உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல!!
எல்லாமே ஒரு கனவு போலத்தான் இருக்கிறது....
கேவிஆர் மின்மடல் அனுப்பியதும், ஆளுக்கொரு இடுகையிடுவோமென்று சாட்டில் பேசியதும்...என்ன செய்வது என்ற பதைபதைப்போடு இருந்த என் கண்ணில் பட்டார்கள் ஆன்லைனில் இருந்த கானாவும் ஆயில்ஸூம்!!
கானாவின் மூலமாக டொன்லீக்கும் மற்ற சிங்கைப்பதிவர்களுக்கும், ஆயில்யன் மூலமாக நிஜமா நல்லவருக்கும், நிஜமா நல்லவரின் மூலமாக கோவி.கண்ணன் மற்றும் அனைத்து சிங்கைப்பதிவர் குழுமத்திற்கும் தகவல்கள் பரிமாறப்பட்டு இதோ ஜோசஃப் அவர்கள், இடுகையிட்டிருக்கிறார் - புதுத்தகவல்களுடன். இந்த சந்திப்புக்குக் காரணமான அனைவருக்கும் நன்றிகள்!!
சிங்கை நாதன் - Collection Updates பற்றி கேவிஆர் இடுகையை புதுப்பித்திருக்கிறார் மேலதிக தகவல்களுடன்!
உதவிசெய்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...தங்களனைவரின் அன்பும், அக்கறையும் நெகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறது!
தமிழ்மணத்தில் சுட்டி தந்து சிங்கை நாதனுக்கு உதவியிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
இது தொடர்பாக, கேவிஆர்யின் பின்னூட்டத்தினை இங்கு மறு பிரசுரம் செய்துக்கொள்கிறேன்!
ராஜா | KVR said...
Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சில நண்பர்கள் paypal account பற்றி கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கும் விரைவில் அந்த விபரங்களைத் தெரிவிக்கிறேன்.
சிங்கப்பூர்
கோவி.கண்ணண் - +65 98767586
குழலி - +65 81165721
அமெரிக்கா
இளா - +1 609.977.7767
இந்தியா
நர்சிம் - +91 9841888663 (நண்பா, உங்களது தொடர்பு எண்ணை உங்கள் அனுமதி இல்லாமலே கொடுத்திருக்கிறேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)
அமீரகம்
ஆசிப் மீரான் - +971 506550245
சவுதி அரேபியா
ராஜா - +966 508296293
10 comments:
நலம் பெற பிரார்த்திக்கின்றேன்!
உதவி செய்ய உழைத்துக்கொண்டிருக்கும் நல்ல உள்ளங்களை வாழ்த்துகின்றேன்!
எனது பங்களிப்பை நாளைக்குள் அனுப்பிடுவேன் முல்லை. அனைவரின் நல்ல முயற்சியால் வேண்டிய தொகை சேர்ந்து, சீக்கிரமே சிகிச்சை நடைந்தேறி அவர் நலம் பெற நம் பிரார்த்தனைகளையும் தொடருவோம்.
செந்தில் நாதன் புது இதயத்துடன் வந்து பதிவிடும் நாளை எதிர்பார்க்கிறேன்.
ஓடித்திரிந்ததில் கவனிக்கவில்லை. மன்னிக்கவும். இன்றுதான் பார்த்தேன். என்னால் இயன்ற சிறிய தொகை உதவமுடியும். தயவுசெய்து விபரங்களைத் தனிமடலிடுங்கள் சந்தனமுல்லை.
செந்திலின் விபரங்கள் தமிழ்மணத்தில் கிடைக்கப்பெற்றன. நன்றி.
நன்றி சந்தனமுல்லை மேடம்!
உதவி செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி!
நலம் பெற பிரார்த்திக்கிறேன்..
பதிவர்களின் பங்களிப்பு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. இதயங்களால் இதயம் பேசட்டும்
நலம் பெற பிரார்த்திக்கின்றேன்!
உதவி செய்ய உழைத்துக்கொண்டிருக்கும் உள்ளங்களை வாழ்த்துகின்றேன்
Hai Madam,
im also one of the person who is raising fund for senthil nathan. Im from Singapore.
i actully, want to contact Actor Sivakumar to get help from him. i tried calling Agram foundation. But the person who attended the call was not ready to share with me Actor sivakumar's no. And he said, the trust is no longer helping for medical issues.
As u r there in Chennai, y cannot you try to meet him in person.
Udaavi seiya manasuthan venum, trust illa. Actor sivakumarkku manasu irukkunu nan namparen.
Post a Comment