யும் போது அவள் விருப்பத்திற்கு மரியாதையை கொடுப்பது தான் எனக்கு முக்கியமாக படுகிறது. அவளுக்கு ஏன் அது பிடிக்கிறது என்பது தான் விவாதத்துக்கு உரியதே தவிர.. வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் அல்ல.
எப்போது எங்கள் வீடு முழுவதும் பொம்மை சமையலறையும், barbie டால் -ம், அவள் அறை இளஞ்சிவப்பு வண்ணத்திலும் இருக்கிறது. இதில் எதுவும் எங்கள் தேர்வுஇல்லை.

..Ag

தாரணி பிரியா said...

எல்லா வீட்டுலயும் இப்படிதானா

Agila said...

oops

"இளஞ்சிவப்பு அடியைத்"
"இளஞ்சிவப்பு ஆடையை"

Thamiz Priyan said...

ஓ,,, இதெல்லாம் வேற இருக்கா? ,,, :-)

Anna said...

Cool Post.

இதைப் பற்றி நிறைய எழுதலாம். எல்லா சமுதாயத்திலும் gender stereotyping உண்டு. எமது சமுதாயத்தைக் கேட்கவே வேண்டாம்.

இதை வாசித்தவுடன் எனக்குத் தோன்றிய எண்ணங்களைப் பதிவிடுகின்றேன்.

குழந்தைகள் தமக்கு இயற்கையாகவே பிடித்ததை தெரிவு செய்ய அனுமதி அளிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு குழந்தைகளுக்கு பால் வேறுபாடற்று எல்லா விதமான அனுபவங்களையும் அறிமுகப்படுத்துவதும் முக்கியம் என்பது என் கருத்து. அத்தோடு குழந்தைப் பருவத்தில் அவர்களுக்கு கதைக்கத்தெரியாவிடினும் தம்மை சுற்றி நடப்பதை, மனிதர்களின் பழக்கங்கள், செயல்களை மிக இலகுவாக உள்வாங்கிக் கொள்வார்கள்.

So if the people around him/her are behaving in a stereotypical way, babies will pick it up very quickly and gender stereotyoing begins almost as soon as the baby is born.

I hate colour coding kids, but it is also hard to find cloths in gender neutral colours, especially for boys.

I wonder, எத்தனை பெற்றோர்கள் தமது மகன் ஒரு பொம்மையுடனோ அல்லது சமையல் set உடனோ விளையாட விருப்பப்படின் அனுமதிப்பார்களென?

"ரெண்டு பசங்களை வச்சிக்கிட்டு தொல்ல தாங்கல டீச்சர்,
பொண்ணுங்கள பெத்திருந்தா நிம்மதியா இருந்திருக்கலாம், அதுங்க
பாட்டுக்கு வேலையை பார்த்துக்கிட்டு இருந்திருக்கும்'"

Classic

உங்களின் அனுபவத்தைக் குறிப்பிட்டுள்ளீர்கள், இவை பற்றி உங்கள் எண்ணங்களைக் குறிப்பிட்டிருந்தால் இன்னும் நன்றாகவிருக்கும்.

Anna said...

"பிறந்தநாள்கள் ஒவ்வொன்றும் எனக்குத் தந்துவிட்டு போயின
ஃபேரி டேல் புத்தகங்கள்"


Oh the fairytales, with the princess always thin, beautiful, helpless and dependent waiting for a prince to come and recue her! Grrrrrrrr!

ஒரு காலத்தில் இவற்றையெல்லாம் யோசிக்காமல் சில‌ சிறுமிகளுக்கு இவற்றைப் பரிசாகக் கொடுத்துள்ளேன். இப்போ என்ன பரிசு வாங்கினாலும் யோசித்தே வாங்குவேன்.

I like these type of fairytales better. :)

http://www.youtube.com/watch?v=d6fDtuxqPto&feature=player_embedded