எனது ஆயா(கொள்ளுப்பாட்டி)வின் வீர வரலாற்றைச் சொல்லும் பதிவைக் கண்டேன், முனைவர் ரத்தின புகழேந்தியின் வலைப்பூவில். ஆயாவின் விடுதலைப் போராட்ட வாழ்வின் அனைத்து விபரங்களோடும், சுவாரசியமான குறிப்புகளோடும்! பெண்கள் வெளியே வருவதும், தனியாக நடமாடுவதும் கூட கட்டுப்படுத்தப் பட்ட அன்றைய நாளில், ஆயா வண்டி கட்டிக் கொண்டு சுற்றியுள்ள கிராமங்களில் மக்களைச் சந்தித்து சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். பாரதிக்கு தடை விதிக்கப் பட்டிருந்த காலகட்டத்தில், கடலூரிலிருந்த ஆயா வீட்டிற்கு வந்து அங்கிருந்து பாண்டிச்சேரிக்குச் சென்றிருக்கிறார்.
சுதந்திர தினத்தன்று வெளியிடப்படும் நாளேட்டு மலர்களில் ஒரு சில வரிகள் அல்லது பத்திகள் தியாகப் பெண்மணிகளின் செய்தியைத் தொட்டுச் செல்லும்! எப்போதாவது, வரலாற்று/பெண்ணிய ஆராய்ச்சி மாணவர்கள் கட்டுரைகளில் இவர்களின் விபரங்கள் தொகுக்கப்படுவதுண்டு! ஏனோ தென்னாட்டின் பல வீர பெண்களின் விடுதலைத் தியாகங்கள் மறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் இருக்கும்போது, அவ்வப்போது வரும் இப்பதிவுகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றன..ஞாநியின் நெருப்பு மலர்கள் புத்தகம் முழுக்க முழுக்க, விடுதலைப் போராட்டத்தில் இந்தியப் பெண்களின் பங்களிப்பைப் பேசிச் செல்கிறது!
முனைவர் இரத்தினபுகழேந்தியின் பதிவு - அஞ்சலை அம்மாளைப் பற்றி
முனைவர் ரத்தினபுகழேந்தி அவர்களுக்கு நன்றி! இவர் கதை, கவிதை, கட்டுரை என பல தளங்களில் பங்களிக்கிறார்!
ஆயாவைப் பற்றி இணையத்தில் கிடைத்த பதிவுகள் பற்றிய தொகுப்பு - நட்சத்திர வாரத்தில் பதிவிட்டது!
11 comments:
சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு.
ஞாநியின் நெருப்பு மலர்கள் புத்தகம் முழுக்க முழுக்க, விடுதலைப் போராட்டத்தில் இந்தியப் பெண்களின் பங்களிப்பைப் பேசிச் செல்கிறது!
தொடராக வரும்போது விட்டு விட்டுப் படித்ததுண்டு.
நன்றி பகிர்ந்தமைக்கு
உங்கள் ஆயாவிற்கு வணக்கங்கள் :)
அந்த போராட்ட குணம் கட்டாயம் உங்களுக்கும் பப்புவுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன் :)
நட்சத்திர வாரத்தில் முதல் முறையாக தங்களின் பதிவுக்கு வந்து
வரலாற்று சிறப்பு மிக்க ஒரு செய்தியினை தெரிந்துக்கொண்டது இன்றும் நினைவில் இருக்கிறது !
வாழ்த்துக்கள்!
போராட்ட காலத்தில் தியாகம் செய்த பெண்மணிகள் பற்றிய செய்திகள் பகிர்ந்துக்கொண்டமைக்கும்...!
ஆயாவிற்கு வீர வணக்கம், நல்ல பகிர்வு
//ஆயா வண்டி கட்டிக் கொண்டு சுற்றியுள்ள கிராமங்களில் மக்களைச் சந்தித்து சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்//
இதப் படிச்சதுமே புல்லரிக்குது!!
great akka!!
//ஆயா வண்டி கட்டிக் கொண்டு சுற்றியுள்ள கிராமங்களில் மக்களைச் சந்தித்து சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்//
இது அசாத்தியமான விசயம்.
தலைவணங்குகிறேன்
////ஆயா வண்டி கட்டிக் கொண்டு சுற்றியுள்ள கிராமங்களில் மக்களைச் சந்தித்து சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்//
salute to ur granny!!!
அஞ்சலை அம்மாவிற்கு வீர வணக்கங்கள்.
இவர்களை எல்லாம் பார்த்து நாமும் அப்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.
பகிர்ந்து கொண்டதற்கு அஞ்சலை அம்மாவின் கொள்ளு பேத்தியான முல்லைக்கு நன்றி .:)
நன்றி அமித்து அம்மா!
நன்றி பிரேம்...உங்கள் நம்பிக்கை பொய்க்காமலிருக்க பிரார்த்திக்கிறேன்..;-)
நன்றி ஆயில்ஸ், நசரேயன், சசி, குடுகுடுப்பையார்,திவ்யாபிரியா, முத்து!
நன்றி கவிதா..எனக்கும் அவங்கதான் இன்ஸ்பிரேஷன்..:-)
//பாரதிக்கு தடை விதிக்கப் பட்டிருந்த காலகட்டத்தில், கடலூரிலிருந்த ஆயா வீட்டிற்கு வந்து அங்கிருந்து பாண்டிச்சேரிக்குச் சென்றிருக்கிறார்//
எங்களூர்க்காரர் உங்கள் வீட்டிலா?! மிகவும் பெருமையாக உள்ளது உங்கள் கொள்ளுப்பாட்டியை நினைக்கும்போது. பகிர்வுக்கு நன்றி.
அன்புடன்
உழவன்
அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு எனது வணக்கங்கள்
Post a Comment