ஏன் சிரிக்கறே..நான்தான் கீழே விழுந்துட்டேன் இல்ல...
சாரி..சாரி..இனிமே சிரிக்கலை...
(முன்பெல்லாம் அவள் தெரியாமல் கீழே விழுந்தாலோ அல்லது எங்காவது இடித்துக்கொண்டாலோ் பார்க்க நேர்ந்தால் லேசாக சிரித்து வைப்பேன் கண்டுக்கொள்ளாததுபோல....அவளும் அழாமல் அந்த அதிர்ச்சியை சிரிப்பாக மாற்றி விடுவாள். இனிமேல் அது உதவாது போல.)

”நாம் ரெண்டு பேரும் சேர்ந்து வர்ஷினியை அழுக்குன்னு சொல்லலாமா ”
”ஏன் பப்பு, வர்ஷினி க்ளீன் தானே”
”ஏய் இல்ல, அழுக்கு அழுக்கு சொல்லு...”
அழுக்கு!
அழுக்கு!!
அழுக்கு!!!
(இப்படித்தான் பேர் வைக்க ஆரம்பிப்பாங்க போல இருக்கு, இந்தம்மாக்கு என்ன பேருன்னு தெரியலையே!!! சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்.)

”ஆச்சி, என் கனவுலே ஆல்ஃபபெட்ஸ் வருதா பாரு?”
”ஆச்சி, இங்கே பாரு இப்போ ஆரஞ்சுக்கலர் தெரிஞ்சுதா”
”ரெய்ன்போ இப்போ தெரிஞ்சுதா”
அவள் கண்களை மூடிக்கொள்வாள். கண்களுக்குள் அவளுக்குத் தெரிவதெல்லாம் அவளது கண்களை நான் பார்த்தால் தெரியும் என நம்புகிறாள்.

”ஆச்சி, மூச்சு விடலன்னா என்னாகும்? நான் இப்போ மூச்சு விடாம் இருக்கேன் ”.
அவளது சோதனையில் எனக்குத்தான் இதயம் நின்று நின்று துடிக்கிறது.

”இரு, வர்ஷினிக்கிட்டே சொல்றேன்...” - பப்பு
சொல்லிக்கோ
ஒன்னை நல்லா கீறுவா...வர்ஷினி நல்லா கீறுவா..
அய்யே...
ஆமா, வர்ஷினி நல்லா கீறுவா, நான் கிள்ளுவேன். வெண்மதி நல்லா அடிப்பா!
சார்லீஸ் ஏஞ்சல்ஸ் பார்ட் -2 வா?! அவ்வ்வ்வ்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! :-)
27 comments:
பொங்கல் வாழ்த்துக்கள் முல்லை. பப்பு டைம்ஸ் வழக்கம் போல் சூப்பர்.
\\\\அவளது சோதனையில் எனக்குத்தான் இதயம் நின்று நின்று துடிக்கிறது.//
இல்லையா பின்ன :(
நல்லாகீறுவா நல்லா அடிப்பா / ம் ஒவ்வொருவரும் தனித்தனித் திறமையோட இருக்காங்க..
//ஆச்சி, மூச்சு விடலன்னா என்னாகும்?//
இது ரொம்ப டேஞ்சரான கேள்வியா இருக்கே பப்பு
அவளுக்குத் தெரிவதெல்லாம் அவளது கண்களை நான் பார்த்தால் தெரியும் என நம்புகிறாள்.]]
அழகு உலகம்
அழகு உள்ளம்
வாழ்த்துகள்!
கவிதையும், இயல்பான நகைச்சுவையும், பிரியமும் கொண்ட அற்புதமான சித்திரங்கள் யாவும். ரொம்ப ரசித்தேன்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
ஆச்சி, என் கனவுலே ஆல்ஃபபெட்ஸ் வருதா பாரு?”
”ஆச்சி, இங்கே பாரு இப்போ ஆரஞ்சுக்கலர் தெரிஞ்சுதா”
”ரெய்ன்போ இப்போ தெரிஞ்சுதா”
அவள் கண்களை மூடிக்கொள்வாள். கண்களுக்குள் அவளுக்குத் தெரிவதெல்லாம் அவளது கண்களை நான் பார்த்தால் தெரியும் என நம்புகிறாள்.
[Photo]
”ஆச்சி, மூச்சு விடலன்னா என்னாகும்? நான் இப்போ மூச்சு விடாம் இருக்கேன் ”.
அவளது சோதனையில் எனக்குத்தான் இதயம் நின்று நின்று துடிக்கிறது.//
இரண்டும் ஒரு குட்டிக்கவிதை.
ஆமா, வர்ஷினி நல்லா கீறுவா, நான் கிள்ளுவேன். வெண்மதி நல்லா அடிப்பா! //
என்னா ஒரு வில்லத்தனம் :)))
எங்க வீட்டிலேயும் கனவு அனுபவம் இதேப் போல் தான் உள்ளது முல்லை. தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்!!!!!
//வர்ஷினி நல்லா கீறுவா, நான் கிள்ளுவேன். வெண்மதி நல்லா அடிப்பா!//
ஸ்பெஷலிஸ்டுகளா!!!!.யாருக்கு என்ன ட்ரீட்மெண்ட் வேணுமோ,.. சண்டை போடாம வரிசையில் நின்னு வாங்கிக்கிங்க.;-).
//ஆச்சி, மூச்சு விடலன்னா என்னாகும்?//
பப்புவும் மிகப்பெரிய ரவுடிதான்னு தெளிவாயிட்டுது.. ஜீப்புல ஏத்துங்கப்பா :-))
//வர்ஷினி நல்லா கீறுவா, நான் கிள்ளுவேன். வெண்மதி நல்லா அடிப்பா!//
ஸ்பெஷலிஸ்டுகளா!!!!.யாருக்கு என்ன ட்ரீட்மெண்ட் வேணுமோ,.. சண்டை போடாம வரிசையில் நின்னு வாங்கிக்கிங்க.;-).
//ஆச்சி, மூச்சு விடலன்னா என்னாகும்?//
பப்புவும் மிகப்பெரிய ரவுடிதான்னு தெளிவாயிட்டுது.. ஜீப்புல ஏத்துங்கப்பா :-))
பப்பு சூப்பர்டா செல்லம்... இப்படியே இரு :)
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :)
:)
கனவுதான் சூப்பர்!
:-)
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
:-))))
பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா :-)
பொங்கல் வாழ்த்துக்கள் ஆச்சி!
/ஆமா, வர்ஷினி நல்லா கீறுவா, நான் கிள்ளுவேன். வெண்மதி நல்லா அடிப்பா!
சார்லீஸ் ஏஞ்சல்ஸ் பார்ட் -2 வா?! /
:))
பப்பு டைம்ஸ் அருமை.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பப்புமா,
நீதான் பேசும் பொற்சித்திரம்..முல்லை ,
பொங்கல் வாழ்த்துகளும் குழந்தைக்கு ஆசிகளும்.
எங்க வீட்டுப் பொடிசு அடிக்கிற லூட்டியெல்லாம் அடிச்சுட்டு
''ஐ லவ் யூ மா. யூ ஆர் மை பெஸ்ட் கேர்ல்'' அப்படீன்னு வேற சொல்கிறது.:)
:-))) ரொம்ப ரொம்ப ரசித்தேன்!
கோட் பண்ணனும்னா மொத்தப் பதிவையும் தான் காப்பி பேஸ்ட் செய்யணும்!
பப்புவுக்கும் ஆச்சிக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
//”ஆச்சி, என் கனவுலே ஆல்ஃபபெட்ஸ் வருதா பாரு?”
”ஆச்சி, இங்கே பாரு இப்போ ஆரஞ்சுக்கலர் தெரிஞ்சுதா”
”ரெய்ன்போ இப்போ தெரிஞ்சுதா”
அவள் கண்களை மூடிக்கொள்வாள். கண்களுக்குள் அவளுக்குத் தெரிவதெல்லாம் அவளது கண்களை நான் பார்த்தால் தெரியும் என நம்புகிறாள்.//
class!
இனிய பொங்கள் வாழ்த்துக்கள் பப்பும்மா,முல்லை!
அழகு உலகம்
அழகு உள்ளம்.
நல்லாருக்கு
பொங்கல் வாழ்த்துக்கள் சந்தனமுல்லை :-)
பொங்கல் வாழ்த்துக்கள் முல்லை!!
Charlie's angel a:)) nalla panreengal ammavum ponnum.
//சோதனையில் எனக்குத்தான் இதயம் நின்று நின்று துடிக்கிறது//
அப்படியா
உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் முல்லை...
எப்போவும் போல், பப்பு டைம்ஸ் கலக்கல்...
//அவளுக்குத் தெரிவதெல்லாம் அவளது கண்களை நான் பார்த்தால் தெரியும் என நம்புகிறாள்//
பரவாயில்லையே... இவ்வளவு சின்ன வயதிலேயே என்னே மதிகூர்மை...
மழலை உலகமே தனி சுகம்... அதை சொல்வதை விட, அனுபவித்து பார்த்தால் தான் பரவசம்...
Post a Comment