';

மா சே துங் மேற்கோள்கள் - III

சிந்தனா முறையும், வேலை முறையும்

மனித குல வரலாறு என்பது தேவை மண்டலத்திலிருந்து சுதந்திர மண்டலத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறும் ஒன்று. இது முடிவற்றது. வர்க்கங்கள் உள்ள சமுதாயத்தில் வர்க்கப்போராட்டம் முடிவின்றி நிகழும். வர்க்கமற்ற சமுதாயத்தில், புதுமைக்கும், பழைமைக்கும் சரிக்கும் தப்புக்கும் இடையில் நடைபெறும் போராட்டம் – இதுவும் ஓயாது. உற்பத்திக்கான போராட்டம், அறிவியல் போன்றவற்றில் மனிதகுலம் முன்னேறுகிறது. இயற்கையும் முன்னேறுகிறது. இவை இரண்டும் ஒரே மட்டத்தில் இருப்பதில்லை.

1964ஆம் ஆண்டில், சீனா 1958ஆம் ஆண்டிற்கான அறுவடையின் திட்டமிடப்பட்ட புள்ளி விவர இலக்குகளை எட்டியது. சில கட்சி ஊழியர்கள், மிகையூதியங்கள் வழங்குகிற முறையையும், அதனோடு சேர்ந்த சுதந்திர வர்த்தகத்தையும் முய்ற்சி செய்து சோதித்து பார்த்தனர். இதன்படி, தனிப்பட்ட குடும்பங்களுக்கு சில உற்பத்தி வரைவெல்லைகள் நியமிக்கப்பட்டன. நிலத்துக்கு சொத்துரிமை வழங்குவது குறித்தும் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. நகர்ப்புற அதிகார வர்க்கத்துடன், நிலவுடமை வர்க்கம் எழுவதற்கும் இது வாய்ப்பாக இருந்தது.

இதனை மாவோ கவனித்தார். ”முதலாளியாக மாற விரும்புகிற உள்ளார்ந்த அகத்தூண்டுதலை” அகற்றுவதை குறிக்கோளாக கொண்டிருந்த சோசலிசக் கல்வி இயக்கத்தை ராணூவத்திலும், கம்யூனிலும் மேற்கொண்டார். இந்த வினைக்கு நல்ல பலனிருந்தது. இதனை தொடர்ந்து, லியூ சாவோ சி வழி என்று அழைக்கப்படும் முதலாளித்துவ வழியை ஆதரித்த ஊழியர்கள் பெருமளவு வெளியேற்றப்பட்டிருந்தனர். இது இறுதியாக மார்க்சிய வழியை மாவோ வழியை பின்பற்றுகின்றனவ்ர்களுக்கும், குட்டி முதலாளித்துவ வர்க்கத்துக்குமான போராக மாறியது.

மனிதன் இயற்கையை விஞ்ஞானத்தை பயன்படுத்த வேண்டும். இயற்கை விஞ்ஞானம் என்பது ஒரு ஆயுதமாக விளங்குகிறது. சமுதாய புரட்சிக்காகவும் இயற்கை விஞ்ஞானத்தை பயன்படுத்தவேண்டும். இயக்கைவியல் பொருள்முதல்வாதம் என்பது – வர்க்க இயல்பு- பாட்டாளி வர்க்கத்துக்கு சேவை செய்வது- பிறகு- தத்துவம் நடைமுறையை அடிப்படையாக கொண்டது – மீண்டும் நடைமுறைக்கே சேவை செய்கிறது. – உலகை மாற்றுவதற்கு இந்த விதிகளை பயன்படுத்துவது முக்கியமான பிரச்சினை.

மனிதனின் சமுதாயக் கருத்துகள் – வாழ்நிலையிலிருந்துதான் தோன்றுகின்றன. சமுதாய வாழ்வே அவனது சிந்தனையை நிர்ணயிக்கிரது. மக்கள் போராட்டங்களிலிருந்து. வெற்றி, தோல்விகள் அனுபவங்களிலிருந்து செழுமையான அனுபவங்களைப் பெறுகிறார்கள். அறிவு புலக்காட்சியாக தெரிகிறது, போதிய அறிவு வந்ததும் பாய்ச்சலாக பகுத்தறிவு நிகழ்கிறது. அதன்பின்னர் அறிதலின் வளர்ச்சி போக்கில் – அடுத்த நிலை - கருத்துகளிலிருந்து வாழ்க்கைக்கு செல்கிறது. அறிவு சரியானதா என்பதை பார்க்க, திட்டங்கள், கொள்கைகள் வழிமுறைகள் சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கப்படுகின்றன.

கடமைகளை முன்வைத்தால் மட்டும் போதாது, அவற்றைக் கொண்டு நடத்தும் வழிமுறை பிரச்சினைக்கும் நாம் தீர்வு காண வேண்டும். படகுப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் தான், ஆற்றைக் கடப்பது பற்றிய பிரச்சினை தீர்க்கப்படும். பொதுவான பரந்து விரிந்த அறைகூவலே பொதுவான மக்களை சென்றடைய முடியும். ஆனால், தலைமைப்பதவிகளில் இருப்பவர்கள் அவற்றுடன் தம்மை கட்டுப்படுத்திகொள்வது பலனை கொடுக்காது. அறைகூவல் விடுக்கப்பட்ட வேலைகளில் பருண்மையாகவும், நேரடியாகவும், ஒரு தனிமுனையில் உடைத்து புகுந்து அனுபவத்தைப் பெற வேண்டும். அதனை மற்ற பகுதிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

இதற்கு சீனாவில் பொதுவான அறைகூவலான “ முதலில் கிராமப்புற பகுதிகள் மீது அழுத்தம் கொடுங்கள்” என்பது ஒரு நாடு தழுவிய திட்டம். இந்த அறைகூவலில் மருத்துவத்துக்காகம் சுகாதார ஊழியர்களுக்கு நான்கு கோட்பாடுகள் பொதுவாக வகுக்கப்பட்டன.

1. வருமுன் காப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பது

2. தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் படைவீரர்கள் ஆகியோரின் தேவைகளை நிறைவேற்றுவது

3. மக்கள் திரள் இயக்கங்கள் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பொது மருத்துவ சேவை நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது

4. சீனப்பாரம்பரிய மருத்துவர்களையும், மேற்குலகில் பயிற்சி பெற்ர மருத்துவர்களையும் ஒன்றிணைப்பது

இங்கு. வருமுன் காப்பது – குடும்பக் கட்டுபாட்டையும் குறித்தாலும் இனும் விரிவானவற்றை குறிக்கிறது. பல்வேறு தொற்று நோய்களை, கொள்ளை நோய்களை குணப்படுத்த கோடிக்கணக்கில் மருந்துகளும் தேவைப்படுகின்றன. பீகிங்கில் மட்டுமல்லாது, சீனாவின் பல இடங்களிலும் ஐரோப்பாவைவிட மிகப்பெரிய சோதனைச்சாலைகள் இருந்தன.

முன்பெல்லாம் பெண்கள் 21 வயதில் திருமணமாகாவிட்டால் இகழ்ச்சிக்குரியதாக கருதப்படும். ஆனால், புரட்சிக்குப் பிறகு அந்த கண்ணோட்ட்டம் வெகுவாக மாறியிருக்கிறது. ஆண்களுக்கு ஒத்த சமப்வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். இளம் தலைமுறையினர் அரசியல் நம்பிக்கையாலும், சமூகத்துக்காக பணிபுரியவும் எண்ணுகின்றனர்.

மேலும், “உழவர்களிடமிருந்து கற்பதற்காக” மருத்துவ ஊழியர்கள் அனுப்பப்பட்டனர். அதனால், பாரம்பரிய அக்யூபஞ்சர் கற்றுக்கொள்வதை அதை சார்ந்திருப்பதை தவிர்க்க இயலாததாகியது. இந்த மருத்துவர்கள், “வெறுங்கால் மருத்துவர்கள்” என்றழைக்கப்பட்ட ஊழியர்களுக்கு மருத்துவ பயிற்சியளித்தனர். ஏனெனில், உழவர்கள் மருத்துவர்களிடம் சென்று பார்ப்பதைவிட, அவர்களிடம் வரும் வெறுங்கால் மருத்துவர்களையே விரும்புகிறார்கள். சிறிய வகைப்பட்ட உடல்நலக்கேடுகளுக்கு வெறுங்கால் மருத்துவர்கள் உதவுகிறார்கள். அவர்களே குடும்பக்கட்டுபாடு பற்றியும் மாத்திரையையும் எடுத்துச் செல்கிறார்கள். கம்யுனிஸ்டுகள், நவீன மருத்துவ விஞ்ஞானத்துடன் பாரம்பரிய விஞ்ஞானத்தையும் ஒருங்கிணைக்க பாடுபடுகின்றனர்.

தலைமைப்பதவியில் உள்ள எவரும் கீழே உள்ள தனிநபர்கள் அல்லது நிகழ்ச்சிகளிலிருந்து அனுபவத்தை சேகரிக்கவேண்டும். அதுவே சரியான வழிகாட்டலுக்கு உதவியாக இருக்கும்.

எந்த ஒரு சமயத்திலும் ஒரே ஒரு கேந்திரக்கடமை மட்டும் இருக்க முடியும். ஏனைய கடமைகள் அதை நிறைவு செய்ய இரண்டாம்தர மூன்றாம்தர கடமைகளாக மட்டுமே இருக்க முடியும். மேலேஇருந்து வரும் கட்டளைகளை அப்படியே அமுல்படுத்தி நடத்தி கேந்திரக்கடமைகள் பலவற்றை படைத்து குழப்பத்தை தோற்றுவிக்கக் கூடாது. அந்தந்த இடத்தின் வரலாற்று நிலைமைகள், சூழ்நிலைகள் ஆகியவற்றின் படி வேலையின் ஈர்ப்பு மையத்தை தீர்மானிக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வேலையை முன்னெடுத்து செல்வதில் தொடர்ச்சியாக அழுத்தத்தை செலுத்தி அனுபவத்தை பரிமாறிக்கொள்ள வேண்டும். பிழைகள், சோதித்தறிதல், தவறுகள் ஏற்பட்டவுடன் அதனை திருத்திக்கொள்ளுதல் ஆகியவை இழப்பை குறைக்கும். வேலைமுறை என்பது உற்சாகமானதாக, அமைதியான சீரான ஒழுங்கைக்கொண்ட வேலைமுறை – அதுவே நமது தேவை.

உதாரணத்துக்கு, மே ஏழாம் நாள் பள்ளிகள் – சீர்திருத்தவாதிகளுக்கான சீர்திருத்த பள்ளிகள். இதில் கீழ்படியா நிலப்பிரபுக்கள், எதிர்ப்புரட்சிக்காரர்கள், சாதாரண குற்றவாளிகள் இருந்தனர். மேலும், கட்சி பொறுப்பிலுருந்த சில ஊழியர்களும் வந்திருந்தனர். இவர்கள், உற்பத்தி மற்றும் யதார்த்ததிலிருந்து விலகி சென்றிருந்தனர். இப்போது மக்களோடு தங்களை ஒன்றிணைத்துக் கொள்வதற்கும், உழவர்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் முயற்சி செய்கிறார்கள்.

அதேபோல், உடலுழைப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, அதிக எண்ணிக்கையிலான்ன ஊழியர்களை கிராமப்புற பகுதிகளுக்கு ஊக்குவிக்க தொடங்கின. அதாவது கண்ணோட்டத்தில் பாட்டாளி வர்க்கமாக மாறுவது என்பதும் பொருளாகும்.

1 comments:

குருத்து said...

தட்டச்சு செய்துவிட்டு, ஒரு வாசகனாய் இருந்து, வாசித்து, சில திருத்தங்களை செய்தால் நன்றாக இருக்கும். :)

கொஞ்சம் நிதானித்து படித்தால் தான் உள்ளே இறங்குகிறது.

தொடர்ந்து இந்த வேலையை செய்யுங்கள்.


இந்த புத்தகத்தின் தலைப்பு என்ன? விவாதிக்கிற காலக்கட்டம் என்ன? யாருடைய மொழிபெயர்ப்பு? இந்த புத்தகத்தை யார் வெளியிட்டது? போன்ற தகவல்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.