குறிப்பு : காப்பி போ(பே)ஸ்ட்தான்!
ப்லாக் காணாம போனப்போ இங்கே எழுதினது. இங்கேயும் ஒரு தடவை போஸ்டறேன்.
######
காலை நேரம்.
”என்னை தூக்கு. ”
”பப்பு, ப்லீஸ், நீ டம்ளர் எடுத்துக்கோ, எனக்கு ரெண்டு கைதானே இருக்கு, உன்னை தூக்கிக்கிட்டா டம்ளர் எப்படி எடுக்கறது?”
”என்னை தூக்குனாதான்...”
”சரி, அப்போ நீ டம்ளர் எடுத்துக்கோ..”
”உன் பேச்சு கா, போ...நீ என்னை தூக்கமாட்டேன்னுட்டே..உன்கூட பேச மாட்டேன்..போ”
பப்பு, கிண்ணம்,டம்ளர் - தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தேன். கதை படித்துக்கொண்டே சாப்பிட்டால், உணவு சீக்கிரம் உள்ளே செல்லும்!
அந்த கதையில்,
”உள்ளேயிருந்து “ம்ம்..” என்று சத்தம் வந்தது!அம்மா கால்வலியில் அழுகிறாளா என்று பார்த்தேன் ”
ஒரு சிறுவன் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வருவான். வெங்காயம் உரித்துக்கொண்டிருக்கும் அம்மாவின் கண்களில் நீர் வழியும். சாதாரண ஒரு பக்க கதை.
கூட, நானாக கொஞ்சம் பிட்டு போட ஆரம்பித்தேன். ”அம்மாவுக்கு கால் வலிச்சா கால் அமுக்கி விடணும், அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணனும்”
பட்!!
”ஆ, பப்பு, ஏன் அம்மாவை அடிச்சே..அம்மாவை அடிக்கலாமா?”
”போ...நீ ஏன் என்னை ஹெல்ப் பண்ண சொல்லல...கா..கா..நான் உன் ப்ரெண்ட் இல்லே..போ..ஏன் என்னை ஹெல்ப் பண்ண சொல்லவே மாட்டறே?”
அவ்வ்வ்வ்!
4 comments:
இது பல்பு இல்லீங்க
நெகிழ்ச்சி
லவ் யூ பப்பு.
//”போ...நீ ஏன் என்னை ஹெல்ப் பண்ண சொல்லல...கா..கா..நான் உன் ப்ரெண்ட் இல்லே..போ..ஏன் என்னை ஹெல்ப் பண்ண சொல்லவே மாட்டறே?//
ம்ம்ம்....நைஸ்....பப்பு...
alagu
"நட்புடன் ஜமால் said...
இது பல்பு இல்லீங்க
நெகிழ்ச்சி
லவ் யூ பப்பு."
repeatu.........
குழந்தையின் புரிதலும் பாசமும் அருமை. பாசத்தைக் காட்டக் கூட ஒரு அடிதான் போலும். கொடுத்து வைத்த அம்மா.
எங்கள் ஓட்டு பப்புவிற்க்கு. குழந்தைக்கு ஹெல்ப் பண்ணும் கைவேலை அல்லது அவளின் வேலைகளை நிறைவாக செய்ய கற்றுக் கொடுங்கள். நன்றி.
Post a Comment