';

மா சே துங் மேற்கோள்கள் - II

சுய சார்பும் கடினமான போராட்டமும்

இந்த அத்தியாயம் போராட்டத்தில் வெற்றி பெறுவது பற்றியும், சுய பலத்தை சார்ந்திருப்பது பற்றியும் சொல்லப்படுகிறது. அதாவது சொந்த முயற்சிகள் மூலம் புதுவாழ்வை பெறுவது. சுயமுயற்சிகள் மூலம் மறுவாழ்வு பெறுவதையே நாம் வலியுறுத்துகிறோம். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அனைவரும் நமது நண்பர்களே! இருந்தும், நாம் சுயமாக மக்களை அணிதிரட்டுவதை சார்ந்து உள்நாட்டு, வெளிநாட்டு பிற்போக்குவாதிகளை தோற்கடிக்க முடியும்.

அதாவது அந்நிய சக்திகளை சார்ந்திருந்தாலும், அவர்களை எதிர்ப்பார்க்க வில்லை. முழு ராணுவத்தையும், மக்களையும் சார்ந்திருக்கிறோம். புரட்சி மகத்தானது என்றாலும் புரட்சிக்கு முன்பான பாதை என்பது மிகவும் நீண்டது. கடினமானது. எளிமையான வாழ்க்கை, கடினமான போராட்டம் என்பதை நிலைநிறுத்தவும் அவர்களுக்கு உதவ வேண்டும். ரத்தமும், வியர்வையும் சிந்தாமல், எளிதாக வெற்றி பெறலாம் என்ற கருத்துகள் நீக்கப்பட வேண்டும். நமது பாதையில் நெளிவு சுளிவுகள் உண்டு என்று மக்களுக்கும் தோழர்களுக்கும் சொல்ல வேண்டும். இன்னல்களை அங்கீகரிக்க வேண்டும். அங்கீகரியாமை கொள்கையை கடைபிடிக்க கூடாது. இன்னல்களை ஆராய வேண்டும். எதிர்த்து போராட வேண்டும். உலகில் நேரிய பாதைகள் கிடையாது, அதற்கு நெளிவு சுளிவான பாதைகள் பாதையில் செல்ல தயாராக இருக்க வேண்டுமே தவிர, மலிவாக விசயங்களைப் பெறலாம் என்று எண்ணிவிடக் கூடாது.

”விவசாயம் என்பது அடித்தளம்; தொழிலுற்பத்தி என்பது முன்னணிக் கூறு” என்பதே 1960 ஆம் ஆண்டு முதலாக சீன பொருளாதார நடைமுறை. பஞ்சத்தையொட்டிய காலங்களுலும், நெருக்கடியின் போதும் சீனாவின் தலைவர்கள் கனரக தொழிற்சாலை அமைக்கும் திட்டங்கள் மீதான் அழுத்தத்தை கைவிட்டனர். அதோடு, விவசாயத்துக்கு முதலீடுகளை குறைக்கும் திட்டத்தையும் கைவிட்டனர். சோவியத் உதவியின்றி “தன்னிறைவு” என்ற முழக்கத்தை மேற்கொள்வது தவிர சீனாவுக்கு வேறு மார்க்கம் இல்லை.ஆனால், சோவியத்திடமிருந்து கடன் வாங்கப்பட்ட வாய்ப்பாடுகளை அவர்கள் புறம் தள்ளினர். “ தொழில்துறை விவசாயத்துக்கு சேவை செய்ய வேண்டும்” என்றனர். நகர்ப்புறத்துக்கும், கிராமப்புறத்துக்கும் சமமான வளர்ச்சியை ஏற்படுத்த சொந்த முய்ற்சிகளை மேற்கொண்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக, சீன மனிதர்களின் சூழ்நிலையை மாற்றவும், அதன் மூலமாக மனிதரை மாற்றவும் முனைந்தார்.

ஏறத்தாழ ஐரோப்பா, ரஷ்யா ஆகியவற்றில் ஒருங்கிணைந்த அளவைக் கொண்ட நாடாக சீனா இருக்கிறது.ஆனால், அதன் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு செங்குத்தான மலைகளை அல்லது தரிசு பூமிகளை அல்லது பாலைவனமாக இருக்கிறது. எனவே பெரிய அளவு உடலுழைப்பைச் சார்ந்து இருக்கிறது.

சீனாவின் 1800 மாவட்டங்கள் 70கே விவசாய கம்யூன்களாக பிரிக்கப்பட்டன. அவை மேலும், 7,50,000 உற்பத்தி குழுக்களாக பிரிக்கப்பட்டன. பல கம்யூன்கள் ஒன்றிணைந்து பிரிகேடுகளை உருவாக்குகின்றன. அவையே நாட்டின் நிர்வாக துணை அமைப்புகளாக விளங்குகின்றன.

கம்யூன்களில், ஏறக்குறைய 50 கோடி மக்கள் தங்களுக்காகவும், பெருநகரங்களுக்காகவும், மாவட்ட அளவிலான நகரங்களுக்காகவும் உற்பத்தி செய்ய வேண்டும். எட்கர் ஸ்னோவின் மறு பிரயாணங்களின்போது பயிரிடும் முறைகள்,பாசனப்பணிகள், மின்மயமாக்கல், இயந்திரமயமாக்கல் , நிலமீட்பு, வீட்டுவசதி மற்றும் சிறு தொழிற்சாலைகள் ஆகியவை பன்மடங்கு மேம்பட்டிருந்ததை காண முடிந்தது என்கிறார். பெரும்பாலான விவசாயிகள், உழைக்கவியலாத வயதை எட்டிய மக்களுக்கு அளிக்கப்பட்ட 5 உறுதி மொழிகளான போதிய உணவு, வீடு, எரிபொருள், மருத்துவ வசதி, மற்றும் முறையான அடக்கம் ஆகியவற்றை இப்போது நம்புகிறார்கள்.

மேலும், இன்னல்களை களைவதற்கு தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவு சார் துரையினர் மார்க்சிய லெனினிய பாதையில் தீர்வை தேட வேண்டும். இன்னல்களின் போது நாம் நமது சாதனைகளை மறந்துவிடக் கூடாது. ஒளிமயமான எதிர்காலத்தை எண்ணி நமது துணிவை வரவழைத்துக்கொள்ள வேண்டும். புதிய விஷயங்களை அவற்றின் வளர்ச்ச்சி போக்கில் இடர்பாடுகளையும், பின்னடைவுகளையும் எதிர்க்கொள்ள வேண்டியிருக்கிறது. அது இயல்புதான். கஷ்டங்கள் சாதக நிலைகளைவிட மேலோங்கி இருக்கலாம். இங்கு கஷ்டங்கள் முரண்பாட்டின் பிரதான அம்சமாகவும், சாதகமான நிலைமைகள் இரண்டாம் தர அம்சமாகவும் இருக்கின்றன. இருந்தாலும், புரட்சிவாதிகள் கஷ்டங்களை படிப்படியாக வென்று சாதகமான புதிய சூழ்நிலைகளை திறக்க முடியும்.

வேலை என்பது போராட்டம். போராடி தீர்வு காண வேண்டிதான் நாம் அந்த இடங்களுக்குச் செல்கிறோம். கஷ்டங்கள் அதிகமாக உள்ள இடத்துக்குச் செல்ல ஆசைப்படுபவரே சிறந்த தோழர். மலைகளை அகற்றிய மூடக்கிழவன் கதையில், வருவது போல, நாமும் கடவுளுடைய இதையத்தைத் தொடுவோம். அந்த கடவுள் யாரும் இல்லை. சீன மக்கள் அன்றி அவர்கள் வேறு யாருமில்லை.

0 comments: