என்முன் வந்து நாக்கை சப்புக்கொட்டி காட்டிக்கொண்டிருந்தாள் பப்பு.
என்னன்னு கேட்டதுக்கு, கையிலிருந்து எடுத்து சாப்பிடுவது போல ஆக்சன்! "ஆ!!
பாயாசமா?" என்றதும் மேலும் கீழும் தலையை ஆட்டினாள். "எனக்கு? எனக்கும் போய்
எடுத்துட்டு வாப்பா?" என்றதும்,
"பாயாசம்? ஆர் பாய்சன்?" என்று
கேள்வி வருகிறது....அவ்வ்வ்வ்வ்..(இத்தனைக்கும் குரலை ரொம்ப சாஃப்டாக
வைத்துக்கொண்டுதான் கேட்டேன்...ஹிஹி)
"ஆயா, ஆச்சிக்கு ஒரு கப்-ல பாய்சன் வேணுமாம்" என்று கத்தியபடி சமையலறைக்கு ஓடிவிட்டாள்!
"நீயெல்லாம் ஒரு அம்மாவா, நீ ஒரு டப்பி" என்று பல்பு வாங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் 'பிரகாசமான டப்பி தின வாழ்த்துகள்'!!
************************************
ஒரு பெண், தன் கைகளில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை ஏந்தியிருப்பதைப் போன்ற
படத்தை வழியில் பார்த்தோம்.ரியல் எஸ்டேட் விளம்பரமாக இருக்கலாம்.
"ஆச்சி,
அவங்க பில்டிங்கை கையில வைச்சிருக்காங்க பாரு. பில்டிங்கையே கையில
தூக்கிட்டாங்களா?! அவங்க ஜையன்ட்டா ஆச்சி? அப்போ, நாம அவங்களுக்கு எலி
மாதிரி இருப்போமா? நமக்கு எலி எலி.அவங்களுக்கு நாம எலி!எப்படி ஆச்சி?!!
எலிக்கு நாம ஜையன்ட். அவங்க நமக்கு ஜையன்ட். எலிக்கு அவங்க எப்படி
இருப்பாங்க?!! " #interpretations #ஒருசின்னவிளம்பரம் Vs ஒருசின்னஞ்சிறுமூளை
1 comment:
டப்பி டே வாழ்த்துகள்:)!
Post a Comment