பப்பு ஏதாவது ஆர்ட் வொர்க் செய்து இரு மாதங்களுக்கு மேலாகிறது. பள்ளி விடுமுறை, டோரா, பாடல்கள் என்று நாட்கள் செல்கின்றன. டோராவின் நண்பர்களை (புஜ்ஜி, இசா, டீகோ, பென்னி இவர்களை எனக்கு வேறு அறிமுகப்படுத்தினாள் பப்பு!என்ன கொடுமை சரவணன் இது!!) தெரிந்து வைத்திருக்கிறாள் என்பதே எனக்கு ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம், டோராவின் ஆயாவையும் தெரிந்துவைத்திருந்தது! ஓக்கே! உல்லன் நூலைக்கொண்டு, சாயத்தில் தோய்த்து பேப்பரில் வரைய வேண்டும். இதுதான் ஆக்டிவிட்டி! சிகப்பு மற்றும் பச்சையில் பின்னர் இரண்டும் சேர்ந்தாற்போல என்று கோடுகளும், வளைந்த கோடுகளும்(!) வரைந்தாள், பப்பு.

கையில், கழுத்தில் போட்டிருப்பதைக் கண்டு அரண்டுவிட வேண்டாம். அவளது விருப்பங்களே அவையெல்லாம். ஒரு பெரிய பொட்டுக் கூட தானாக வைத்துக் கொண்டது, ஒரு பத்து கலர் டப்பாவில் கிடைக்குமே, சாந்துப் பொட்டு! (நல்லவேளை, சீக்கிரம் உடைந்தது அந்த டப்பா!)

இறுதி வடிவம்! கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காலியாகக் காட்சியளிக்கிறது இந்தப் போர்டு!
9 comments:
மாடர்ன் ஆர்ட் :)
//(நல்லவேளை, சீக்கிரம் உடைந்தது அந்த டப்பா!)//
avvvvvvv... porul odanjadhukkum sandhoshapadara ammava inga dhaan paakaren ;)))
Pappu as usual kalakkara :))))
Pappu's accessories SUPER!!
-Nithya
இதெல்லாம் மாடர்ன் ஆர்ட் மாடலில் வரைந்தது... பட்டிக்காட்டி ஆம்பூரில் இருந்து வந்த உங்களுக்கு இதெல்லாம் கோடுகளாக தெரிவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.. ;-)
பப்பு பேரவை
சவுதி அரேபியா.
மாடர்ன் ஆர்ட்ல்
கலக்குறாங்க
பப்பு பேரவை
தோஹா கத்தார்
:))
எனக்கும் அந்த கலர் கலர் சாந்து பொட்டு டப்பா ரொம்ப பிடிக்கும் :)
இந்த டோராவை ஒழிக்க எதாவது வைத்தியம் இருந்தா சொல்லுங்க, டோரா டி.வி.டி வாங்கியே நான் திவால் ஆகிவிட்டேன்
//(நல்லவேளை, சீக்கிரம் உடைந்தது அந்த டப்பா!)//
சீக்கிரம் இன்னொரு டப்பா வாங்கி கொடுங்க, இல்லனா அத நாங்க வாங்கி கொரியர் அனுப்ப வேண்டியிருக்கும்....
அதைவிட ஆச்சரியம், டோராவின் ஆயாவையும் தெரிந்துவைத்திருந்தது!
அது யாருப்பா!!!!!!!!
பப்பு நீ கலக்கும்மா........
கலக்கல்ஸ் ஆஃப் பப்பு!?? :)
Post a Comment